புதன், 17 ஜூலை, 2013

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்

இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது. உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

1) ஆங்கிலம்


 உலகில் 500 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் 2 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களது தகவல் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ளது.

2) பிரெஞ்சு


பிரெஞ்சு உலகின் இரண்டாவது மிக செல்வாக்கு மிக்க மொழியாக திகழ்கிறது. 25 நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. ஆங்கிலத்திற்கு அடுத்து மிகவும் பிரபலமான மொழியாக பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.3) ஸ்பானிஷ்இதை கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர் . 20 வது நாடுகளில் பொது மொழி மற்றும் இரண்டாவது மொழியாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது.


4) அரேபிக்ஆங்கிலம் மற்றும் பிரஞ்சுக்கு அடுத்து அரபு மிக பெரிய மொழியாகும். இது இஸ்லாமியத்தின் மொழி என்ற தனது நிலைப்பாடால் இதை இன்று 100 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 20 நாடுகளில் முதமை மொழியாக பயன்படுத்துகின்றனர்.5) மாண்டரின்


இதை ஒரு பில்லியன் மக்கள் தனது தாய்மொழியாக பேசிவருகின்றனர். இது மற்ற பெரிய மொழிகளை பேசும் மக்களின் எண்ணிகையை போன்று 3 மடங்கு பெரியது. சீனாவில் பேசப்படும் மொழி, தென்கிழக்கு ஆசியா நாடுகள் தவிர உலகில் பல பகுதிகளில் இந்த மொழி பேசப்படுகிறது.6) ரஷ்யன்


200 மில்லியன் மக்கள் இதை தை மொழியாக கொண்டுள்ளனர். ரஷியன் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் இது பேசப்பட்டு வருகிறது.7) போர்துகீஸ்


200 மில்லியன் மக்கள் உலகளாவிய பேச்சு மூலம் , போர்த்துகீசியம் உண்மையில் தென் துருவத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, மற்றும் ஸ்பெயின் ஆகிய மொழிகளுடன் அதிகம் பேசப்படும் மொழி.8) ஜெர்மன்

120 மில்லியன் மக்கள் இத மொழியை பேசுகின்றனர். ஜெர்மன் நாட்டின் முதல் மொழியான இது தொழில்நுட்ப துறைக்கு நெருங்கிய மொழியாகும். இதனால் உலகம் முழுதும் இதன் வளர்ச்சி கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.9) ஜப்பானிஸ்
சுமார் 120 மில்லியன் பேர் இந்த மொழியை பேசுகின்றனர், அவர்கள் பெரும்பாலும் ஜப்பான் எல்லைகளில் வாழ்கிறார்கள். இதை அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ளும் மொழி அல்ல.இதன் விளைவாக அதன் மொழி ஜப்பானின் தொழில் மற்றும் வர்த்தக பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெறவில்லை.
10) ஹிந்தி/உருது
இது உருது மொழியுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. தங்கள் எழுத்து முறையில் மட்டுமே வேறுபடுகின்றன. உருது, பாக்கிஸ்தான் உத்தியோகபூர்வ மொழி, ஹிந்தி, இந்தியாவின் அதிகமாக பேசப்படும் மொழி.உருது அரபு எழுத்துக்களை கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுதுக்களை கொண்டது.இரண்டு மொழிகளையும் சேர்த்து சுமார் 200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழிகளை தங்களது இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.11) மலாய்


சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழியை உலகம் முழுதும் பேசுகின்றனர். மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த மொழி பேசப்படுகிறது.12) பார்சி(பிரிஷியன்)


100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. மத்திய ஆசியாவில் "மதிப்புமிக்க கலாச்சார மொழி" என கருதப்படும் நீண்ட வரலாறு கொண்டது.13) சுவாஹிலி


ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வர்த்தக மொழியாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது, சுவாஹிலி மொழியை சுமார் 100 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.இது பல நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும். இதன் செல்வாக்கு சீராக வளர்ந்து வருகிறது.14) தமிழ்முக்கியமாக இந்தியாவின் பல தென்னிந்திய மாநிலங்களில் பேசப்படுகிறது, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. செம்மொழியான அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ் மிகவும் தொன்மையானது. இந்த மொழியை உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.15) இத்தாலியன்ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 65 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது உலகில் பல பகுதிகளில் இரண்டாவது மொழியாக பேசப்படுகிறது, இந்த எண்ணிக்கையை சேர்த்து பார்த்தல் சுமார் 90 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத மொழியை பேசுகின்றனர். வாடிகனின் அதிகாரப்பூர்வ மொழி இது.16) டச்சு


50 மில்லியன் மக்களால் உலகம் முழுதும் பேசப்படுகிறது. இது ஐரோப்பா முதல் தென் அமெரிக்க மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது.17) பெங்காலி


200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இந்த மொழியை பேசுகின்றனர். பெங்காலி உலகின் ஆறாவது பேச்சு மொழியாகா கருதபடுகிறது. வங்காள தேசத்தில் இந்த மொழி அதிகளவில் பேசப்படுகிறது.
18) துர்கிஸ்


மத்திய ஆசியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 83 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு (middle east ) நாடுகளில் கணிசமான அளவில் பேசப்படுகிறது.
19) வியட்நாமிஸ்
உலகம் முழுதும் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். அந்தளவிற்கு சிறப்பான மொழி என்ற பெயர் இல்லை.இதை வியட்நாம் மக்கள் மட்டுமே பேசுகின்றனர்.20) போலிஸ்ரஷியன் மொழிக்கு பின்னர் இரண்டாவது மிக பரவலாக பேசப்படுவது போலிஸ் மொழி. சுமார் 46 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர்.21) ஜாவானீஸ்
ஜப்பனீஸ்-சுடன் குழப்பி கொள்ள கூடாது, ஜாவானீஸ் கிழக்கு ஆசிய தீவான ஜாவாவின் முதன்மை மொழி ஆகும். இந்தோனேஷியா அருகில் காணப்படும் ஜாவா தீவுகளில் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.22) பஞ்சாபி


சுமார் 90 மில்லியன் பஞ்சாபி பேசுபவர்கள் உள்ளனர். இதில் பெருன்பாலனோர் பாக்கிஸ்தானில் வசிக்கிறார்கள். இந்திய மாநிலம் பஞ்சாப்பில் முதன்மை மொழியாக இருக்கிறது. இது சற்று கடினமான மொழி என்றும் சொல்லப்படுகிறது.23) தாய்


உலகம் முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்காளால் பேசப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டின் தேசிய மொழி.24) கான்டோனிஸ்


உலகம் முழுவதும் சுமார் 60 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது தெற்கு சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் பேசப்படுகிறது.25) கொரியன்


வட கொரியா, தென் கொரியா, சீனா கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது என்றாலும், அது கொரிய தீபகற்பத்தில் எல்லைகளுக்கு அப்பால் அந்தளவிற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு அடையவில்லை.

ராஜு சரவணன் 

2 கருத்துகள்:

  1. அரிய தகவல்களை நாங்கள் அறிய தந்திருக்கிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  2. தமிழை மற்றவர்களிடம் பரப்ப நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்?

    பதிலளிநீக்கு

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...