வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

Wind - விண்டு என்பது தமிழ் சொல்லேஆங்கிலத்தில் Wind என்பதற்கான பொருள் - Wind is the flow of gases on a large scale, அதாவது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிப்பதாகும்.

Wind என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்னவென்றால் பெரும்பாலும் நாம் காற்று, வளி, வாயு போன்ற சொற்களை தான் சொல்லுவோம். ஆனால் Wind என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் விண்டு என்ற தமிழ் சொல் தான்.

விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி. (கந்தபு. தாரக. 2)

விண் டுறை தேவரும் விலகிப்போயினார் (கம்பரா. கிளைகண்டு. 138)

தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி (மதுரைக். 202)
- இலக்கிய சொல்லாடல் சான்றுகள்
தமிழில் விண்டு என்றால் காற்று, ஆகாசம், திருமால், மேலுலகம், மேகம், மலை, மூங்கில், இளமை என்ற பொருள்கள் உண்டு. விண்டு என்ற வேர்ச்சொல்லை கொண்டுள்ள சில சொற்கள்.
சொல் பொருள் பகுப்பாய்வு விளக்கம்
விண்கோ இந்திரன்விண் + கோ (அரசன்) விண்ணின் அரசன்
விண்டலம் மேலுலகம் விண் + தலம் (இடம்)மேலே உள்ள உலகம்
விண்டாண்டு ஊஞ்சல் விண்+ ஆட்டு (அசைதல்) காற்றினில் அசைந்தாடும் பொருள்.
விண்டுகம் தாமரை விண்டு + உகம் (இணை - Pair) ஆகாசத்தின் இணையாக
விண்டேர் விண் தேர் விண் + தேர் விண்ணில் இருக்கும் தேர்.
விண்முழுதாளி இந்திரன் விண் + முழுது + ஆளி விண்ணை முழுமையாக ஆள்பவன்.
விண்ணு திருமால் - வடமொழி சொல்லான விஷ்ணு என்ற சொல் இந்தச் சொல்லிலிருந்து உருவானது.
விண்ணாணம் விஞ்ஞானம்விண் + ஞானம் விண்ணை பற்றிய ஆறிவுக்கு விஞ்ஞானம் என்று பெயர்.


தற்போது விண்ணில் உலக நாடுகள் அனைத்தும் இணைத்து ISS (International Space Station) என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த ISS என்ற குறியீடுக்கு பெயருக்கு பதில் தமிழில் விண்டளம் என்று கூட அழைக்கலாம். விண் + தளம் என்றால் Floor or deck of a ship என்று பொருள்.

தாமரை காலையில் மலரும். மாலை நேரத்தில் குவியும். காலையில் ஆகாசத்தை நோக்கித் தாமரை மலரும். மாலையில் ஆகாசம் தெரியாததால் குவியும். இந்தப் பண்பு மனைவி கணவன் அருகில் இருக்கும்போது மகிழ்வதும், அருகில் இல்லாதபோது துவண்டிருப்பதும் போன்ற பண்பை ஒத்துள்ளதால் தாமரைக்கு விண்டுகம் அதாவது ஆகாச இணை (Pair) என்ற பெயர் உண்டானது.

Window அதாவது Wind + open. காற்றை பெறுவதற்கு அமைக்கப்பட்ட அமைப்புக்கு Window என்பது குறிப்பிடத்தக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...