புதன், 13 நவம்பர், 2013

தமிழனின் எல்லைகள் பெரியது மனமோ சிறியது



நிலைபெற் றோங்குந் தமிழகத்
தாறறி வுடைமைப் பேறுறுமக்கள்
முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி
இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் லொவிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம்
கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி
பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்
- நூல் கர்ணாமிர்த சாகரங்
தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவன் கால்பதிக்காத நாடுகள் இல்லை, கால்பதிக்காத துறைகள் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நம்மில் பெரும்பான்மையானோருக்கு தமிழ்நாடு என்ற என்ற வட்டத்தை தாண்டி உலகின் மற்ற பாகங்களில் வாழும்  நம் இனத்தவர் பற்றிய வரலாறுகள், அன்றாட நிகழ்வுகள், செய்திகள் என எதாவது தெரியுமா? என்றால் நிச்சயம் தெரியாது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்டு சொன்னால் இவற்றை நம்மிடம் கொண்டுவர வேண்டிய ஊடகத்துறை தன் கடமை மறந்து செயல்படுவதை தான் சொல்லமுடியும். எப்படி இவர்களை குற்றம் சொல்வது சரியா? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நாமே தெரிந்து கொள்ளாமல் மற்றவர்களை குறை சொல்வது சரியா என்று என்று நினைக்க தான் தோன்றும். 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-5)




சொல் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நம்மிடம் நிலவினாலும் அடிப்படையில் சொல் என்பது ஒலிகளைச் சார்ந்தது. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே 'பேச்சு' என்றும் 'சொல்' என்றும் குறிப்பிடுகிறோம். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. சொற்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு விளக்கம் .

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-4)


கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அதை கலையிலக்கியங்களுக்கு பயன்படுத்த முடியாமலாகும். - எழுத்தாளர் ஜெயமோகன்

நம்மில் பலர் கார், பஸ், லாரி, போலீஸ், சினிமா, போட்டோ, பைக், மோட்டார், வக்கில், டாக்டர் இதுபோன்ற ஆங்கிலச்  சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்தினால் என்ன தவறு என்றும், ஆங்கிலமும் இதுபோல் பல மொழிகளிடமிருந்து சொற்களை உள்வாங்கி வளர்ந்த மொழி தானே என்றும் கேட்பதுண்டு. இப்படியொரு கருத்தை நாம் கேட்க உண்மையில் வெட்கப்பட வேண்டும். ஆங்கிலம் ஒன்றும் தமிழுக்கு ஆசான் அல்லவே. 

ஆனாலும் தற்போது நிலைமை அவர்கள் கேட்டது போலத்தான் உள்ளது. மிஞ்சிப் போனால் ஒரு 5 ஆயிரம் தமிழ்ச்சொற்களை மட்டுமே நாம் வழக்கில் பயன்படுத்துகிறோம், மற்ற சொற்கள் அனைத்துமே ஆங்கிலச் சொற்கள் மயமாக உள்ளது. இதனால் தமிழ் வளர்ந்து விட்டதா என்ன? அழிந்து தான் வருகிறது. சுத்தமான பாலில் ஒரு துளி நீர்ப்பட்டால் ஒன்றுமில்லை, ஆனால் ஓராயிரம் நீர்த்துளி பட்டால் என்னவாகும்? பாலின் சுவை மாறிவிடும். அதுபோல் தான் ஒவ்வொரு மொழியும், பால் எனும் ஒரு மொழியில் நீர் எனும் வேற்று மொழி சொற்கள் கலக்கும் போது அந்த மொழியின் சுவை குறைந்து கடைசியில் ஒரு காலகட்டத்தில் அம்மொழி கெட்டுவிடும் அல்லது அழிந்துவிடும்.

சனி, 5 அக்டோபர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)



 இணையத்தில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். அதில் கேட்கப்படும் கேள்விகள் உண்மையில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிச் சற்று சிந்திக்க வைக்கிறது. நாம் பின்பற்றும் சொல்லாக்க முறை பழங்காலத்திய சொல்லாக்க முறைகளில் இருந்து முற்றிலும் முரண்பட்டு/ தடம்புரண்டு செல்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அக்கட்டுரையின் ஆசிரியர் பிரபலமான பதிவரா அல்லது தமிழ் சொல்லாக்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவரா என ஆராய்வதைக் காட்டிலும், அவர் கூறும் கருத்தை நாம் ஆராயவேண்டும். உண்மையில் சாதாரணத் தமிழனின் மனதில் இருக்கும் தமிழ் சொற்களைப் பற்றிய ஒரு ஏக்கமாக/எண்ணமாகத் தான் நான் அந்தப் பதிவை பார்க்கிறேன். இதோ அக்கட்டுரையிலிருந்து சில பாகங்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2)

உலக மொழிகளிலேயே அதிகமான சொற்கள் கொண்டது நம் மொழி. பழங்காலத்தில் தமிழன் அப்போதிருந்த சுழலில் நல்ல தரமான, சரியான சொற்களை உருவாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறு ஒரே மூலப்பொருள் சுட்டும் பல சொற்களைப் சொல்லாக்கம் செய்துள்ளனர். எடுத்துகாட்டாக யானை என்ற விலங்கை சுமார் 170 பெயர்களில் அழைத்தனர். யானையின் குணம், வடிவம், செய்கை, தோற்றம், பயன்பாடு, இடம், இனம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சொல்லாக்கம் செய்துள்ளனர். இதுபோல் பல சொற்களைச் சொல்லலாம். தமிழ் மொழியில் ஒரு பொருளுக்கு ஒரு சொல் தான் என்றில்லாமல், பல்வேறு சொற்களை கொண்டுள்ளது அக்காலத்திய சொல்லாக்க திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தற்காலத்தில் அன்றாடம் புதுபுது சொற்கள் மற்ற மொழிகளில் வந்துகொண்டிருக்க அவைகளுக்குச் சரியான ஒரு தமிழ் சொற்களை கூட உருவாக்கமுடியாமல் திணறி வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருக்க வேண்டிய சொற்களுக்கு கூட இன்றும் சொற்களை உருவாக்கி அதை வழக்கில் கொண்டுவர முடியாமல் தவிக்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஓரிரு வாரங்களில் வழக்கத்தில் வந்துவிடுகிறது, ஆனால் தமிழ்ச்சொற்கள் வழக்கத்திற்கு வர பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்சாரம் என்ற செல்லே நடைமுறைக்கு வர 24 ஆண்டுக் காலம் ஆனதாக சொல்லப்படுகிறது. 

உண்மையில் நாம் செய்யும் தவறு தான் என்ன? என்று நாம் சிந்ததுண்டா?. எப்போது ஆங்கிலேயர் நம் மண்ணில் காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே தமிழினம் மட்டுமில்லை தமிழ் மொழியும் அடிமைப்பட்டு விட்டது. நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்கிறோம், ஆனால் தமிழ் இன்னமும் அயல் மொழிக்கு அடிமைப்பட்டு தான் கிடக்கிறது.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)



  தமிழில் புதியச்சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்குப் பதிவிடுகிறேன்.

மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாகப் புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லைச் சொன்னால் அது எதைக் குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதைப் பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு இணையான புதியச்சொற்களை உருவாக்க அச்சொற்களை அப்படியே மொழிப்பெயர்த்துச் சொல்லாக்கம் செய்கிறோம் அல்லது அச்சொற்களுக்கு என்ன பொருள் எனக் கண்டுபிடித்து, இரண்டு அல்லது மூன்று சொற்களை அப்படியே வரிசையாக இணைத்துச் சொல்லாக்கம் செய்கிறோம்.. பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொற்கள் எப்படி உள்ளதோ அப்படியே வரிக்குவரி தமிழில் மொழிபெயர்த்துச் சொற்களை உருவாக்கிவருகிறோம்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் Real Estate துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?



கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறை நிறுவனங்கள், சந்தைகள் போன்றவை வளர்ந்தாலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை தான் பெரிய அளவில் வளர்ச்சியும் கண்டது நல்ல பணமும் புரண்டது.ஆனால் தற்பொழுது Real Estate விலைவாசியை பார்க்கும் போது சென்னையில் நடுத்தர சம்பள மக்கள் தங்களுக்கென ஒரு மனையோ அல்லது இடங்களோ வாங்குவது என்பது முடியாத காரியமாகி விட்டது. அதேபோல் வங்கிகள் மூலம் கடன் பெற்றோ, வெளியில் கடன் வாங்கியோ இடத்தில் முதலீடு செய்து பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ஒரு சாராரின் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
சென்னையில் சொத்துக்களை வாங்குவதாக இருந்தால் இந்த பதிவை படித்துவிட்டு பின்பு முடிவு செய்யுங்கள். சென்னை Real Estate துறை உண்மையில் வளர்கிறதா அல்லது தேய்கிறதா?

சனி, 17 ஆகஸ்ட், 2013

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு




தாயின் கருவறையில் இருக்கும் சிசு தாயின் ஒவ்வொரு செயல்களையும் உணர்ந்து அதன்படியே தன்னை தயார்செய்துகொள்ளும் என்பது அறிவியல்பூர்வமாக நிருபணம் செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் தான் கருவுற்ற தாய்மார்கள் எப்போதும் நல்லவைகளை கேட்க வேண்டும், நல்லதை நினைக்க வேண்டும், நல்லதை மட்டுமே அவர்களிடம் நாம் பேச வேண்டும், சண்டையிட கூடாது, இறை செயல்களில் ஈடுபட கொள்ளவேண்டும், கலைகளை ரசிக்க வேண்டும், கணிதம் போடவேண்டும், சில மாதங்களுக்கு பிறகு அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும், அனைத்துவகையான உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மொத்தத்தில் கருவில் இருக்கும் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனத் தாய் ஆசைபடுகிறாளோ அப்படியெல்லாம் முதலில் அவள் இருக்க வேண்டும் என்பார்கள்.

தன் தாய் பேசும் மொழியைத் தான் கருவில் இருக்கும் சிசு முதலில் கேட்கிறது. அது தமிழாக இருந்தாலும் சரி வேறு எந்த மொழியாக இருந்தாலும் சரி. மேலும் அதே மொழியில் தாயின் செயல்பாடுகள் (பேச்சு, சிந்தனை, அறிவு, படிப்பு) அமையும்போது அதைப் பின்பற்றியே குழந்தையின் செயல்பாடுகளும் அமைகிறது. அதனால் தான் 'தாயைப்போலப் பிள்ளை நூலைப்போலச் சேலை' என்ற பழமொழியும் தோன்றியது.

எனவே ஒவ்வொருடைய இயந்திர (உயிர்) மொழி என்பது அவர்களின் தாய்பேசும் மொழியே. அதாவது தாய்மொழியாகும்.

ஒருவர் மற்றவரிடம் எந்தவொரு மொழியில் தன கருத்தைத் தெரிவிக்க விரும்பினாலும் அவர் பேச விரும்பும் தகவல் அவருடைய தாய் மொழியில் தான் அவரின் மனதில் தோன்றும், பிறகுதான் அந்தக் கருத்து பேசும் மொழிக்கு ஏற்ப மொழிமாற்றம் அடைந்து நாவில் பேச்சாக வெளிவரும். இங்கு மனம் என்பது உயிர்மொழி, பேச்சு என்பது செயல். நம்முடைய ஒவ்வொரு கருத்து பரிமாற்றங்களும் உயிர்மொழியில் தான் நடைபெறுகின்றன. அதேபோல் ஒருவர் சிந்திப்பதும், படிப்பதும், எழுதுவது என அனைத்து செயல்களின் மூலமே உயிர்மொழி தான்.

நம் மனம் உயிர்மொழியில் ஒரு சிரிப்புத் துணுக்கு கேட்டால் சுவையறிந்து தானாகச் சிரிக்கும். அதே சிரிப்புத் துணுக்கை வேறுமொழியில் கேட்டால் நமட்டு சிரிப்பு மட்டுமே வரும் அல்லது சிரிக்க மனம் விரும்பாது. உணர்வுகளைத் தூண்டிவிடுவது தாய்மொழி. உணர்வு மட்டுமின்றி சிந்தனை, செயல், அறிவு, புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றை திறன்பட செயல்பட மற்றும் தூண்டிவிட உறுதுணையாக அமைவது உயிர்மொழி - இயந்திரமொழி எனப் பெயர்கொண்ட அவரவர் தாய்மொழி.

கணினியில் C++, Csharp, VB, JAVA, Perl போன்ற மொழிகளில் நிரல்களை(Program) எழுதினாலும் அது இயங்கும்போது கணனியின் CPU விற்கு இயந்திர மொழியாக (Machine Language) மாற்றமடைந்து தான் கணினிக்கு இயக்கக் கட்டளைகளையிடும். இங்கு C++, C#, VB, JAVA, Perl போன்றவை நம்மைச் சுற்றியிருக்கும் ஆங்கிலம், அரபிக், பிரஞ்சு, லத்தின் போன்றவை. இயந்திர மொழியாக (Machine Language) என்பது அவரவர் தாய்மொழி.

கணினியும் மனிதனும் செயல்பாடுகளில் ஒன்று தான். மனிதனின் மூளைக்கு அறிவு எப்படி கட்டளைகளைப் பிறப்பிக்கிறதோ அதுபோல் நிரல்கள் (Program) கணினிக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. கணனியின் நிரல்களை கணினிக்குப் புரியும்படி மாற்றிகொடுப்பது தான் Machine Language இன் வேலை. Machine Language இல்லாமல் கணினி இயங்காது. இதேபோலத் தான் மனிதன் பழமொழிகளைப் பேசினாலும், படித்தாலும் அந்த மொழிகளை அவனுடைய தாய்மொழி (Machine Language) மட்டுமே அவனுடைய அறிவுக்கு புரியும்படி மாற்றிக்கொடுத்து அவனைச் செயாலாற்ற வைக்கும்.

Machine Language -தாய்மொழிக்கு பதில் அந்த இடத்தில் வேறு எந்த மொழிகள் இருந்தாலும் கணினியும் - மனிதனும் வெறும் கல்லைப் போன்றவர்கள் தான் என்பதில் ஐயமில்லை.

இந்தத் தலைமுறையில் தமிழர்கள் பல்வேறு துறைகள் குறிப்பாக நுட்பியல் (Technology) துறையில் நல்ல பெயரை உலகளவில் பெற்றுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் தன் நிறுவனத்தை வேறு நாடுகளுக்கு மாற்றுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னைக்கு தான் மாற்றுவேன் என்று சொன்னது தமிழர்களின் நுட்பியல் அறிவுத்திறனே காரணம். பெரிய நிறுவனங்கள் இன்றும் தென்னிந்திய பணியாளர்கள் என்றால் விரும்பிப் பணியில் சேர்ப்பதற்கு காரணம் நாம் தான் என்பது பலருக்கும் தெரியாது. நம்முடைய இந்த உயர்வான நிலைக்குக் காரணம் நாம் தாய்மொழியில் கல்வி கற்றது தான்.

நம்மை இந்த அளவிற்கு கொண்டுவந்து விட்ட தமிழை நாம் இன்று மறந்து விட்டுத் தன் பிள்ளைகள் வாய்வழிய ஆங்கிலம் பேசினால் தான் வாழ்கையில் முன்னேற முடியும் என்று நாமே கனவுகொண்டு இன்று ஆங்கிலவழி கல்வியை நம் பிள்ளைகளுக்குத் திணித்து வருகிறோம். நம்முடை உடல், சிந்தனை, செயல், அறிவு போன்றவை இயற்கையில் தமிழ் என்று பச்சை குத்தி இருக்கும்போது அந்த இயற்கையை மாற்ற முயற்சி செய்கிறோம். இயற்கையை மாற்ற முயலும் நாம் மூடர் என்பதை அறியாமல் இந்தத் தவறை செய்துவருகிறோம்.

மனிதன் தன் தாய்மொழியில் கல்வி பயிலுவது தான் சிறப்பு எனத் தமிழர்களின் கனவுகாரன் ஆங்கிலேயன் பல ஆய்வுகளைச் செய்து சொன்னாலும், அதை ஒத்துகொள்ள மறுக்கிறோம். இன்று உலகில் முன்னணி நாடுகளான ஜப்பான், சீனா, ரஷ்ய, ஜெர்மன், இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் தாய்மொழியிலேயே படிப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அதனால் தான் இன்று அவர்கள் பல துறைகளில் முன்னேற்றமடைந்தவர்களாகத் திகழ்கின்றனர். உலகில் சிறந்த விருதுகள், பரிசுகள் (நோபல்), அங்கீகாரம், முக்கியத்துவம், போன்றவற்றை அவர்கள் பெற முடிகிறது. பற்பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துத் தங்கள் அறிவை மற்ற நாட்டினர் மெச்சும் படி வாழ்கின்றனர்,

ஆனால் நாம் ஆங்கிலம் தான் நம் உயிர்மொழி போல் நினைத்துகொண்டு நம் பிள்ளைகளை வழுகட்டாயமாக ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து விட்டு அழகு பார்க்கிறோம். இப்படி அழகு பார்த்துப் பார்த்து அவர்களின் சிந்தனை மற்றும் கற்பனை திறனைக் குழிதோண்டி புதைத்து வருகிறோம். தொழில் துறை எனும் கடலில் நீந்த அறிவு, சிந்தனை, கற்பனை என்னும் மூன்றும் அவசியம், அது இல்லாத எந்த ஒரு சமுகத்தையும் உலகம் ஏற்காது. இதுதான் ஆங்கிலவழி கல்வி பயிலும் நம் சந்ததியினர் அவர்கள் காலங்களில் சந்திக்க போகும் மிகபெரியபிரச்சனையாக மாறப்போகிறது.

ஆங்கிலமே தெரியாத நம் குழந்தைகளை ஆங்கிலத்தின் மூலமே அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு. கல்வியில் ஆரம்ப நிலை எனும் அந்த முதல் 6 ஆண்டுகளில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஆங்கிலத்தில் கல்வியை புகட்டுகிறோம். அவர்கள் கல்வியை கற்பார்களா? அல்லது ஆங்கிலத்தை கற்பார்களா?. இந்தக் குழப்பத்தாலேயே அவர்கள் புரிந்து படிப்பதற்கு பதில் சிந்தனையை மழுங்கடிக்கும் மனப்பாடம் எனும் முறையைக் கடைப்பிடிகின்றனர்.

தனக்கு ஆங்கிலம் பேசப் படிக்க தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகத் தன் பிள்ளைகளை இப்படி தான் படிக்க வேண்டும் என்று முடிவுசெய்து தலையைப் பிடித்து அழுத்துவது, தங்கள் பிள்ளைகள் வாழ்கையில் முதன்மையாக வர வேண்டும் என்று எண்ணம் கொண்டே எனச் சொன்னாலும் உண்மையில் அவர்கள் வாய்நிறைய ஆங்கிலம் பேசும் கீழ்மட்ட வேலைசெய்யும் சாதாரண ஊழியராக வந்தாலும் பெருமையே எனச் சொல்வதுபோல உள்ளது.

செவ்வாய், 30 ஜூலை, 2013

வாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா ?


வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை நேரடியாக இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற சொல்லும் அளவிற்கு எந்த ஒரு நுட்பங்களும் (Technology) கண்டுபிடிக்கப்படவில்லை. ஆற்றலை இழப்பை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.


புதன், 17 ஜூலை, 2013

ஈழத்தின் கதறல் - என் குமுறல்



உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா

பெற்றவரை இழந்த உன் தவிப்பு மனதில் தீ நெருப்பு
சோற்றுக்கு இரக்கும் உன் அழைப்பு நெஞ்சில் பெரும் வெடிப்பு
தேற்றுவோர் இல்லா உன் பதைப்பு சிரத்தில் உடைப்பு

என் கனவு காதலி



இயற்கை எனும் இல்லத்தில் பிறந்தவள் 

எழில் முழுதும் முன்னழக்கில் முடிந்தவள் 

பரந்தவெளி பின்னழகு கொண்டவள் 

பொன்னிற பூந்தேகம் புனைந்தவள் - யார் அவள் 


உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்

இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது. உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

1) ஆங்கிலம்


 



உலகில் 500 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் 2 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களது தகவல் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ளது.

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும்! கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எவ்வாறு செய்கிறது என்ற எளிய மற்றும் நேர்த்தியான அனிமேஷன் தொகுப்பு ஒன்றை காண இருக்கிறீர்கள்.

இந்த அனிமேஷன் படங்கள் நம்மை சுற்றி உலகில் நடைபெறும் செய்களின் இயக்கவியல்(mechanics) முதல் வடிவியல்(geometry) வரை விளக்க வருகிறது.இந்த அனிமேஷன் மூலம் நீங்கள் மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு ஒரு பாராட்டுதலை பெற்று தரும் என்று நம்புகிறேன்.

ஜிப் எவ்வாறு வேலை செய்கிறது - How a Zipper Works



வட்டத்தின் சுற்றளவை (பய்) விளக்கும் படம் - Illustrating Pi: Unrolling a Circle’s Circumference


இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...