Scooter – துள்ளுந்து
Motor bike - உந்துருளி – உந்துவளை
AutoRickshaw –மூவுருளி உந்து
Van – கூடுந்து சிற்றுந்து
Pickup Truck – பொதியுந்து
Jeep - கடுவுந்து - வல்லுந்து
SUV(Sports Utility vehicle) பெருங்கடுவுந்து
Lorry / Truck – சுமையுந்து – சரக்குந்து
Ambulance - திரிஊர்தி
Motor vehicle – தானுந்து
Train – தொடருந்து தொடர்வண்டி புகைரதம்.
Fighter Jet – போர் விமானம், போர் வானுருத்தி.
Helicopter – உலங்கு வானூர்தி
Boat – படகு. தோனி
Bus – பேருந்து
Ship – கப்பல், நாவாய்.
மேலே உள்ள சொற்கள் சில வாரங்களுக்கு முன்பு இணையதளம் ஒன்றில் வாகனங்களுக்கான தூய தமிழ் சொற்கள் என பிரசுரிக்கப்பட்டவை. இவற்றில் குறுக்கே அடிக்கப்பட்ட சொற்களை பாருங்கள், தமிழுக்கு நல்லது செய்கின்றோம், தமிழை வளர்கிறோம் என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு தமிழைப் படுகொலை செய்துள்ளனர். இவர்களைப் போன்றே இணையத்தில் ஆங்காங்கே தனக்குத் தெரிந்த இரண்டு மூன்று சொற்களை இணைத்து, இந்த ஆங்கிலச்சொற்களுக்கு இணையான புதிய தமிழ்ச்சொல் இது என நிறைய பேர் எழுதி வருகின்றனர். இவர்கள் முதலில் இதுபோன்ற சொல்லாக்கங்களை நிறுத்தினாலே தமிழ் பிழைத்துவிடும். புதிய சொற்களை உருவாக்குங்கள் வரவேற்கிறோம், அதற்கு முன் சொல் என்றால் என்ன? சொற்றொடர் என்றால் என்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு (What is word? & What is a sentence?) செய்யுங்கள்.