வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை நேரடியாக இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற சொல்லும் அளவிற்கு எந்த ஒரு நுட்பங்களும் (Technology) கண்டுபிடிக்கப்படவில்லை. ஆற்றலை இழப்பை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.
என்ஜின் இழப்பு - 62.4%
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினில் ஏற்படும் உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% அதிக திறன் கொண்டவை.
வெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்
நகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.
உதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்
ஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடி வைப்பர் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.
ஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
என்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது.
காற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
பொதுவாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் செல்லும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் கூர்மையாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்புகள் சரிசெய்யபடுகிறது.
உருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்
வாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரத்தின் டயர்களில் உள்ள அச்சு வரிகளில் (Tread) சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.
தடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்
வாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு மாறுபடும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை கொஞ்சம் சரிகட்டலாம்.
இப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீண்ணடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது அறிவியல் அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்பு மூலம் குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் உலகளவில் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யாருக்கு தெரியும் ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (மின்விளக்கு கதைபோல)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக