சனி, 20 ஜூன், 2015

வெங்காயம் என்ற சொல் உருவான விதம்




தமிழ் இலக்கியங்கள் வெங்காயத்தை குதம், நீருள்ளி, பூவண்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.  

இந்த வெங்காயம் என்ற சொல்லை பண்டைய தமிழன் எப்படி உருவாக்கினான் என்பதைப் பார்ப்பதற்கு முன், வெங்காயத்தைக் குறிக்கும் எந்த சொற்களும் தமிழில் இல்லை என வைத்துக்கொள்வோம். வெங்காயம் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் புதிது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போதுள்ள தமிழர்களிடம் இந்தப் பொருளுக்குப் பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பார்கள்? 

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் முயற்சி செய்யுங்கள். 

கண்ணீர் கிழங்கு என்று வைக்கலாமா?
உறி கிழங்கு என்று வைக்கலாமா?

தோல் கிழங்கு என்று வைக்கலாமா?
வேறு என்ன பெயர்கள் வைக்கலாம்?  

மிக மிகக் கடினமான ஒன்று தானே. நாம் இப்படித் தான் தமிழில் பல பொருட்களுக்கு தமிழில் புதிதாக பெயர்களை வைத்து வருகிறோம். இதனால் தமிழ் உயர்வு பெறுகிறது என்று சொல்லிச் சொல்லி தமிழை தாழ்த்தி வருகிறோம். தமிழின் சுவையில் உப்பை அள்ளி கொட்டுகிறோம்.

சரி வெங்காயம் என்ற சொல் எப்படி உருவானது? 

மிகவும் சுலபம். நம்மைப் போலப் படைய தமிழன் மிகவும் கடினப்பட்டு பெயர் வைக்கவில்லை. அதன் பயனை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைத்துள்ளான்.

எப்படி? 

வெங்காயம் உடம்பில் உள்ள சூட்டை தணிப்பதில் எல்லாக் காய்கறி வகைகளிலும் முதன்மை வைக்கிறது. 

சூடு என்பதற்கு காயம் (Heat) என்ற இன்னொரு பெயர் உண்டு. 

அதேபோல் வென்(அ) வெண் என்றால் வெல்லுதல் (Victory) என்ற பொருள்.

வென் + காயம் = வென்காயம் (அ) வெண்காயம் > வெங்காயம் சூட்டை வெல்லும் இந்தப் பொருளுக்கு வெங்காயம் என்ற பெயர் வைக்கப்பட்டது. 

இது தான் தற்காலச் சொல்லாக்க முறைக்கும் அக்காலச் சொல்லாக்க முறைக்கும் உள்ள மிகபெரிய வேறுபாடு.

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...