இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும் இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிக்குள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்ரா, ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும்.
தமிழ் - சங்க இலக்கியங்களில் இமயம்
* சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான் [ அகம் 127]
* வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் 'வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு' கொண்டது [ புறம் 39]
* வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன் [ சிறுபாணாற்றுப்படை 48]
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். [ பதிற்றுப்பத்து பதிகம் 2]
* இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். பதிற்றுப்பத்து [ 2ஆம் பத்து - பாடல் 11]
* வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் [ பதிற்றுப்பத்து 43]
* வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும் [ புறம் 132]
* பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர் [ புறம் 369]
* என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி [ நற்றிணை 369]
* நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். [ அகம் 265]
* சிவன் திரிபுரம் எரித்தபோது இமயம் அவனுக்கு வில்லாயிற்று. -கதை [ பரிபாடல் திரட்டு 1]
* இமயத்தை வில்லாக்கிக்கொண்ட சிவன் கதை பேசப்படுகிறது [கலித்தொகை 38]
* அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம். மற்றொன்று பொதியில். அந்த முத்தீ விளக்கொளியில் பெரிய பெண்மான் உறங்குமாம். இந்த இரு மலைகளையும் போலப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் உயர்விலும், புகழிலும் நடுக்கம் இல்லாமல் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார் [ புறம் 2
சுருங்கச் சொன்னால் பனியும் நீரும் நிறைந்த மலை இது.
இமம் (பனி) + அயம் (நீர்) = இமயம்
இமயவதி [haimavati]
இமவந்தம் [The Himālaya Mountain]
இமாலயம் [The Himālaya Mountain]
சிமயம் [The Himalayas]
பர்வதராசன் [The Himālayās, as the king of mountains]
பருவதராசன் [The Himālayās, as the king of mountains]
பூதரம் [The Himālayas] =
இமயவதி [haimavati]
இமவந்தம் [The Himālaya Mountain]
இமாலயம் [The Himālaya Mountain]
சிமயம் [The Himalayas]
பர்வதராசன் [The Himālayās, as the king of mountains]
பருவதராசன் [The Himālayās, as the king of mountains]
பூதரம் [The Himālayas] =
இமயம் என்ற பெயர் தமிழே என்பதை அதன் வேர்ச்சொல் வழியே நிறுவலாம்.
ஒருகாலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்று சொல்வதற்கான ஆதாரங்களைக் கூட மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். ஆனால் பெயர்களை மறுக்க/மறைக்க முடியாது, அதன் வேர்ச்சொற்கள் காட்டிக்கொடுத்துவிடும்.
மேலும் இமயத்தை சுற்றியுள்ள பல இடங்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக