சனி, 5 மார்ச், 2016

மேகம் எனும் சொல் எவ்வாறு பிறந்தது?



தமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன.

அவை

அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, கங்கைதூவி, கதம்பம், கந்தரம், கமஞ்சூல், கம், கரு, கார், காளிகம், குயின், குயில், கொண்டல், கொண்மூ, சலதம், சீதம், செல், சோனம், தாராதரம், தையல், தோயதரம், நாகம், நீகம், நீரதம், பயோதம், பயோதரம், பரிசன்னியம், பருச்சனியம், பாட்டம், பாரணம், புதம், புயல், பெயல், பே, பேகம், பேசகம், மகாநாதம், மங்குல், மஞ்சு, மாகம், மாசி, மாசு, மாரி, மிகிரம், முகில், முதிரம், மெய்ப்பிரம், வனமுதம், வானம், வான், வாரிதம், வாரிநாதம், வாரிவாகம், வார், விசும்பு, விண், விண்டு, வெள்ளைநோய்

மேகம் என்றால் வானில் தென்படும் நீர்நிறை மண்டலம் என்று பொருள். இந்த நீர்நிறை கூட்டத்திற்கு எப்படி மேகம் என்று பெயர் வைத்தனர் நம் முன்னோர்கள். சரி பார்க்கலாம்.
வானில் திரியும் மேகத்தைக் காணும்போது நமக்கு மனதில் என்ன தோன்றுகிறது. நாம் அதை எப்படி சொல்லுவோம்.

- நுண்ணிய நீர் துளிகளின் கூட்டம் என்று சொல்லலாம்.

அல்லது

- வானில் மிதந்து செல்லும் வெள்ளை நிற கூட்டம் என்று சொல்லலாம்.

அதேதான் மேலே கூறிய இரண்டு பொருளையும் கொண்டு தான் மேகம் என்ற சொல் உருவாகியுள்ளது.

மே - என்றால் மேல் அல்லது மேலே என்று பொருள்.

கம் - என்றால் வெண்மை என்று பொருள் அல்லது நீர் என்று பொருள்.

மேலே திரியும் வெண்மை > மேலே வெண்மை > மேகம்

மேலே இருக்கும் நீர் > மேலே நீர் > மேகம்


பார்த்தீர்களா எவ்வளவு எளிமையாகச் சொல்லை உருவாக்கியுள்ளனர் நமது தமிழர்கள். இது போன்ற சொல்லாக்க நுட்பங்களைத் தற்காலத்திய சொல்லாக்க முறைகளில் பயனபடுத்தினால் நல்ல பல புதிய சொற்களை நாமும் உருவாக்க முடியும்.


இதுதான் தற்காலத்தில் நாம் ஆங்கிலத்தை மொழிப்பெயர்த்து தமிழில் சொற்களை உருவாக்கும் சொல்லாக்க முறைக்கும் அக்காலத்திய சொல்லாக்க முறைக்கும் உள்ள வேறுபாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...