புதன், 17 ஜூலை, 2013

என் கனவு காதலிஇயற்கை எனும் இல்லத்தில் பிறந்தவள் 

எழில் முழுதும் முன்னழக்கில் முடிந்தவள் 

பரந்தவெளி பின்னழகு கொண்டவள் 

பொன்னிற பூந்தேகம் புனைந்தவள் - யார் அவள் துள்ளும் மீனென விழி கொண்ட மானவள்

பனிபோன்ற பார்வையாலே கொல்பவள் 

சிரிப்பெனும் விஷம்கொண்டு மாய்பவள்

மலை சேரும் மடிப்பு கொண்ட இடையவள் - யார் அவள் 


துள்ளும் மானடி கால் கொண்ட மங்கையவள்

வளைந்து நெளிந்து நிலம் அளக்கும் கங்கையவள்

கொல்லும் நடையும் இடையும் கொண்ட ரம்பை அவள் 

நடையாலே கவிதை சொல்லும் நங்கை அவள் - யார் அவள்


தீயூட்டும் மணம் கொண்ட காற்றவள் 

மல்லிபூ வைத்து உயிர் கொன்று மீட்பவாள் 

மணமெனும் புயல் கொண்டு அடிப்பவள் 

மாற மணம் கொண்டே எப்போதும் இருப்பவள் - யார் அவள் 


அவள் தான் என் கனவு எனும் கார்மேகத்தை

கவிதை எனும் மழையாக மாற்றிய கனவு காதலி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...