சொல் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நம்மிடம் நிலவினாலும் அடிப்படையில் சொல் என்பது ஒலிகளைச் சார்ந்தது. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே 'பேச்சு' என்றும் 'சொல்' என்றும் குறிப்பிடுகிறோம். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. சொற்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு விளக்கம் .
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-5)
சொல் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நம்மிடம் நிலவினாலும் அடிப்படையில் சொல் என்பது ஒலிகளைச் சார்ந்தது. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே 'பேச்சு' என்றும் 'சொல்' என்றும் குறிப்பிடுகிறோம். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. சொற்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு விளக்கம் .
தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-4)
கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அதை கலையிலக்கியங்களுக்கு பயன்படுத்த முடியாமலாகும். - எழுத்தாளர் ஜெயமோகன்
நம்மில் பலர் கார், பஸ், லாரி, போலீஸ், சினிமா, போட்டோ, பைக், மோட்டார், வக்கில், டாக்டர் இதுபோன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்தினால் என்ன தவறு என்றும், ஆங்கிலமும் இதுபோல் பல மொழிகளிடமிருந்து சொற்களை உள்வாங்கி வளர்ந்த மொழி தானே என்றும் கேட்பதுண்டு. இப்படியொரு கருத்தை நாம் கேட்க உண்மையில் வெட்கப்பட வேண்டும். ஆங்கிலம் ஒன்றும் தமிழுக்கு ஆசான் அல்லவே.
ஆனாலும் தற்போது நிலைமை அவர்கள் கேட்டது போலத்தான் உள்ளது. மிஞ்சிப் போனால் ஒரு 5 ஆயிரம் தமிழ்ச்சொற்களை மட்டுமே நாம் வழக்கில் பயன்படுத்துகிறோம், மற்ற சொற்கள் அனைத்துமே ஆங்கிலச் சொற்கள் மயமாக உள்ளது. இதனால் தமிழ் வளர்ந்து விட்டதா என்ன? அழிந்து தான் வருகிறது. சுத்தமான பாலில் ஒரு துளி நீர்ப்பட்டால் ஒன்றுமில்லை, ஆனால் ஓராயிரம் நீர்த்துளி பட்டால் என்னவாகும்? பாலின் சுவை மாறிவிடும். அதுபோல் தான் ஒவ்வொரு மொழியும், பால் எனும் ஒரு மொழியில் நீர் எனும் வேற்று மொழி சொற்கள் கலக்கும் போது அந்த மொழியின் சுவை குறைந்து கடைசியில் ஒரு காலகட்டத்தில் அம்மொழி கெட்டுவிடும் அல்லது அழிந்துவிடும்.
சனி, 5 அக்டோபர், 2013
தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)
இணையத்தில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். அதில் கேட்கப்படும் கேள்விகள் உண்மையில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிச் சற்று சிந்திக்க வைக்கிறது. நாம் பின்பற்றும் சொல்லாக்க முறை பழங்காலத்திய சொல்லாக்க முறைகளில் இருந்து முற்றிலும் முரண்பட்டு/ தடம்புரண்டு செல்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அக்கட்டுரையின் ஆசிரியர் பிரபலமான பதிவரா அல்லது தமிழ் சொல்லாக்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவரா என ஆராய்வதைக் காட்டிலும், அவர் கூறும் கருத்தை நாம் ஆராயவேண்டும். உண்மையில் சாதாரணத் தமிழனின் மனதில் இருக்கும் தமிழ் சொற்களைப் பற்றிய ஒரு ஏக்கமாக/எண்ணமாகத் தான் நான் அந்தப் பதிவை பார்க்கிறேன். இதோ அக்கட்டுரையிலிருந்து சில பாகங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?
இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...
-
தமிழ் இலக்கியங்கள் வெங்காயத்தை குதம், நீருள்ளி, பூவண்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறது. இந்த வெங்காயம் என்ற சொல்லை பண...
-
உலகின் தற்காப்பு கலைகளின்(Martial arts) வேர் எங்கிருந்து ஆரம்பித்தது? என்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் போதிதர்மர் என்ற பெயரில் போய் முட...
-
தமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன. அவை அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, க...