புதன், 17 ஜூலை, 2013

ஈழத்தின் கதறல் - என் குமுறல்உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா

பெற்றவரை இழந்த உன் தவிப்பு மனதில் தீ நெருப்பு
சோற்றுக்கு இரக்கும் உன் அழைப்பு நெஞ்சில் பெரும் வெடிப்பு
தேற்றுவோர் இல்லா உன் பதைப்பு சிரத்தில் உடைப்புஇளைத்து போன பாலகன் அழுவது பசி கலைப்பிலா - இல்லை
பால்கொடுத்து பாதுகாத்து பார்த்து வளர்த்த தாய் இறப்பிலா - இல்லை
உங்களை பலிவாங்கபோகும் குண்டு பயத்திலா

குண்டுமழையில் நீங்கள் நனைந்தீர்களா - இல்லை
வண்டாய் பரந்த உலங்கு பீரங்கி பட்டு இறந்தீர்களா - இல்லை
மண்ணோடு மாண்ணாய் மக்கி விட்டீர்களா.

நடுவீதியில் நாதியற்று நிற்குது பார் என் இனம்.
கடைவீதியில் தள்ளாடி குடிக்குது பார் நம் ஜனம்

எம் அரசனுக்கு கிடைக்குது உன்னைவைத்து பணம்.

கதறும் உனை அணைக்காமல் போனதால் நெஞ்சில் பெரும் கணம்
என்னின அழிவிற்கு நாங்களே காரணம் என்ற உள்ளத்து ரணம்
தினம் தினம் விம்மியழும் நானோ உயிரில்லா நடை பிணம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...