திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தெரியாத மொழியில் இணையத்தேடல் செய்து பார்க்க, படிக்க முடியுமா? (மொழி ஒரு பொருட்டல்ல)

 நாம் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே இணையத்தில் விவரங்களைத் தேடுகிறோம்(Search) ,பார்க்கிறோம்(Show) , படிக்கிறோம் (Read) மற்றும் பின்னூட்டம்(Comments) செய்கிறோம். பெரும்பாலும் தமிழ் அல்லது ஆங்கில மொழியைத் தான் இணையத்தில் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் உள்ள தரவுகளை மட்டுமே மொழிப்பெயர்ப்புச் செய்து தமிழில் உலவ விடுகிறோம். மற்ற மொழிகளில் உள்ள தரவுகள் யாவும் நமக்கு இரவுகள் போன்றது தான்.தமிழ் மொழி இயற்கையாகவே இலக்கியச் செறிவு மிகுந்தது. இணையத்தமிழில் இலக்கியம், கவிதைகள், மொழியாய்வுகள், நாட்டு நடப்புகள், திரைப்படச் செய்திகள், வாழ்க்கை சிந்தனைகள் மற்றும் யோசனைகள், நாட்டு மருத்துவம், சமூகப் பார்வை, போராட்டங்கள் , கேளிக்கை, அரட்டை என்று குறிப்பிடும்படியான வகைகளில் மட்டுமே செய்திகள்(அ) தரவுகள் கிடைக்கின்றன. தமிழில் அறிவியல், நுட்பியல்(Technology), கண்டுபிடிப்புகள், கணினி, மருத்துவம் தொடர்பான தரவுகள் மிக மிகக் குறைவு.

ஆங்கிலத்தில் இலக்கியத் தொடர்பான செய்திகள் மற்றும் தரவுகள் குறைவு, மற்றபடி அனைத்துத் துறை சார்ந்த செய்திகளும், தரவுகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலத்தில் எத்துறை சார்ந்த செய்திகளையும் தேடலாம், படிக்கலாம். ஆனாலும் ஆங்கிலத்தில் இல்லாத பல செய்தி வளங்களை உலக மொழிகள் பலவும் கொண்டுள்ளன. உதாரணமாக
  1. ரஷ்யா மொழி நவீன விண்வெளி , பாதுகாப்பு, அணுவியல் தொடர்பான செய்திகள் மற்றும் தரவுகளை அதிகம் கொண்டுள்ளது.
  2. ஜெர்மன் மொழியில் இயற்பியல், வேதியல், வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான தரவுகளை ஏராளம் கொண்டுள்ளது.
  3. சீன மொழியில் ஆற்றல், உற்பத்தி, கட்டுமானம், சுரங்கம், விவசாயம் போன்ற துறை சார்ந்த செய்திகள் ஏராளம் உண்டு.
இதுபோல் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஏதேனும் ஒரு துறைகளில் வல்லவர்களாக உள்ளனர். அவர்கள் அத்துறை சார்ந்த நுட்பங்கள், செய்திகள், கண்டுபிடிப்புகள் போன்ற அறிவுசார் தரவுகளை முதலில் அவர்கள் தம் நாட்டின் மொழியில் தான் வெளியிடுகின்றனர். அதைச் சார்ந்த விவாதங்கள், சந்தேகங்கள், கட்டுரைகள், நிறைகுறைகள் போன்ற அனைத்து நிகழ்வுகளும் அந்நாட்டு மொழிகளில் தான் நடைபெறுகிறது. அதன் பின்னரே மற்றமொழிகளுக்குச் செல்கிறது.

இதுபோன்று உலகமொழிகளில் பலவற்றிலும் கொட்டிகிடக்கும் நமக்குத் தேவையான தரவுகளை எவ்வாறு தேடி கண்டுபிடிப்பது (Search) ? அவற்றை எப்படி படிப்பது (Read)? படித்த செய்திகளை நம்முடைய மொழிக்கு எவ்வாறு கொண்டு வருவது? இவை அனைத்திற்கும் அந்த மொழியை அவசியம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?

உலக மொழிகள் எதுவும் தெரியாமல் நமக்குத் தெரிந்த மொழியில் மேலே கூறியவாறு இணையத் தேடல்கள் (Web Search) செய்யமுடியுமா? அவ்வாறு தேடல் செய்தாலும் அவற்றைப் பார்க்க, படிக்க முயுமா? அந்தச் செய்திகளை நம்முடைய மொழிக்கு  கொண்டுவரமுடியுமா? --- பதில் ஒன்று தான். முடியும்.

தற்காலத்தில் நம் கைகளில் தவழும் நவீன நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டு எந்த ஒரு உலக மொழியிலுள்ள செய்திகளைப் பார்க்க, படிக்க, தேட , மொழிப்பெயர்ப்புச் செய்ய முடியும். நாம் இணையம் என்றால் திரைப்படச் செய்திகளைப் படிக்கவும், நடிகர், நடிகை நிழம்புகளைப் பார்க்கவும், அரட்டையடிக்கவும், நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், கவிதை எழுதவும் மட்டும் தான் எனப் பெரும்பாலும் நினைக்கின்றோம், இது தவறு.

நான் இந்த இடுகையின் மூலம் ரஷிய மொழி தெரியாமல், அம்மொழியில் அந்நாட்டின் இணையதளங்களில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பதிவுகளை எவ்வாறு தேடி படிப்பது மற்றும் மொழிபெயர்ப்புச் செய்து தமிழ் கட்டுரையை உருவாக்குவது எனக் காட்டுகிறேன். ஒருவேளை இந்த முறை தங்களுக்கும் தெரிந்திருக்கும் ஒன்றாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு ரஷிய மொழியில் "மறுபிறவி"  என்பதை பற்றி உள்ள தரவுகளை எவ்வாறு தேடிப்படிப்பது எனப் பார்ப்போம். இதற்குக் கூகிள் குரோம் உலவி தான் சரியான துணை, ஏனென்றால் இதுபோன்ற வசதிகளைக் கூகிள் நிறுவனம் தன்னுடைய உலவியில் மட்டுமே தருகிறது.

1) கூகிள் குரோம் உலவியைத் திறந்து கொள்ளவும். அதில் மொழிப்பெயர்ப்பு பயன்பாட்டு பக்கத்தைத் திறந்துகொள்ளவும் - https://translate.google.com/

2) படம்-1 இல் உள்ளதுபோல் "மறுபிறவி" என்ற தமிழ் சொல்லுக்கு ரஷிய மொழியின் சரியான சொல்லை மொழிப்பெயர்ப்பு செய்துகொள்ளவும்.

படம்-1


3) ரஷிய மொழி சொல்லை தேர்வு(Select) செய்து படம்-2 இல் உள்ளதுபோல் இணையத் தேடல்(Web Search) செய்யவும்.

படம்-2
4) கிடைக்கும் முடிவுகள் படம்- 3 உள்ளதுபோல் ரஷிய மொழியில் காணப்படும்.

படம்-3

5) ரஷிய மொழி தேடல் முடிவுகளை (Search Result) எவ்வாறு படிப்பது ? படித்தால் தானே நமக்குத் தேவையான இணையப்பக்கத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். இதோ படம்-4 இல் உள்ளது போல் வலச்சொடுக்கு (Right Click) செய்து "Translate To English" என்ற உகப்பை (Option) தேர்வு செய்யவும்.

படம்-4

6) இப்போது அத்தேடல் முடிவுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நாம் படிக்கும்படியாகப் படம்-5 இல் உள்ளது போல் மாறிவிடும். தமிழில் பார்க்கவேண்டுமென்றால் படம்-6 இல் உள்ளது போல் மாற்றிக்கொள்ளவும்.

படம்-5
படம்-6
7) ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ரஷிய மொழி தேடல் முடிவுகளில் எந்த இணையப் பக்கத்தைப் படிக்க வேண்டுமோ அத்தொடுப்பை(Link) வலச்சொடுக்கு (Right Click) செய்து புதிய தத்தலில் (tab) படம்-7 இல் உள்ளது போல் திறக்க வேண்டும்.


படம்-7


 8) இவ்வாறு புதிய தத்தலில் (Tab) திறக்கப்பட்ட இணையப்பக்கம் படம் - 8 இல் உள்ளது போல் ரஷிய மொழியில் தெரியும்.


படம்-8


 9) முறை - 5 இல் சொல்லப்பட்டதுபோல் மீண்டும் வலச்சொடுக்கு (Right Click) செய்து "Translate To English" என்ற உகப்பை (Option) தேர்வு செய்யவும். படம்- 9 ஐ பார்க்கவும்.

படம்-9
 10) இப்போது அந்த ரஷ்ய இணையத்தளம் நீங்கள் படிக்கும்படியாக அத்தளத்தின் உள்ளடக்கம் படம்-10 இல் உள்ளதுபோல் ஆங்கிலத்தில் மாறிவிடும். தமிழில் பார்க்கவேண்டுமென்றால் படம்-6 இல் உள்ளது போல் செய்யவும்.
படம்-10அவ்வளவு தான். இனி நாம் ரஷ்ய இணையத்தளத்தைப் படிக்கலாம்.

பெரும்பாலும் பிற மொழிகளை இந்திய மொழிகளில் மொழிப்பெயர்ப்புச் செய்து படிப்பதை விட ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்புச் செய்து படிப்பது சரியாக வருகிறது. தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்து படிப்பது அவ்வளவு சரியாக வருமென்று சொல்லமுடியாது. எனவே தான் இந்தச் செயல்முறையை ரஷிய மொழி --> ஆங்கிலம் மொழிப்பெயர்ப்பை கொண்டு விளக்கியுள்ளேன்.

நாம் இதுபோன்ற வசதிகளை மேலும் மேலும் பயன்படுத்தும் போது மட்டுமே இதிலுள்ள குறைகள் களையப்பட்டு இவ்வசதி மேலும் மேம்படுத்தப்படும். எதற்கும் தேவைகள் என்ற ஒன்று இருந்தால் தானே வசதிகள் என ஒன்று கிடைக்கும், கூகுள் நிறுவனம் இவ்வசதியை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டும். எனவே இனி ஆங்கிலம் தான் எல்லாம் என்றில்லாமல் பிறமொழி இணையதளங்களைப் படிக்கும் வகையில் நாம் செயல்படலாம்.

இந்த முறையில் நான் ரஷிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து உருவாக்கிய உண்மைச் சம்பவ கட்டுரை ஒன்றின் தொடுப்பைத் தருகிறேன், முடிந்தால் பாருங்கள். இந்தச் செய்முறை நுணுக்கத்தின் உண்மையான தரத்தை அறியலாம்.

ரஷ்ய மொழி தொடுப்பு - http://mvny.ucoz.ru/blog/rozhdennye_zanovo/2013-02-10-677

இறப்பிற்கு பின் உயிர் என்னவாகும் - உண்மை சம்பவ தொடர் (பகுதி - 1)

இறப்பிற்கு பின் உயிர் என்னவாகும் - உண்மை சம்பவ தொடர் (பகுதி-2)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...