உங்களுடைய
தமிழ் பிளாக்ஸ்பாட்(Blogspot) தளங்களில் பல்வேறு வகையில் பதிவுகளை
அழகுப்படுத்தி நல்ல புதுமையான கருத்துகளுடன் வெளியிட்டாலும், உங்களுக்கு
மனதில் பதிவை பற்றி எப்போதும் ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதுதான்
தமிழ் எழுத்துரு பிரச்சனை. ஆங்கிலப் பதிவுகள் போல் பல வடிவ
எழுத்துருக்களைப் பயன்படுத்தி அழகாகப் பதிவு போட முடியவில்லையே என்ற
ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. படம்- 1 ல் இருப்பது தமிழ்
எழுத்துரு, படம்-2 ல் இருப்பது ஆங்கில எழுத்துரு.
ஆங்கிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் இருக்கின்றன, அவற்றை கணினியில் நிறுவியும் (Install) பயன்படுத்தலாம் அல்லது இணையதளத்தில் நிறுவியும் பயன்படுத்தலாம். கணினியில் நிறுவி பயன்படுத்தும் முறைக்கு மிசையுரு (Desktop Font) என்றும், இணையதளத்தில் நிறுவி பயன்படுத்தும் முறைக்கு இணையுரு(Web Font) என்றும் பெயர்.
இணையத்தில் ஒருவித எழுத்துரு பயன்படுத்தினால் அந்தத் தளத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதே எழுத்துருவை தங்கள் கணினியிலும் நிறுவப்பட வேண்டும். அப்படி நிறுவப்படவில்லை என்றால் எழுத்துக்கள் படம் - 3 ல் உள்ளது போல கட்டம் கட்டமாகவோ, கேள்விகுறி போன்றோ அல்லது புரியாத எழுத்திலோ தெரியும். இந்தச் சிரமத்தினால் தான் அனைத்துத் தமிழ் தளங்களும் விண்டோஸ் நிறுவனம் அதரவு (Support) கொடுக்கும் லதா(Latha) மற்றும் ஏரியல்(Arial) ஆகிய இரண்டு எழுத்துருக்களை மட்டும் பயன்படுத்துகின்றன. இவை விண்டோஸ் இயக்கக் கட்டகத்தில் (Operating System) இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளதால் கணினியில் தனியாக நிறுவவேண்டிய அவசியம் இல்லை. பார்வையாளர்களும் சிரமப்படவேண்டிய அவசியமில்லை.
சரி அப்படியென்றால் ஆங்கிலத்தளங்கள் போன்று அழகான தமிழ் எழுத்துருக்களை தமிழ் தளங்களில் குறிப்பாக பிளாக்ஸ்பாட்டுகளில் பயன்படுத்த வழியே இல்லையா? கடைசி வரைக்கும் விண்டோஸ் நிறுவனம் ஆதரிக்கும் கண்ணே கண்ணு... பொன்னே பொண்ணுன்னு இரண்டே எழுத்துருக்களை வைத்து தான் காலம் தள்ளவேண்டுமா?. என்ற எண்ணோட்டங்கள் நிச்சயம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்.
தமிழ் தளங்களும் ஆங்கிலத் தளங்களைப் போல் அழகான எழுத்துருக்களை பயன்படுத்த முதலில் நமக்கு மனம் வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு . இது இணையுரு(Web Font) எழுத்துக்கள் மூலம் சாத்தியமாகும். தமிழில் சுமார் 90 - 100 தமிழ் ஒருங்குறி(Tamil Unicode) எழுத்துருக்கள் உள்ளன. இவற்றை கணினியில் நிறுவாமல் இணையத்தில் நிறுவினால் வேண்டிய எழுத்துருக்களை பதிவுடன் சேர்த்து மேலும் பதிவை அழகுபடுத்தி வெளியிடலாம். இதனால் பார்வையாளர்கள் எவ்வித சிரமத்திற்கும் உள்ளாகாமல் உங்களுடைய தளத்தை எளிதாகப் பார்க்கமுடியும். தமிழ் இணையுரு எழுத்துக்களைப் படம் - 4 கை பாருங்கள்.
தமிழ் இணையத் தளங்கள் சில அழகான இணையுரு (Web Font ) எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகின்றன. எப்போதும் பதியும் அதே பாணியில் இனையுரு எழுத்துக்கள் கொண்டு பதியும் பதிவுகளைப் பார்க்கும் போது நமக்கு அப்பதிவின் அழகான தோற்றத்தால் பதிவில் எதாவது ஒரு பின்னூட்டமாவது போடவேண்டும் என்ற ஆவல் உண்டாவது இயற்கை. இதுபோன்ற தளங்களைப் பார்க்கும்போது 'ஆள்பாதி ஆடைபாதி' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. உண்மைதான் பதிவுகளை அழகாகக் காண்பிக்கும் தளங்கள் தான் அதிகப் பார்வையாளர்களைப் பெறுகிறது. தமிழ் இணைய எழுத்துருக்களை பயன்படுத்தும் சில தளங்கள் இதோ - என் பார்வையில் சிக்கியது.
http://www.bbc.co.uk/tamil/
http://poocharam.net/
http://www.dinakaran.com/
http://puthutamilan.blogspot.in/
http://www.manithan.com/
மேலே பட்டியலிட்ட தளங்கள் போன்று உங்களுடைய பிளாக்ஸ்பாட்டில் இணையுருக்களை(Web Font) இணைத்து பதிவுகளை வேண்டுமா?. இதோ தமிழ் தளங்களில் முதன்முறையாக உங்களுடைய பிளாக்ஸ்பாட்டிற்கான இணையுரு(Web Font) ஆதரவை பூச்சரம் வழங்குகிறது என பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். பூச்சரத்தின் நோக்கமே தமிழை அழகுபடுத்தி தமிழ் கணிமையை மேம்படுத்துவது தான். இந்த இணையுரு ஆதரவு மூலம் நீங்கள் சுமார் 90 வகையான தமிழ் எழுத்துருக்களை உங்கள் பிளாக்ஸ்பாட்டில் இணைத்து தளத்தை அழகுறச்செய்யலாம்.
இதோ அந்த எழுத்துருக்கள் உங்கள் பார்வைக்கு.
சரி நீங்கள் இணையுருக்களை உங்கள் பிளாக்ஸ்பாட்டில் இணைக்கத் தயாரா? இதோ வழிமுறைகளை சொல்கிறேன்.
1) முதலில் படம்-5 காட்டியுள்ளபடி பிளாக்ஸ்பாட்டில் புகுபதி செய்துகொள்ளுங்கள்.
2) உங்கள் பிளாக்ஸ்பாட்டை (படம்-6) சொடுக்குங்கள் (Click Here)
3) பக்கத்தின் இடது கிழே இருக்கும் (படம்-7) TEMPLATE என்ற உகப்பை(Option) சொடுக்கவும்.
4) அடுத்து EDIT HTML என்ற(படம்-8) உகப்பை(Option) சொடுக்கவும்.
5) இப்போது பெட்டிபோன்ற ஒரு கட்டத்தில் உங்கள் பிளாக்ஸ்பாட்டின் நிரல் மூலம் (Source Code) HTML வடிவில் படம்-9 ல் உள்ளது போல் தெரியும்.
இந்த HTML நிரல் மூலத்தை (Source Code) எதாவது மாற்றலாம் என மாற்றவேண்டாம். அப்படித் தெரியாமல் மாற்றினால் உங்களுடைய பிளாக்ஸ்பாட் இயங்காமல் போய்விடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் இதில் நான் கூறும் மாற்றங்களை செய்வதற்கு முன் நிரல் மூலத்தை (Source Code) ஒரு நகல் எடுத்து சேமித்து வைத்துகொள்வது நல்லது. படம்-10 ஐ பாருங்கள்.
சரி இப்போது உங்களுடைய பிளாக் ஸ்பாட் நிரல் மூலத்தை எடுவு (Edit) செய்வோம்.
6) நிரல் மூலத்தில் <head> என்ற வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும். அந்த வாக்கியம் உள்ள வரிக்கு அடுத்த வரியில் கீழ்க்கண்ட வரியை ஒட்டவும் (Paste).
<link href='https://dl.dropboxusercontent.com/u/38956832/poocharamfont.css' rel='stylesheet' type='text/css'/>
7) இப்போது உங்கள் வலைப்பூவின் ஒவ்வொரு DIV வின் எழுத்துருவை மாற்றவேண்டும். முதலில் post-body என்ற DIV வின் எழுத்துருவை மாற்றுவோம்.
.post-body { என்ற வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும். அந்த வாக்கியம் உள்ள வரிக்கு அடுத்த வரியில் கீழ்க்கண்ட வரியை ஒட்டவும்.
font-family:DroidSansReg,Arial;
(குறிப்பு : ஏற்கனவே font-family:XXXXXXXXXX என்ற வரி இருந்தால் XXXXXXXXXX பதில் DroidSansReg,Arial; என மாற்றவும்)
உதாரணம்:
மாற்றங்கள் செய்த பின்பு Save Template என்ற Button -ஐ அழுத்தி மாற்றங்களை சேமியுங்கள். இப்போது உங்கள் பிளாக்ஸ்பாட்டை புதுபித்து(Refresh) பாருங்கள் பதிவின் எழுத்துருக்கள் மாறி இருப்பதைக் காண முடியும்.
மற்ற DIV களின் மாற்றங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
படம்-2

படம்-3

படம்-4

எழுத்துரு பெயர் : சுந்தரம்-1
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-2
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-3
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-4
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-5
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-7
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-8
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுந்தரம்-10
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : பட்டினத்தார் - பருவு (Pattinathaar Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சந்திர - பருவு (Chandra Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : ட்ரயோடு சான்ஸ் இயல்பு (Droid Sans Regular)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : ட்ரயோடு சான்ஸ் பருவு (Droid Sans Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : கார்ல சாய்வு இயல்பு (Karla Inclined Regular)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : கார்ல சாய்ப்பருவு (Karla Inclined Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : கார்ல நேர் பருவு (Karla Upright Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : கார்ல நேர் இயல்பு (Karla Upright Regular)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : லோஹித் இயல்பு (Lohit Regular)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் பருவு (Noto Sans Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் இயல்பு (Noto Sans Regular)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் நேர் இயல்பு (Noto Sans Upright Regular)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் நேர் பருவு (Noto Sans Upright Bold)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : சுமன் (Suman)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
எழுத்துரு பெயர் : தினகரன் (Dinakaran)
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
வலைப்பூவில் இணையுரு சேர்க்கும் முறை
சரி நீங்கள் இணையுருக்களை உங்கள் பிளாக்ஸ்பாட்டில் இணைக்கத் தயாரா? இதோ வழிமுறைகளை சொல்கிறேன்.
1) முதலில் படம்-5 காட்டியுள்ளபடி பிளாக்ஸ்பாட்டில் புகுபதி செய்துகொள்ளுங்கள்.
படம்-5
2) உங்கள் பிளாக்ஸ்பாட்டை (படம்-6) சொடுக்குங்கள் (Click Here)
படம்-6
3) பக்கத்தின் இடது கிழே இருக்கும் (படம்-7) TEMPLATE என்ற உகப்பை(Option) சொடுக்கவும்.
படம்-7
4) அடுத்து EDIT HTML என்ற(படம்-8) உகப்பை(Option) சொடுக்கவும்.
படம்-8
5) இப்போது பெட்டிபோன்ற ஒரு கட்டத்தில் உங்கள் பிளாக்ஸ்பாட்டின் நிரல் மூலம் (Source Code) HTML வடிவில் படம்-9 ல் உள்ளது போல் தெரியும்.
படம்-9
இந்த HTML நிரல் மூலத்தை (Source Code) எதாவது மாற்றலாம் என மாற்றவேண்டாம். அப்படித் தெரியாமல் மாற்றினால் உங்களுடைய பிளாக்ஸ்பாட் இயங்காமல் போய்விடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் இதில் நான் கூறும் மாற்றங்களை செய்வதற்கு முன் நிரல் மூலத்தை (Source Code) ஒரு நகல் எடுத்து சேமித்து வைத்துகொள்வது நல்லது. படம்-10 ஐ பாருங்கள்.
படம்-10
சரி இப்போது உங்களுடைய பிளாக் ஸ்பாட் நிரல் மூலத்தை எடுவு (Edit) செய்வோம்.
6) நிரல் மூலத்தில் <head> என்ற வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும். அந்த வாக்கியம் உள்ள வரிக்கு அடுத்த வரியில் கீழ்க்கண்ட வரியை ஒட்டவும் (Paste).
<link href='https://dl.dropboxusercontent.com/u/38956832/poocharamfont.css' rel='stylesheet' type='text/css'/>
7) இப்போது உங்கள் வலைப்பூவின் ஒவ்வொரு DIV வின் எழுத்துருவை மாற்றவேண்டும். முதலில் post-body என்ற DIV வின் எழுத்துருவை மாற்றுவோம்.
.post-body { என்ற வாக்கியத்தைக் கண்டுபிடிக்கவும். அந்த வாக்கியம் உள்ள வரிக்கு அடுத்த வரியில் கீழ்க்கண்ட வரியை ஒட்டவும்.
font-family:DroidSansReg,Arial;
(குறிப்பு : ஏற்கனவே font-family:XXXXXXXXXX என்ற வரி இருந்தால் XXXXXXXXXX பதில் DroidSansReg,Arial; என மாற்றவும்)
உதாரணம்:
- .post-body {
line-height: 1.4;
font-size: 110%;
position: relative;
font-family:DroidSansReg,Arial;
}
மாற்றங்கள் செய்த பின்பு Save Template என்ற Button -ஐ அழுத்தி மாற்றங்களை சேமியுங்கள். இப்போது உங்கள் பிளாக்ஸ்பாட்டை புதுபித்து(Refresh) பாருங்கள் பதிவின் எழுத்துருக்கள் மாறி இருப்பதைக் காண முடியும்.
மற்ற DIV களின் மாற்றங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக