திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தெரியாத மொழியில் இணையத்தேடல் செய்து பார்க்க, படிக்க முடியுமா? (மொழி ஒரு பொருட்டல்ல)

 நாம் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே இணையத்தில் விவரங்களைத் தேடுகிறோம்(Search) ,பார்க்கிறோம்(Show) , படிக்கிறோம் (Read) மற்றும் பின்னூட்டம்(Comments) செய்கிறோம். பெரும்பாலும் தமிழ் அல்லது ஆங்கில மொழியைத் தான் இணையத்தில் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் உள்ள தரவுகளை மட்டுமே மொழிப்பெயர்ப்புச் செய்து தமிழில் உலவ விடுகிறோம். மற்ற மொழிகளில் உள்ள தரவுகள் யாவும் நமக்கு இரவுகள் போன்றது தான்.தமிழ் மொழி இயற்கையாகவே இலக்கியச் செறிவு மிகுந்தது. இணையத்தமிழில் இலக்கியம், கவிதைகள், மொழியாய்வுகள், நாட்டு நடப்புகள், திரைப்படச் செய்திகள், வாழ்க்கை சிந்தனைகள் மற்றும் யோசனைகள், நாட்டு மருத்துவம், சமூகப் பார்வை, போராட்டங்கள் , கேளிக்கை, அரட்டை என்று குறிப்பிடும்படியான வகைகளில் மட்டுமே செய்திகள்(அ) தரவுகள் கிடைக்கின்றன. தமிழில் அறிவியல், நுட்பியல்(Technology), கண்டுபிடிப்புகள், கணினி, மருத்துவம் தொடர்பான தரவுகள் மிக மிகக் குறைவு.

திங்கள், 7 ஜூலை, 2014

கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility

இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ்  ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.

செவ்வாய், 24 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (இறுதி பாகம்)

சென்ற இரண்டு பதிவுகளில் இந்தி மொழியின் வரலாறு அதன் தோற்றம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இந்தி மொழியில் நூல்கள் பிறந்த வரலாறு, இந்தி பற்றி நடுவண் அரசு பரப்பும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் பார்ப்போம்.

இந்தியில் நூல்கள்
இப்படிப்பட்ட கலவை மொழி இந்தியில் எவ்வாறு நூல்கள் இயற்றப்பட்டது என்ற வரலாற்றை பார்ப்போம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'இராமனந்தர்' எனும் துறவி இராமனை மக்கள் வழிபடவேண்டும் என வடநாட்டின் பல பகுதிகளில் பரப்புரை செய்து அப்பகுதிகளில் இராமன் புகழை பரவச்செய்தார். கல்வியறிவு இல்லாத அம்மக்களுக்கு இராமன் தன் தந்தை இட்ட கட்டளையால் அரசு துறந்து, கானகம் சென்று அங்கு தன் மனைவியை இழந்து அடைத்த துயரம், அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. இந்த மனவேதனையே இராமன் புகழ் அப்பகுதிகளில் வேகமாக பரவ காரணமாக அமைந்தது. மேலும் இராமனந்தர் அப்பகுதி மக்கள் பேசும் மொழி வழியாக இராமன் நாமத்தை பரப்பும் பொருட்டு இராமனை பற்றி எழுதிய நூல் தான் இந்தி மொழியில் இயற்றப்பட்ட முதல் நூல். அந்நூலின் பெயர் 'ஆதிகிரந்தம்' என அழைக்கப்படுகிறது.

வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -2)


இதுவரை உருது எனும் மொழி உருவான வரலாற்றை சிறிது பார்த்தோம். இந்தியை பற்றி சொல்வதாக நினைத்தால் என்ன இது உருதை பற்றி சொல்கிறேன் என எண்ணவேண்டாம், விசயம் இருக்கிறது. இந்த உருதுமொழியில் இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, 'ல்ல்லு ஜிலால்' என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப் பிரித்துச் சீர் செய்யப்பட்ட மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில் சம்ஸ்கிருத சொற்களை இணைத்து இந்தி எனும் புதிய மொழியொன்றை தோற்றுவித்தார். இதனால் இந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது. வடமொழிச்சொற்களை சேர்த்துக்கொணடதால் இந்தி வடமொழியில் இருந்து உருவானது என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர். இந்தி எனும் மொழி உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி. உண்மையில் இந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும், பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி எவ்வாறு நம்நாட்டு மொழியாகும். இதனுடைய வயது வெறும் 830 ஆண்டுகள் தான். மேலும் இந்தி இந்துக்களின் சமயமொழி போல் சித்தரிக்கப்படுவது நமக்கு நகைப்பை தான் வரவழைக்கிறது. மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய இந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதிற்க்கும் இந்தி மொழிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு மொழிகளுக்கு ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது இந்தியில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்து முறை 'தேவநகரி', உருது மொழியில் எழுத பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.

வியாழன், 19 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -1)


நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு பொய்யை முதல் முறையாக கேட்கும் போது அது பொய் என்பதை நாம் அடித்து சொல்லுவோம். அதே பொய்யை நம் காதில் அடிக்கடி விழும்படி யாரேனும் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒருநாள் நாம் அந்த பொய்யை உண்மையென சொல்லுவோம். இதே உத்தியை தான் மைய அரசு இந்தி திணிப்பு விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது. ஆரம்பத்தில் மைய அரசு இந்தியை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் பயிலவேண்டும் என சொன்னபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு, போராட்டம் போன்றவை பார்த்து அரசு பணிந்து தனது இந்தி திணிப்பு பாதையை மாற்றிகொண்டது. அதாவது நான் மேலே சொன்னது போல் ஒரு இந்தி விசயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது என்றாவது ஒரு நாள் நாம் சொல்லும் விசயத்தை தமிழ்நாடு நிச்சயம் கேட்கும் என நம்பிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இந்தி தேசிய மொழி, படித்தால் உலகத்தை சுற்றலாம், இந்தியாவை சுற்றலாம், வேலைகிடைக்கும் என  பொய் பரப்புரையை பலமாக நம் காதில் சொல்லி சொல்லியே இப்போது வெற்றியும் கண்டுள்ளது. 'எறும்பு ஊர கல்லும் தேயும்' எனும் பொன்மொழி இந்தி விசயத்தில் உண்மையென நிருபிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 ஜூன், 2014

நீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களையும் உசாரா இருக்க சொல்லுங்க!


Image

"ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகாரர்களுக்கு இருக்கத்தான் செய்வார்கள்" என்பதை போல மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கென்றே திருடர் கூட்டம் ஒன்று தமிழ் நாட்டின் பல இடங்களில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பேசுவதை கேட்டால் குறிப்பாக இளைஞர்களும், சிறுவர்களும், இல்லாத்தரசிகளும், படிக்காத பாமர மக்களும் ஏமாறுவது உறுதி.

ஞாயிறு, 8 ஜூன், 2014

ரெண்டுங்கெட்டான் நிலையில் தமிழன்திருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டு வந்தனர். அதை நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஒருவர் அவருடைய நண்பரிடம் கேட்கிறார்....

"பாஸு  ஓட்டல்களில் ஏன் சாப்பாட்டை ஒழுங்க வேக வைக்காம அரிசி அரிசியா போடுறாங்க தெரியுமா?" என்றார்.

செவ்வாய், 27 மே, 2014

உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]

Image

சென்ற இடுகையில் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுருக்களை இணைப்பது என்ற செய்முறையில் .post-body என்ற div ன் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்த்தோம்.

.post-body {
line-height: 1.4;
font-size: 110%;
position: relative;
font-family:DroidSansReg,Arial;
}


இனி மற்ற DIV களில் உள்ள எழுத்துருக்களை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம். அதற்கு முன் பூச்சரம் பகிரும் CSS கோப்பில் என்னென்ன எழுத்துருக்கள் உள்ளன அவற்றின் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் HTML நிரலை மேலும் எடுவு(Edit) செய்ய எளிமையாக இருக்கும்.

புதன், 14 மே, 2014

உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]

உங்களுடைய தமிழ் பிளாக்ஸ்பாட்(Blogspot) தளங்களில் பல்வேறு வகையில் பதிவுகளை அழகுப்படுத்தி நல்ல புதுமையான கருத்துகளுடன் வெளியிட்டாலும், உங்களுக்கு மனதில் பதிவை பற்றி எப்போதும் ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதுதான் தமிழ் எழுத்துரு பிரச்சனை. ஆங்கிலப் பதிவுகள் போல் பல வடிவ எழுத்துருக்களைப் பயன்படுத்தி அழகாகப் பதிவு போட முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. படம்- 1 ல் இருப்பது தமிழ் எழுத்துரு, படம்-2 ல் இருப்பது ஆங்கில எழுத்துரு.


Zoom in (real dimensions: 642 x 226)
படம்-1

சனி, 10 மே, 2014

குடிகாரர்களாக வளர்ந்து வளரும் மாணவ சமூதாயம்


குடி இன்று நம்முடைய சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் மோசமான பழக்கம். அக்காலங்களில் குடிப்பவர்களை குடிகாரன் என்றும் அவர்களின் குடும்பங்களை குடிகார குடும்பம் என்று அழைத்தது நம் சமூகம். அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஊரிலிருந்து விளக்கி வைக்கப்பட்டவர்களைப் போன்று கேவலமாக பார்த்ததும் அதே சமூகம் தான். சமூகத்தின் பார்வைக்கு பயந்தே பலரும் குடி என்பது நம் சுய மரியாதையையும், குடும்ப மரியாதையும் கெடுத்துவிடுமென்று கட்டுகோப்பாக இருந்த சில காலங்களும் உண்டு.

வெள்ளி, 28 மார்ச், 2014

ஜப்பானிய மொழியில் ஹி-வாத்ரி (Hi-watari) என்றால் என்ன தெரியுமா?


ஜப்பானில்தமிழ்நாட்டில்
Image
Image

火災 - Hi என்றால் என்ன தெரியுமா? ஜப்பானிய மொழியில் ஹி(Hi) என்றால் தீ என்று பொருள். நம் தமிழில் இருந்து சென்ற சொல்.

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிகப் பெரிய அளவில் தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கணமும் ஜப்பான் மொழி இலக்கணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத் தோன்றுகிறது. ஏராளமான தமிழ் மொழி சொற்கள் ஜப்பானிய மொழியில் சேர்ந்துள்ளன. ஆங்கிலம் போல் நம்மவருக்கு ஜப்பான் மொழி தெரிந்திருந்தால் இந்நேரம் ஜப்பான் மொழியில் கலந்துள்ள நம் தமிழ் சொற்களைப் பலரும் பட்டியலிட்டு இருப்பார்கள்.

திங்கள், 10 மார்ச், 2014

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-3

Image


நாம் இதுவரை ஆட்டி என்ற பின்னொட்டை கொண்டு உருவான சொற்களைப் பார்த்தோம். சொற்கள் உருவாகியுள்ள விதத்தைப் பாருங்கள். எந்தச் சொல்லுமே அப்பொருளை முழுமையாகக் குறிக்கும்படி உருவாக்கப்படவில்லை, அது அவசியமும் இல்லை. இரண்டு அல்லது மூன்று வேர்ச் சொற்கள் பொருளை உணர்த்தும் அல்லது சுட்டும் விதமாகவே இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. பாட்டி என்ற சொல்லில் அப்பா + பெண் என்ற இரு வேர்ச் சொற்களும், அப்பொருளை சுட்டும் (Hint) விதமாகவே அமைந்துள்ளன. இதே சொல்லை தற்காலத்தில் உருவாக்குவதாக வைத்துகொண்டால் என்ன செய்திருப்போம் "தந்தையம்மா" என்று தான் வைத்திருப்போம்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-2பகுதி-1 பிணியம் (Link) http://puthutamilan.blogspot.in/2014/03/1.html

வ.எண்சொல்பகுப்புவிளக்கம்எதிர்பால்
(ஆண்பால் அல்லது பெண்பால்)
கூடுதல்
19தருமவாட்டிதருமம்
+ ஆட்டி
தருமம் செய்யும் பெண்.
(Dharma women ,தருமவதி)
தருமவாளன்
20நுதனாட்டிநுதனம் + ஆட்டிநுதனமான
(புத்திசாலியான) பெண்(intelligent women )
என்று பொருள்.


21பசியாட்டிபசி + ஆட்டிபசியால் வாடும் பெண். (Hungry woman)

22பனுவலாட்டிபனுவல்(நூல்) + ஆட்டிநூலை கொண்ட பெண் அதாவது சரசுவதியை குறிக்கும் சொல்.(Sarasvati ,
as Goddess of sciences)


23பெரியபிராட்டிபெரிய + பிர
+ ஆட்டி
இந்த சொல் இலட்சுமி
தேவியை குறிப்பதாகும்.
(Lakshmi , as chief consort of Vishnu)


24பெருமாட்டிபெருமை + ஆட்டிபெருமைகள்
கொண்ட பெண்.(Lady, mistress, princess)
பெருமான்
25பொருள்விலையாட்டிபொருள்+
விலை+ஆட்டி
விலைமாது
(Prostitute) என்று பொருள்.
பொருளைப்போல்
விலைகொடுத்து வாங்குவது போல்
பெண்ணையும் விலைகொடுத்து
அக்காலத்தில் வாங்கியதால்
இந்த சொல் உருவானது.


26பொறையாட்டிபொறுமை + ஆட்டி பொறுமை குணம்
கொண்ட பெண் அல்லது
பொறுமையுள்ளவள் என்று
பொருள். (Patient woman).


27கடவுட்பொறையாட்டிகடவுள் + பொறுமை
+ ஆட்டி
வாக்கு சொல்லும்
பெண் அல்லது தேவராட்டி
(Woman having oracular powers under divine inspiration heaviness) என்று பொருள்.


28மகவாட்டிமகவு (குழந்தை
செல்வங்கள்) + ஆட்டி
குழந்தை செல்வங்கள்
கொண்ட பெண் என்று பொருள்.(Woman
blessed with children)

குழந்தை பெறும்
பாக்கியம் இல்லாத பெண்ணை
மலடி என்று அழைப்பதை
நினைவுப்படுத்துகிறேன்.
29மருமாட்டிமரு + ஆட்டிமருமகள் என்று
பொருள்(Female descendant).


30மலையாட்டிமலை + ஆட்டிமலைநாட்டு பெண் என்று பொருள் (Woman of the mountainous region)மலையான்
31மனையாட்டிமனை (வீடு,
இல்லம் ) + ஆட்டி
மனையை ஆளும் பெண்
(மனைவி) அல்லது இல்லத்துணையாள் என்று பொருள்.
மனையாளன்
32மாற்றாட்டிமாற்று + ஆட்டிமாற்று பெண் என்று பொருள். அதாவது சித்தி அல்லது சின்னம்மாள், மாற்றாள் (Stepmother) என்றும் சொல்லலாம்.மாற்றான்
33முப்பாட்டிமுன் + அப்பா(பா) +
ஆட்டி
முதல் பாட்டி (Grandfather's
grandmother) என்று பொருள்.
முப்பாட்டன்
34மூதாட்டிமூத்த + ஆட்டிமூத்த பெண், அதாவது வயதான பெண்( Aged woman) என பொருள்.மூதாளன்
35வடமொழியாட்டிவடமொழி + ஆட்டி
அல்லது பார்ப்பனி
வடமொழி பேசும் பெண் அல்லது பார்ப்பனி(Brahmin
woman) என்று பொருள்.


36வாழ்வாட்டிவாழும் + ஆட்டிகுடும்பமாக, எவ்வித குறையுமின்றி
நல்லபடியாக வாழும் பெண்.


37வாழாவாட்டிவாழா + ஆட்டிகணவனுடன் வாழாமல் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் பெண் (Married woman not living with her husband)
வாழாவாட்டி
தான் வாழாவெட்டி என்று
மருவி தற்போது பேச்சு
வழக்கில் உள்ளது.
38விலையாட்டிவிலை+ ஆட்டிபொருளை விற்கும் பெண் (Tradeswoman) என்று பொருள்.விலையாளன்
39வினையாட்டிவினை(செயல், ஏவல்)
+ ஆட்டி
வேலை செய்யும்
பெண் (Female servant)
என்று பொருள்.
வினையாளன்
40வெள்ளாட்டிவெள்ளாமை (வேளாண்)
+ ஆட்டி
வேளாண் தொழிலை
மேற்கொள்ளும் பெண். (வேளாண்மாந்தர்)
வெள்ளாளன்
41வேளாட்டிவேளாண் + ஆட்டி வேளாண் தொழிலை மேற்கொள்ளும் பெண். (வேளாண்மாந்தர்) வேளாளன் (agriculturist)
42அகவாட்டிஅகம்(இல்லம்) +
ஆட்டி
இல்லத்து பெண் (மனைவி-Wife)
என்று பொருள்.
அகவாளன்
43அடியாட்டிஅடிமை + ஆட்டிஅடிமை பெண் அல்லது வேலைக்கார பெண்
(Woman servant)
அடியான்
44அந்தணாட்டிஅந்தணம் + ஆட்டிஅந்தண பெண் அதாவது பார்ப்பனி ( Brahmin woman)
பெண்ணை குறிக்கிறது.
அந்தணாளன்
45இல்லாவாட்டிஇல்லாமை + ஆட்டிபொருள் (செல்வம்) இல்லாத பெண் அதாவது
வறியவள் (Destitute woman)
என்று பொருள்.


46கண்வாட்டிகண் + ஆட்டிகணவனின் கண்ணில் இருக்கும் பெண் (wife), அதாவது மனைவி என்று பொருள்.கண்வாளன்
47தாட்டிதாடு (வலிமை, Strength)
+ ஆட்டி
கெட்டிக்கார அல்லது
திறன்வாய்ந்த பெண் (Clever woman) என்று பொருள்.


48சுத்தவாட்டிசுத்த + ஆட்டிசுத்தமான பெண் அல்லது தூயவள் (Pure, spotless woman) என்று பொருள்.

49பூமிபிராட்டிபூமி + பிர
+ ஆட்டி
பூமித்தாய் அல்லது பூமிமகள் என்று பொருள்

50அயலிலாட்டிஅயல் + இல்
+ ஆட்டி
அடுத்த வீட்டு பெண் என
பொருள் (Woman of the
next house; அடுத்த வீட்டு மாது)


51கண்ணொடையாட்டிகள் + நொடை(விலை)
+ ஆட்டி.
கள்ளை விற்கும்
பெண் அல்லது கள்விற்பவள் என
பொருள் (Female toddy seller)


52கோமாட்டிகோ(உயர்ந்த,
சக்கரவர்த்தி, அரசன்) + ஆட்டி
உயர்வான
பெண் அல்லது கோமகள்
என்று பொருள்.


53சூராட்டிசூரம்(வீரம்) + ஆட்டிவீரமான பெண் என்று பொருள். (Valour, bravery, heroism lady)

54இராசாட்டிஅரசு + ஆட்டிஅரசு பெண் அதாவது இராணியை(Queen)
குறிக்கிறது.

இராசாத்தி என்பது இராசாட்டி என்ற சொல்லின் மருவல்
55சாணாட்டிசாணர் + ஆட்டி சாணர் சாதி பெண் என்று பொருள்.(Woman of the Shanar caste; சாணாரப்பெண்).
சாணாத்தி என்பது
சாணாட்டி என்ற சொல்லின் மருவல்
56செம்மறிசெம்மை(சிகப்பு - Redness)
+ மறி (ஆடு)
சிகப்பு நிற ஆடு என்று
பொருள்.(Young of shee)


57செம்மாட்டிசெம்மறி + ஆட்டி ஆட்டை மேய்க்கும்
பெண் அதாவது சக்கிலிய
சாதிப்பெண் (Woman of the
shoemaker caste)
செம்மான்
(சக்கிலியன்)
செம்மாத்தி என்பது
செம்மாட்டி என்ற சொல்லின் மருவல்
58வண்ணாட்டி வண்ணாரம் + ஆட்டிதுணிகளை வெளுத்து அழுக்கு நீக்கி வேலை செய்து கொடுக்கும் பெண் (Washer women) வண்ணத்தான் வண்ணாத்தி என்பது வண்ணாட்டி என்ற
சொல்லின் மருவல்
59அம்மாட்டி அம்மா + ஆட்டி(பெண்)அம்மாவின் அம்மா அதாவது அம்மாவின்
தாய்(grandmother) என்று
பொருள்.

அம்மாச்சி என்பது
அம்மாட்டி என்ற சொல்லின் மருவல்
60அப்பாட்டிஅப்பா + ஆட்டி அப்பாவின் அம்மாவை அதாவது அப்பாத்தா என்று பொருள்
அப்பாச்சி என்பது அப்பாட்டி என்ற சொல்லின் மருவல்.மேலும் அப்பாச்சி என்ற சொல் திரிந்து தற்காலத்தில் அப்புச்சி என்று வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது அம்மாச்சி என்ற
பெண்பால் சொல்லுக்கு
நிகரான ஆண்பால்
சொல்லாகும். மேலும்
இச்சொல் அப்பாவின்
அம்மா அதாவது அம்மாச்சியை
தான் குறிக்கிறது. வழக்கில்
வந்துவிட்ட இச்சொல்லை
தவறு என சொல்லாமல்
அப்படியே விட்டுவிடலாம்.
61பேராட்டிபெருமை + ஆட்டிபெருமையுடைய
பெண் ( பெருமையுடையவள்,
Lady of eminence) என்று பொருள் .
பேராளன்
62எசமாட்டிஎசம் (நரம்பு) + ஆட்டி(பெண்)செயலுக்கு
நரம்பு போன்று மூலமாக இருப்பவள், குடும்பத்தலைவி என்று பொருள்.
எசமான்
63இறைமையாட்டிஇறைமை + ஆட்டிஇறைமை கொண்ட
பெண்( mistress) என்று பொருள் .


64கற்புடையாட்டிகற்பு + உடைய
+ ஆட்டி
கற்புடைய பெண் (virtuous or faithful wife) என்று பொருள்.

65பேயாட்டிபேய் + ஆட்டிபேயை போன்ற இயல்புடைய பெண் என்று பொருள்.(One
who makes a person possessed and causes him to utter oracles)


66அணங்குடையாட்டிஅணங்கு(தெய்வம்)
+ உடைய + ஆட்டி
தெய்வத்தன்மை
கொண்ட பெண் (A woman divinely inspired and having oracular powers) என்று பொருள்.நன்றி-பூச்சரம்.நெட்
http://poocharam.net/viewtopic.php?f=54&t=771&p=2753#p2753

தொடரும்...

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-1


 தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கு முன், இருக்கும் சொற்களின் சொல்லாக்க நுட்பத்தை பகுந்து அறிந்துக்கொண்டால் சிறப்பான முறையில் சொற்களை உருவாக்க முடியும். அதன்படி தமிழ் சொல்லாக்க முறைகளில் ஒன்றான பின்னொட்டு நுட்பத்தை கொண்டு உருவாக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களைப்பற்றி பார்போம். நுட்பங்களை ஆராய்வதோடு மட்டுமின்றி அதே நுட்பத்தை அடிப்படையாக கொண்டு புது சொற்களையும் படைப்போம்.   பலரும் ஆங்கில மொழி சொற்களில் வரும் பின்னொட்டை போன்றே தமிழிலும் பின்னொட்டு மற்றும் முன்னொட்டு கொண்டு புதிய சொற்களை உருவாக்குகின்றனர். இது ஒரு தவறான முன்னூதாரணமாகும். அவர்களுக்காகவே இந்த பதிவு என்று கூட சொல்லலாம்.

பின்னொட்டு (Suffix) என்பது ஒரு வேர் சொல்லின் பின் இன்னொரு சொல்லை இணைத்து புதிய சொல்லை உருவாக்குவதாகும். இதை "விகுதி" என்றும் அழைப்பதுண்டு. ஒவ்வொரு பின்னொட்டுக்களுக்கும் ஒரு பொருள் உண்டு. பொதுவாக ஏதேனும் ஒரு வேர்ச்சொல்லுடன் பின்னொட்டுகள் இணைக்கப்பட்டு வேர்ச்சொல்லின் பொருளிலிருந்து மாறுபட்ட புதிய சொல் உருவாக்கப்படுகிறது. இந்த முறையில் தமிழ் சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டுள்ளன.

வெள்ளி, 31 ஜனவரி, 2014

தமிழகத்தில் நடக்கும் தமிழ் படுகொலைகள்Scooter – துள்ளுந்து
Motor bike - உந்துருளி – உந்துவளை
AutoRickshaw –மூவுருளி உந்து 
Van – கூடுந்து சிற்றுந்து 
Pickup Truck – பொதியுந்து
Jeep - கடுவுந்து - வல்லுந்து
SUV(Sports Utility vehicle) பெருங்கடுவுந்து
Lorry / Truck – சுமையுந்து – சரக்குந்து
Ambulance - திரிஊர்தி
Motor vehicle – தானுந்து
Train – தொடருந்து தொடர்வண்டி புகைரதம்.
Fighter Jet – போர் விமானம், போர் வானுருத்தி.

Helicopter – உலங்கு வானூர்தி
Boat – படகு. தோனி
Bus – பேருந்து
Ship – கப்பல், நாவாய்.


மேலே உள்ள சொற்கள் சில வாரங்களுக்கு முன்பு இணையதளம் ஒன்றில் வாகனங்களுக்கான தூய தமிழ் சொற்கள் என பிரசுரிக்கப்பட்டவை. இவற்றில் குறுக்கே அடிக்கப்பட்ட சொற்களை பாருங்கள், தமிழுக்கு நல்லது செய்கின்றோம், தமிழை வளர்கிறோம் என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு தமிழைப் படுகொலை செய்துள்ளனர். இவர்களைப் போன்றே இணையத்தில் ஆங்காங்கே தனக்குத் தெரிந்த இரண்டு மூன்று சொற்களை இணைத்து, இந்த ஆங்கிலச்சொற்களுக்கு இணையான புதிய தமிழ்ச்சொல் இது என நிறைய பேர் 
எழுதி வருகின்றனர். இவர்கள் முதலில் இதுபோன்ற சொல்லாக்கங்களை நிறுத்தினாலே தமிழ் பிழைத்துவிடும். புதிய சொற்களை உருவாக்குங்கள் வரவேற்கிறோம், அதற்கு முன் சொல் என்றால் என்ன? சொற்றொடர் என்றால் என்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு (What is word? & What is a sentence?) செய்யுங்கள். 

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கராத்தே என்ற கலையும் நம்முடையது தான் - கராத்தே என்ற சொல்லும் நம்முடையது தான்உலகின் தற்காப்பு கலைகளின்(Martial arts) வேர் எங்கிருந்து ஆரம்பித்தது? என்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் போதிதர்மர் என்ற பெயரில் போய் முடிகிறது. ஆம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த புத்தமதத்தைச் சார்ந்த பல்லவ மன்னன் போதிதர்மன் தான் முதல்முறையாக எதிரிகளிடம் இருந்து ஆயுதமில்லா நிலையில் தனி மனிதன் ஒருவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளச் சண்டையிடும் புதிய முறையை உருவாக்க முயன்றார். அப்போது தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான வர்மகலையை அடிபடையாகக் கொண்டும், விலங்குகள் மற்றும் பறவகைகள் சண்டையிடும் அசைவுகளை மனிதனின் அசைவுகளுடன் இணைத்தும் புதிய முழுமையடையா தற்காப்பு மற்றும் சண்டையிடும் முறையை உருவாக்கினார். இதுவே உலகின் அனைத்துத் தற்காப்பு கலைகளின் முதல் வேற்றமாக (Version) கருதப்படுகிறது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

காங்கிரஸ் கொடியும் அதன் பெயரும்ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்த செய்தி தான், நாட்டின் தேசிய கொடிக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, இரண்டு கொடிகளின் நடுவில் இருக்கும் அசோகா சக்கரமும், கையும் மட்டும் தான் வித்தியாசப்படும். இரண்டு கொடிகளை இப்படித் தான் வித்தியாசபடுத்திப் பார்க்கவேண்டும் எனும்போது நமக்குத் தெரிந்த விசயம் அயல் நாட்டுக்காரர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம் தான். அவர்களைப் பொறுத்தவரை மேலே காவி நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கிழே பச்சை நிறமும், நடுவில் ஏதேனும் சின்னம் கொண்ட கொடியை நமது நாட்டின் தேசியகொடி என்று தவறாக நினைத்துகொள்கின்றனர்.படிக்காத மற்றும் கிராமப்புற மக்களின் மனதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இந்திய கட்சி என்றும் மற்றக் கட்சிகள் எதோ பக்கத்து நாட்டுப் பகையாளி கட்சிகள் போன்றதொரு தவறாக மனதில் உருவகப்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் கொடியையும் தேசிய கொடியையும் பார்க்கும் மாணவர்கள் மனதில் கட்சி கொடி மீது மறைமுகமாக ஒரு மரியாதையை உண்டுபண்ணுகிறது. 'சுதந்திரத்திற்குப் பாடுபட்டது காங்கிரஸ் இயக்கம்' என்று படிக்கும் மாணவர்கள் 'சுதந்திரத்திற்குப் பாடுபட்டது காங்கிரஸ் கட்சி' எனத் தவறுதலாகப் புரிந்து கொண்டு மேலும் காங்கிரஸ் என்ற சொல்லின் மீதான மரியாதை மேலும் அதிகமாகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற அரசு விழாக்களில் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கொடிக்கும் மரியாதை செய்யப்படுவது போன்றே எண்ணங்கள் ஓடுகிறது. இந்தக் கட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பு விருப்புகள் நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றைத் தவறுதலாகப் பாதிப்படைய செய்கிறது. இப்படிப் பல குழப்பங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்றதொரு குழப்பங்கள் விளைவிக்கக் கூடிய காங்கிரஸ் கொடியை யார் அடவு(Design)செய்தது்?, இதுபோன்று கட்சி கொடியையும், பெயரையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாமா?,இதுபோன்றதொரு கொடியையும் பெயரையும் கட்சிகள் கொண்டிருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...