உலகின் தற்காப்பு கலைகளின்(Martial arts) வேர் எங்கிருந்து ஆரம்பித்தது? என்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் போதிதர்மர் என்ற பெயரில் போய் முடிகிறது. ஆம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த புத்தமதத்தைச் சார்ந்த பல்லவ மன்னன் போதிதர்மன் தான் முதல்முறையாக எதிரிகளிடம் இருந்து ஆயுதமில்லா நிலையில் தனி மனிதன் ஒருவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளச் சண்டையிடும் புதிய முறையை உருவாக்க முயன்றார். அப்போது தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான வர்மகலையை அடிபடையாகக் கொண்டும், விலங்குகள் மற்றும் பறவகைகள் சண்டையிடும் அசைவுகளை மனிதனின் அசைவுகளுடன் இணைத்தும் புதிய முழுமையடையா தற்காப்பு மற்றும் சண்டையிடும் முறையை உருவாக்கினார். இதுவே உலகின் அனைத்துத் தற்காப்பு கலைகளின் முதல் வேற்றமாக (Version) கருதப்படுகிறது.
மேலும் கலையை மேம்படுத்தும் நோக்கில் தன் அரச அடிமைகள் 1000க்கும் மேற்பட்டவர்களை வைத்து மனித உடலை முடக்கும் அல்லது உயிரை எடுக்கும் பலவீனமான நிலைகளை (Point) வர்மத்தை பயன்படுத்தித் தாக்கும் அல்லது தட்டும் வழிமுறைகளை ஆராய்ச்சி செய்தார், நீண்ட ஆராய்சிக்கு பின்பு அதில் வெற்றியும் கண்டார். தான் உருவாக்கிய புதிய கலையைக் கொண்டு எதிரியின் உடலில் ஒருசில இடங்களில் ஊசியால் குத்துவது போன்று ஓங்கி அடிக்கும்போது எதிரியை நிலைதடுமாறச் செய்யவும் அல்லது உடல் இயக்கத்தை முடக்கவும் அல்லது உயிரையே எடுக்கவும் முடியும் என்று கண்டறிந்தார். இந்த நுட்பங்களைக் கொண்டுத்தான் உலகின் முதல் ஆயுதமில்ல போர்க்கலையை (Weaponless Fighting Art) மற்றும் மேம்படுத்தப்பட்ட தற்காப்புகலையை (Martial Art) உருவாக்கினார்.
தன் குரு ப்ரக்யதாராவின் கட்டளையை ஏற்றுப் புத்தமதத்திற்குத் தொண்டு செய்யும் நோக்கில் சீனா சென்ற அவர், மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கேயே தன் சேவைகளைத் தொடங்கிய அவர் மனம் மற்றும் தேகத்தில் சோர்வுற்ற நிலையில் இருந்த புத்த துறவிகளுக்கு முதலில் தான் உருவாக்கிய ஆயுதமில்லா சண்டை மற்றும் தற்காப்பு கலையைக் கற்றுகொடுக்கிறார். அதாவது முறையான உடற்பயிற்சி மூலம் துறவிகளின் மனம் மற்றும் தேகத்தைத் திடப்படுத்துவது தான் பயிற்சியின் அடிப்படை தத்துவமாகும். அவ்வாறு அவர்களுக்குக் கற்றுகொடுக்கபட்ட கலை தான் குத்துசன்டையின் (Boxing) ஷாவொலின் அலகு(Style) என்று அழைக்கப்படுகிறது. போதிதர்மர் பயிற்றுவித்த நுட்பம் தான் சீனர்களின் அனைத்துத் தற்காப்பு கலைகளுக்கும் சாரமாக அமைந்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது கராத்தே எனும் தற்காப்புக்கலை ஜப்பானின் அக்கினவா(Okinawa) தீபகற்பத்தில் தோன்றுவதற்கு முன்பே சீனாவில் தோன்றியது எனச் சொல்வது சரியாக இருக்கும்.
சீனர்கள் மற்றும் ஜப்பானியார்களால் உலகிற்குப் பாரம்பரியமான முறையில் அறிமுகபடுத்தபட்ட அனைத்து தற்காப்புகலைகளின் அலகுகள் (Style) சீனாவின் ஷாவொலின் புத்தமடாலயத்தைத் தான் அடையாளம் காட்டுகிறது. அங்கு முறையாகக் கலையைக் கற்ற ஷாவொலின் மட புத்ததுறவிகள் உலகின் பல நாடுகளுக்குப் புத்த மதத்தைப் பரப்பும்பொருட்டு இடம் பெயர்ந்து சென்றனர்.
அப்படி இடம்பெயர்தவர்களில் ஒரு பகுதியினர் சீனாவின் அருகில் இருந்த ஜப்பானின் ஆளுகைக்கு உட்பட்ட அக்கினவ என்ற நிலபரப்பில் தங்கள் வாழ்கையைத் தொடங்குகின்றனர். ரூய்க்கு தீபகற்பத்தின் ஒரு பகுதி தான் அக்கினவ. ஜப்பான், சீனா மற்றும் தைவான் நாடுகளிருந்து சம தொலைவில் அமைத்துள்ளது இந்த நிலபரப்பு. அக்காலங்களில் இந்த மூன்று நாடுகளின் வர்த்தக மையமாக அக்கினவ திகழ்ந்ததுள்ளது. அதுமிட்டுமின்றி இந்திய, மலேசியா, தாய்லாந்து, புருனே மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கள் ஜப்பானுடனான வர்த்தகத்தை அக்கினவ தீவு வழியாகவே நடத்திவந்தன. அப்பகுதியில் வாழ்ந்துவந்த ஜப்பான் வணிகர்கள் கொள்ளைகாரகளிடம் இருந்து தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அக்கினவ பகுதியில் வாழ்ந்துவந்த சோலைன் மட புத்த துறவிகளிடம் இருந்து தற்காப்புக் கலைகள் மற்றும் ஆயுதமில்லா சண்டை கலைகளைக் கற்றுகொள்கின்றனர். கையை மட்டும் முதன்மையாகக் கொண்டு இக்கலை விளங்குவதால் இதற்கு டே (Te) அல்லது கர(Kara) என்ற பெயர் கொண்டு அழைத்தனர்.
இவ்வாறு ஆண்டுகள் செல்லச்செல்ல இந்தக் கலை அக்கினவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. அக்கினவ என்பது ஷுரி, நஹா, தொமரி என மூன்று முக்கிய நகரங்களைக் கொண்டது. இந்த நகரங்களில் மூன்று வெவ்வேறு டி (Te) தற்காப்பு முறைகள் மேம்படுத்தப்பட்டன. ஷுரி- டி(Shuri-te) , நஹா- டி( Naha-t) மற்றும் தொமரி- டி(Tomari-te) என மூன்று வகைகளில் டி (Te) என்ற கலை விரிவடைந்தது. மூன்றையும் சேர்த்து அக்கினவ- டி(Okinawa-Te ) அல்லது டோடி(Tode) என்று அழைத்தனர்.
டோடி(Tode) என்ற சொல்லை மேம்படுத்திய தற்காப்பு கலைக்குப் பயன்படுத்துவது சரியாக வராது, எனச் சில ஜப்பானிய டோடி அறிஞர்கள் கருதினர், எனவே அக்கலைக்குச் சரியான சொல்லை உருவாக்க முற்பட்டனர். டோடி(Tode) என்றும் கர(Kara) என்றும் அழைக்கப்பட்ட தற்காப்பு கலையின் சீன சொல்லில் இருந்த டு(To) எனும் சொல்லுக்குப் பதில் கர(Kara) எனும் அதே பொருள் கொண்ட சொல்லை நுழைத்து kara te - jutsu (Chinese hand art) அதாவது Kara+te = Karate (கராத்தே) என்று புதிய சொல்லை உருவாக்கினர். ஜப்பான் மொழியில் கர(Kara) என்றால் வெற்று (Empty) என்று பொருள் டீ(Te) என்றால் பாதை அல்லது போக்கு என்று பொருள். ஜப்பான் மொழியிலும் கராத்தே என்ற சொல் சரியாக ஒத்துபோனதால் கராத்தே என்ற சொல் அனைவராலும் ஒத்துகொள்ளபட்ட சொல்லாக வழக்கத்தில் பயன்படுத்தபடுகிறது.
இங்குத் தான் நாம் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழில் கை என்பதற்குக் கரம் (Karam) என்று பெயர் தாக்குவதை ‘அடி(Strike)’ என்றும் சொல்லலாம். அதாவது கராத்தே என்றால் கையால் தாக்குவது என்று தமிழில் சொல்லலாம். இந்த இரண்டு தமிழ் சொற்களையும் பயன்படுத்தித் தான் சீனர்கள் கர(Kara) என்றும் டி(Te) என்றும் அக்கலையை அழைக்கின்றனர்.
கரம் > கர (Kara) என்று மருவி உள்ளது.
அடி > டி (Te) என்று மருவி உள்ளது.
போதிதருமர் என்ற தமிழர் எப்படி அவருடைய தற்காப்பு கலைக்குத் தன் தாய் மொழியின் பெயரை வைக்காமல் போவார்?. இந்த உண்மையை அனைவரும் தெரிந்துகொண்டாலே இந்த உண்மை விளங்கும்.
மேலும் இந்த உண்மை சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் நிச்சயம் தெரியும். ஆனாலும் கராத்தே பற்றிய எந்தவொரு வரலாற்று குறிப்புகளிலும் கராத்தே என்ற சொல் தமிழ் சொல்லின் மருவல் தான் என்று காட்டிக்கொள்ளவில்லை. இந்தியாவைச் சேர்ந்த கோகினோ கராத்தே என்ற அமைப்பு கராத்தே என்ற சொல்லைப்பற்றிக் கூறும்போது, கராத்தே என்ற சொல்லுக்கும் தமிழ் சொல்லுக்கும் ஒற்றுமை இருப்பதை மட்டும் குறிக்கிறது.
ஆனால் காரத்தே என்ற சொல்லை உச்சரிக்கும் நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் இது தமிழ் சொல் தான் மருவி உள்ளது என்று தெரியாமல் போனது ஏனோ!. எனவே இனி கராத்தே என்றச்சொல் சீன சொல்லோ அல்லது ஜப்பானிய சொல்லோ இல்லை. அது நம் தமிழ் சொல் தான் என்று அனைவரிடமும் கொண்டுச்செல்லுங்கள்.
தமிழில் கராத்தே என்ற சீனா சொல்லை கராத்தி என்று அழைக்கலாம். நன்றி : பூச்சரம்.நெட்
http://poocharam.net/viewtopic.php?f=54&t=291&p=1253#p1253
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக