சொல்லாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்லாய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 மார்ச், 2016

மேகம் எனும் சொல் எவ்வாறு பிறந்தது?



தமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன.

அவை

அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, கங்கைதூவி, கதம்பம், கந்தரம், கமஞ்சூல், கம், கரு, கார், காளிகம், குயின், குயில், கொண்டல், கொண்மூ, சலதம், சீதம், செல், சோனம், தாராதரம், தையல், தோயதரம், நாகம், நீகம், நீரதம், பயோதம், பயோதரம், பரிசன்னியம், பருச்சனியம், பாட்டம், பாரணம், புதம், புயல், பெயல், பே, பேகம், பேசகம், மகாநாதம், மங்குல், மஞ்சு, மாகம், மாசி, மாசு, மாரி, மிகிரம், முகில், முதிரம், மெய்ப்பிரம், வனமுதம், வானம், வான், வாரிதம், வாரிநாதம், வாரிவாகம், வார், விசும்பு, விண், விண்டு, வெள்ளைநோய்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

Wind - விண்டு என்பது தமிழ் சொல்லே



ஆங்கிலத்தில் Wind என்பதற்கான பொருள் - Wind is the flow of gases on a large scale, அதாவது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிப்பதாகும்.

துப்பாக்கி மற்றும் பீரங்கி தமிழ்ச்சொற்களே



துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.

சனி, 20 ஜூன், 2015

வெங்காயம் என்ற சொல் உருவான விதம்




தமிழ் இலக்கியங்கள் வெங்காயத்தை குதம், நீருள்ளி, பூவண்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.  

இந்த வெங்காயம் என்ற சொல்லை பண்டைய தமிழன் எப்படி உருவாக்கினான் என்பதைப் பார்ப்பதற்கு முன், வெங்காயத்தைக் குறிக்கும் எந்த சொற்களும் தமிழில் இல்லை என வைத்துக்கொள்வோம். வெங்காயம் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் புதிது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போதுள்ள தமிழர்களிடம் இந்தப் பொருளுக்குப் பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பார்கள்? 

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் முயற்சி செய்யுங்கள். 

கண்ணீர் கிழங்கு என்று வைக்கலாமா?
உறி கிழங்கு என்று வைக்கலாமா?

தோல் கிழங்கு என்று வைக்கலாமா?
வேறு என்ன பெயர்கள் வைக்கலாம்?  

மிக மிகக் கடினமான ஒன்று தானே. நாம் இப்படித் தான் தமிழில் பல பொருட்களுக்கு தமிழில் புதிதாக பெயர்களை வைத்து வருகிறோம். இதனால் தமிழ் உயர்வு பெறுகிறது என்று சொல்லிச் சொல்லி தமிழை தாழ்த்தி வருகிறோம். தமிழின் சுவையில் உப்பை அள்ளி கொட்டுகிறோம்.

சரி வெங்காயம் என்ற சொல் எப்படி உருவானது? 

மிகவும் சுலபம். நம்மைப் போலப் படைய தமிழன் மிகவும் கடினப்பட்டு பெயர் வைக்கவில்லை. அதன் பயனை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைத்துள்ளான்.

எப்படி? 

வெங்காயம் உடம்பில் உள்ள சூட்டை தணிப்பதில் எல்லாக் காய்கறி வகைகளிலும் முதன்மை வைக்கிறது. 

சூடு என்பதற்கு காயம் (Heat) என்ற இன்னொரு பெயர் உண்டு. 

அதேபோல் வென்(அ) வெண் என்றால் வெல்லுதல் (Victory) என்ற பொருள்.

வென் + காயம் = வென்காயம் (அ) வெண்காயம் > வெங்காயம் சூட்டை வெல்லும் இந்தப் பொருளுக்கு வெங்காயம் என்ற பெயர் வைக்கப்பட்டது. 

இது தான் தற்காலச் சொல்லாக்க முறைக்கும் அக்காலச் சொல்லாக்க முறைக்கும் உள்ள மிகபெரிய வேறுபாடு.

திங்கள், 10 மார்ச், 2014

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-3

Image


நாம் இதுவரை ஆட்டி என்ற பின்னொட்டை கொண்டு உருவான சொற்களைப் பார்த்தோம். சொற்கள் உருவாகியுள்ள விதத்தைப் பாருங்கள். எந்தச் சொல்லுமே அப்பொருளை முழுமையாகக் குறிக்கும்படி உருவாக்கப்படவில்லை, அது அவசியமும் இல்லை. இரண்டு அல்லது மூன்று வேர்ச் சொற்கள் பொருளை உணர்த்தும் அல்லது சுட்டும் விதமாகவே இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. பாட்டி என்ற சொல்லில் அப்பா + பெண் என்ற இரு வேர்ச் சொற்களும், அப்பொருளை சுட்டும் (Hint) விதமாகவே அமைந்துள்ளன. இதே சொல்லை தற்காலத்தில் உருவாக்குவதாக வைத்துகொண்டால் என்ன செய்திருப்போம் "தந்தையம்மா" என்று தான் வைத்திருப்போம்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-2



பகுதி-1 பிணியம் (Link) http://puthutamilan.blogspot.in/2014/03/1.html

வ.எண்சொல்பகுப்புவிளக்கம்எதிர்பால்
(ஆண்பால் அல்லது பெண்பால்)
கூடுதல்
19தருமவாட்டிதருமம்
+ ஆட்டி
தருமம் செய்யும் பெண்.
(Dharma women ,தருமவதி)
தருமவாளன்
20நுதனாட்டிநுதனம் + ஆட்டிநுதனமான
(புத்திசாலியான) பெண்(intelligent women )
என்று பொருள்.


21பசியாட்டிபசி + ஆட்டிபசியால் வாடும் பெண். (Hungry woman)

22பனுவலாட்டிபனுவல்(நூல்) + ஆட்டிநூலை கொண்ட பெண் அதாவது சரசுவதியை குறிக்கும் சொல்.(Sarasvati ,
as Goddess of sciences)


23பெரியபிராட்டிபெரிய + பிர
+ ஆட்டி
இந்த சொல் இலட்சுமி
தேவியை குறிப்பதாகும்.
(Lakshmi , as chief consort of Vishnu)


24பெருமாட்டிபெருமை + ஆட்டிபெருமைகள்
கொண்ட பெண்.(Lady, mistress, princess)
பெருமான்
25பொருள்விலையாட்டிபொருள்+
விலை+ஆட்டி
விலைமாது
(Prostitute) என்று பொருள்.
பொருளைப்போல்
விலைகொடுத்து வாங்குவது போல்
பெண்ணையும் விலைகொடுத்து
அக்காலத்தில் வாங்கியதால்
இந்த சொல் உருவானது.


26பொறையாட்டிபொறுமை + ஆட்டி பொறுமை குணம்
கொண்ட பெண் அல்லது
பொறுமையுள்ளவள் என்று
பொருள். (Patient woman).


27கடவுட்பொறையாட்டிகடவுள் + பொறுமை
+ ஆட்டி
வாக்கு சொல்லும்
பெண் அல்லது தேவராட்டி
(Woman having oracular powers under divine inspiration heaviness) என்று பொருள்.


28மகவாட்டிமகவு (குழந்தை
செல்வங்கள்) + ஆட்டி
குழந்தை செல்வங்கள்
கொண்ட பெண் என்று பொருள்.(Woman
blessed with children)

குழந்தை பெறும்
பாக்கியம் இல்லாத பெண்ணை
மலடி என்று அழைப்பதை
நினைவுப்படுத்துகிறேன்.
29மருமாட்டிமரு + ஆட்டிமருமகள் என்று
பொருள்(Female descendant).


30மலையாட்டிமலை + ஆட்டிமலைநாட்டு பெண் என்று பொருள் (Woman of the mountainous region)மலையான்
31மனையாட்டிமனை (வீடு,
இல்லம் ) + ஆட்டி
மனையை ஆளும் பெண்
(மனைவி) அல்லது இல்லத்துணையாள் என்று பொருள்.
மனையாளன்
32மாற்றாட்டிமாற்று + ஆட்டிமாற்று பெண் என்று பொருள். அதாவது சித்தி அல்லது சின்னம்மாள், மாற்றாள் (Stepmother) என்றும் சொல்லலாம்.மாற்றான்
33முப்பாட்டிமுன் + அப்பா(பா) +
ஆட்டி
முதல் பாட்டி (Grandfather's
grandmother) என்று பொருள்.
முப்பாட்டன்
34மூதாட்டிமூத்த + ஆட்டிமூத்த பெண், அதாவது வயதான பெண்( Aged woman) என பொருள்.மூதாளன்
35வடமொழியாட்டிவடமொழி + ஆட்டி
அல்லது பார்ப்பனி
வடமொழி பேசும் பெண் அல்லது பார்ப்பனி(Brahmin
woman) என்று பொருள்.


36வாழ்வாட்டிவாழும் + ஆட்டிகுடும்பமாக, எவ்வித குறையுமின்றி
நல்லபடியாக வாழும் பெண்.


37வாழாவாட்டிவாழா + ஆட்டிகணவனுடன் வாழாமல் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் பெண் (Married woman not living with her husband)
வாழாவாட்டி
தான் வாழாவெட்டி என்று
மருவி தற்போது பேச்சு
வழக்கில் உள்ளது.
38விலையாட்டிவிலை+ ஆட்டிபொருளை விற்கும் பெண் (Tradeswoman) என்று பொருள்.விலையாளன்
39வினையாட்டிவினை(செயல், ஏவல்)
+ ஆட்டி
வேலை செய்யும்
பெண் (Female servant)
என்று பொருள்.
வினையாளன்
40வெள்ளாட்டிவெள்ளாமை (வேளாண்)
+ ஆட்டி
வேளாண் தொழிலை
மேற்கொள்ளும் பெண். (வேளாண்மாந்தர்)
வெள்ளாளன்
41வேளாட்டிவேளாண் + ஆட்டி வேளாண் தொழிலை மேற்கொள்ளும் பெண். (வேளாண்மாந்தர்) வேளாளன் (agriculturist)
42அகவாட்டிஅகம்(இல்லம்) +
ஆட்டி
இல்லத்து பெண் (மனைவி-Wife)
என்று பொருள்.
அகவாளன்
43அடியாட்டிஅடிமை + ஆட்டிஅடிமை பெண் அல்லது வேலைக்கார பெண்
(Woman servant)
அடியான்
44அந்தணாட்டிஅந்தணம் + ஆட்டிஅந்தண பெண் அதாவது பார்ப்பனி ( Brahmin woman)
பெண்ணை குறிக்கிறது.
அந்தணாளன்
45இல்லாவாட்டிஇல்லாமை + ஆட்டிபொருள் (செல்வம்) இல்லாத பெண் அதாவது
வறியவள் (Destitute woman)
என்று பொருள்.


46கண்வாட்டிகண் + ஆட்டிகணவனின் கண்ணில் இருக்கும் பெண் (wife), அதாவது மனைவி என்று பொருள்.கண்வாளன்
47தாட்டிதாடு (வலிமை, Strength)
+ ஆட்டி
கெட்டிக்கார அல்லது
திறன்வாய்ந்த பெண் (Clever woman) என்று பொருள்.


48சுத்தவாட்டிசுத்த + ஆட்டிசுத்தமான பெண் அல்லது தூயவள் (Pure, spotless woman) என்று பொருள்.

49பூமிபிராட்டிபூமி + பிர
+ ஆட்டி
பூமித்தாய் அல்லது பூமிமகள் என்று பொருள்

50அயலிலாட்டிஅயல் + இல்
+ ஆட்டி
அடுத்த வீட்டு பெண் என
பொருள் (Woman of the
next house; அடுத்த வீட்டு மாது)


51கண்ணொடையாட்டிகள் + நொடை(விலை)
+ ஆட்டி.
கள்ளை விற்கும்
பெண் அல்லது கள்விற்பவள் என
பொருள் (Female toddy seller)


52கோமாட்டிகோ(உயர்ந்த,
சக்கரவர்த்தி, அரசன்) + ஆட்டி
உயர்வான
பெண் அல்லது கோமகள்
என்று பொருள்.


53சூராட்டிசூரம்(வீரம்) + ஆட்டிவீரமான பெண் என்று பொருள். (Valour, bravery, heroism lady)

54இராசாட்டிஅரசு + ஆட்டிஅரசு பெண் அதாவது இராணியை(Queen)
குறிக்கிறது.

இராசாத்தி என்பது இராசாட்டி என்ற சொல்லின் மருவல்
55சாணாட்டிசாணர் + ஆட்டி சாணர் சாதி பெண் என்று பொருள்.(Woman of the Shanar caste; சாணாரப்பெண்).
சாணாத்தி என்பது
சாணாட்டி என்ற சொல்லின் மருவல்
56செம்மறிசெம்மை(சிகப்பு - Redness)
+ மறி (ஆடு)
சிகப்பு நிற ஆடு என்று
பொருள்.(Young of shee)


57செம்மாட்டிசெம்மறி + ஆட்டி ஆட்டை மேய்க்கும்
பெண் அதாவது சக்கிலிய
சாதிப்பெண் (Woman of the
shoemaker caste)
செம்மான்
(சக்கிலியன்)
செம்மாத்தி என்பது
செம்மாட்டி என்ற சொல்லின் மருவல்
58வண்ணாட்டி வண்ணாரம் + ஆட்டிதுணிகளை வெளுத்து அழுக்கு நீக்கி வேலை செய்து கொடுக்கும் பெண் (Washer women) வண்ணத்தான் வண்ணாத்தி என்பது வண்ணாட்டி என்ற
சொல்லின் மருவல்
59அம்மாட்டி அம்மா + ஆட்டி(பெண்)அம்மாவின் அம்மா அதாவது அம்மாவின்
தாய்(grandmother) என்று
பொருள்.

அம்மாச்சி என்பது
அம்மாட்டி என்ற சொல்லின் மருவல்
60அப்பாட்டிஅப்பா + ஆட்டி அப்பாவின் அம்மாவை அதாவது அப்பாத்தா என்று பொருள்
அப்பாச்சி என்பது அப்பாட்டி என்ற சொல்லின் மருவல்.மேலும் அப்பாச்சி என்ற சொல் திரிந்து தற்காலத்தில் அப்புச்சி என்று வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது அம்மாச்சி என்ற
பெண்பால் சொல்லுக்கு
நிகரான ஆண்பால்
சொல்லாகும். மேலும்
இச்சொல் அப்பாவின்
அம்மா அதாவது அம்மாச்சியை
தான் குறிக்கிறது. வழக்கில்
வந்துவிட்ட இச்சொல்லை
தவறு என சொல்லாமல்
அப்படியே விட்டுவிடலாம்.
61பேராட்டிபெருமை + ஆட்டிபெருமையுடைய
பெண் ( பெருமையுடையவள்,
Lady of eminence) என்று பொருள் .
பேராளன்
62எசமாட்டிஎசம் (நரம்பு) + ஆட்டி(பெண்)செயலுக்கு
நரம்பு போன்று மூலமாக இருப்பவள், குடும்பத்தலைவி என்று பொருள்.
எசமான்
63இறைமையாட்டிஇறைமை + ஆட்டிஇறைமை கொண்ட
பெண்( mistress) என்று பொருள் .


64கற்புடையாட்டிகற்பு + உடைய
+ ஆட்டி
கற்புடைய பெண் (virtuous or faithful wife) என்று பொருள்.

65பேயாட்டிபேய் + ஆட்டிபேயை போன்ற இயல்புடைய பெண் என்று பொருள்.(One
who makes a person possessed and causes him to utter oracles)


66அணங்குடையாட்டிஅணங்கு(தெய்வம்)
+ உடைய + ஆட்டி
தெய்வத்தன்மை
கொண்ட பெண் (A woman divinely inspired and having oracular powers) என்று பொருள்.



நன்றி-பூச்சரம்.நெட்
http://poocharam.net/viewtopic.php?f=54&t=771&p=2753#p2753

தொடரும்...

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-1


 தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கு முன், இருக்கும் சொற்களின் சொல்லாக்க நுட்பத்தை பகுந்து அறிந்துக்கொண்டால் சிறப்பான முறையில் சொற்களை உருவாக்க முடியும். அதன்படி தமிழ் சொல்லாக்க முறைகளில் ஒன்றான பின்னொட்டு நுட்பத்தை கொண்டு உருவாக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களைப்பற்றி பார்போம். நுட்பங்களை ஆராய்வதோடு மட்டுமின்றி அதே நுட்பத்தை அடிப்படையாக கொண்டு புது சொற்களையும் படைப்போம்.   பலரும் ஆங்கில மொழி சொற்களில் வரும் பின்னொட்டை போன்றே தமிழிலும் பின்னொட்டு மற்றும் முன்னொட்டு கொண்டு புதிய சொற்களை உருவாக்குகின்றனர். இது ஒரு தவறான முன்னூதாரணமாகும். அவர்களுக்காகவே இந்த பதிவு என்று கூட சொல்லலாம்.

பின்னொட்டு (Suffix) என்பது ஒரு வேர் சொல்லின் பின் இன்னொரு சொல்லை இணைத்து புதிய சொல்லை உருவாக்குவதாகும். இதை "விகுதி" என்றும் அழைப்பதுண்டு. ஒவ்வொரு பின்னொட்டுக்களுக்கும் ஒரு பொருள் உண்டு. பொதுவாக ஏதேனும் ஒரு வேர்ச்சொல்லுடன் பின்னொட்டுகள் இணைக்கப்பட்டு வேர்ச்சொல்லின் பொருளிலிருந்து மாறுபட்ட புதிய சொல் உருவாக்கப்படுகிறது. இந்த முறையில் தமிழ் சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...