இங்கு தான் தங்கள் நிறுவன பெயரைச் சந்தைபடுத்தும் உத்தியை இந்நிறுவனம் மேற்க்கொண்டுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல இந்திய செல்பேசி நிறுவனங்களான மைக்ரோமாக்சு(MicroMax), லெமன்(Lemon), ஏர்போன்(AirPhone), ஒனிட(Onida), லாவா(Lava), கார்பன்(Karbonn) போன்றவை தங்களை பற்றியும் தங்களது தயாரிப்புகள் பற்றியும் இந்திய நுகர்வோர்களிடம் சந்தைபடுத்தும் பொருட்டு சுமார் 50 - 100 கோடி ரூபாய்களை தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் விளையாட்டு பேட்டிகளில் செலவிட்டுள்ளன. சுமார் 2500 விலை மதிப்புடைய செல்பேசியை ரூபாய் 251 விற்கும்போது ரிங்க்பெல் நிறுவனத்திற்கு சுமார் 2249 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த நட்டம் மற்ற நிறுவனங்களைப் போல விளம்பரதிற்க்காகச் செலவிடும் தொகையைவிட மிகக் குறைவானதாகும். எப்படி?
விவரம் | மதிப்பு |
சராசரியாக ஒரு செல்பேசி விலை | 2500 ருபாய் |
விற்பது | 251.ருபாய்/ஒன்றுக்கு |
நட்டம் | 2249 ருபாய்/ஒன்றுக்கு |
1 லட்சம் செல்பேசிகளை விற்பனை செய்யும்போது | 224900000 ரூபாய் நட்டம். |
மொத்த நட்டம் | 22 கோடி |
அதாவது
22 கோடி ரூபாயை இந்நிறுவனம் தங்களை இந்தியாவில் சந்தைபடுத்த விளம்பர
தொகையாகச் செலவு செய்கிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது இந்தத் தொகை
50-60% குறைவு. எந்த ஒரு நிறுவனங்களும் விளம்பரத்திற்கு செலவிடும் தொகையை
நட்ட கணக்கில் சேர்ப்பதில்லை, இவற்றைத் தொழிலை மேம்படுத்தும் ஒரு
முதலீடாகவே எடுத்துக்கொள்கிறது. ரிங்க்பெல் நிறுவனமும் அப்படியே தான்.
இப்போதைக்கு அவர்களுக்கு இலாபம் முக்கியமல்ல, தங்கள் நிறுவனத்தின் பெயரும்,
அவர்கள் தாயாரிப்புகள் பற்றிய பேச்சு நாட்டின் மூலைமுடுக்கு வரை ஒலிக்க
வேண்டும் என்பதே. இவர்கள் திட்டமிட்டபடியே இன்று இந்தியாவில் இவர்களை
பற்றிப் பேசாதவர்கள் எவருமில்லை. இவர்களின் தயாரிப்புபற்றி நல்ல ஒரு
விளம்பரம் வெறும் 22 கோடிகளில் கிடைத்துள்ளது என நினைக்கும்போது,
உண்மையில் இது சிறந்த வியாபார உத்தியாகவே கருதப்படுகிறது. இந்த 22 கோடி முதலீடு
இனிவரும் காலங்களில் இவர்கள் தயாரித்து விற்பதாகச் சொல்லிகொள்ளும்
செல்பேசிகளை நல்ல விலையில் விற்க ஒரு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது.
Make in India திட்டம் என்பது பொருட்களை வாங்கி விளம்பரம் செய்து விற்பது மட்டுமே. இந்த திட்டத்தால் பயனடைவது சீனர்களே தவிர இந்தியர்கள் அல்ல. வழக்கம்போல இந்தியர்கள் வெறும் நுகர்வோர்கள் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக