செவ்வாய், 24 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (இறுதி பாகம்)

சென்ற இரண்டு பதிவுகளில் இந்தி மொழியின் வரலாறு அதன் தோற்றம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இந்தி மொழியில் நூல்கள் பிறந்த வரலாறு, இந்தி பற்றி நடுவண் அரசு பரப்பும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் பார்ப்போம்.

இந்தியில் நூல்கள்
இப்படிப்பட்ட கலவை மொழி இந்தியில் எவ்வாறு நூல்கள் இயற்றப்பட்டது என்ற வரலாற்றை பார்ப்போம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'இராமனந்தர்' எனும் துறவி இராமனை மக்கள் வழிபடவேண்டும் என வடநாட்டின் பல பகுதிகளில் பரப்புரை செய்து அப்பகுதிகளில் இராமன் புகழை பரவச்செய்தார். கல்வியறிவு இல்லாத அம்மக்களுக்கு இராமன் தன் தந்தை இட்ட கட்டளையால் அரசு துறந்து, கானகம் சென்று அங்கு தன் மனைவியை இழந்து அடைத்த துயரம், அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. இந்த மனவேதனையே இராமன் புகழ் அப்பகுதிகளில் வேகமாக பரவ காரணமாக அமைந்தது. மேலும் இராமனந்தர் அப்பகுதி மக்கள் பேசும் மொழி வழியாக இராமன் நாமத்தை பரப்பும் பொருட்டு இராமனை பற்றி எழுதிய நூல் தான் இந்தி மொழியில் இயற்றப்பட்ட முதல் நூல். அந்நூலின் பெயர் 'ஆதிகிரந்தம்' என அழைக்கப்படுகிறது.

வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -2)


இதுவரை உருது எனும் மொழி உருவான வரலாற்றை சிறிது பார்த்தோம். இந்தியை பற்றி சொல்வதாக நினைத்தால் என்ன இது உருதை பற்றி சொல்கிறேன் என எண்ணவேண்டாம், விசயம் இருக்கிறது. இந்த உருதுமொழியில் இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, 'ல்ல்லு ஜிலால்' என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப் பிரித்துச் சீர் செய்யப்பட்ட மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில் சம்ஸ்கிருத சொற்களை இணைத்து இந்தி எனும் புதிய மொழியொன்றை தோற்றுவித்தார். இதனால் இந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது. வடமொழிச்சொற்களை சேர்த்துக்கொணடதால் இந்தி வடமொழியில் இருந்து உருவானது என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர். இந்தி எனும் மொழி உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி. உண்மையில் இந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும், பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி எவ்வாறு நம்நாட்டு மொழியாகும். இதனுடைய வயது வெறும் 830 ஆண்டுகள் தான். மேலும் இந்தி இந்துக்களின் சமயமொழி போல் சித்தரிக்கப்படுவது நமக்கு நகைப்பை தான் வரவழைக்கிறது. மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய இந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதிற்க்கும் இந்தி மொழிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு மொழிகளுக்கு ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது இந்தியில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்து முறை 'தேவநகரி', உருது மொழியில் எழுத பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.

வியாழன், 19 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -1)


நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு பொய்யை முதல் முறையாக கேட்கும் போது அது பொய் என்பதை நாம் அடித்து சொல்லுவோம். அதே பொய்யை நம் காதில் அடிக்கடி விழும்படி யாரேனும் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒருநாள் நாம் அந்த பொய்யை உண்மையென சொல்லுவோம். இதே உத்தியை தான் மைய அரசு இந்தி திணிப்பு விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது. ஆரம்பத்தில் மைய அரசு இந்தியை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் பயிலவேண்டும் என சொன்னபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு, போராட்டம் போன்றவை பார்த்து அரசு பணிந்து தனது இந்தி திணிப்பு பாதையை மாற்றிகொண்டது. அதாவது நான் மேலே சொன்னது போல் ஒரு இந்தி விசயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது என்றாவது ஒரு நாள் நாம் சொல்லும் விசயத்தை தமிழ்நாடு நிச்சயம் கேட்கும் என நம்பிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இந்தி தேசிய மொழி, படித்தால் உலகத்தை சுற்றலாம், இந்தியாவை சுற்றலாம், வேலைகிடைக்கும் என  பொய் பரப்புரையை பலமாக நம் காதில் சொல்லி சொல்லியே இப்போது வெற்றியும் கண்டுள்ளது. 'எறும்பு ஊர கல்லும் தேயும்' எனும் பொன்மொழி இந்தி விசயத்தில் உண்மையென நிருபிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 ஜூன், 2014

நீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களையும் உசாரா இருக்க சொல்லுங்க!


Image

"ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகாரர்களுக்கு இருக்கத்தான் செய்வார்கள்" என்பதை போல மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கென்றே திருடர் கூட்டம் ஒன்று தமிழ் நாட்டின் பல இடங்களில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பேசுவதை கேட்டால் குறிப்பாக இளைஞர்களும், சிறுவர்களும், இல்லாத்தரசிகளும், படிக்காத பாமர மக்களும் ஏமாறுவது உறுதி.

ஞாயிறு, 8 ஜூன், 2014

ரெண்டுங்கெட்டான் நிலையில் தமிழன்



திருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டு வந்தனர். அதை நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஒருவர் அவருடைய நண்பரிடம் கேட்கிறார்....

"பாஸு  ஓட்டல்களில் ஏன் சாப்பாட்டை ஒழுங்க வேக வைக்காம அரிசி அரிசியா போடுறாங்க தெரியுமா?" என்றார்.

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...