பகுதி-1 பிணியம் (Link) http://puthutamilan.blogspot.in/2014/03/1.html
வ.எண் | சொல் | பகுப்பு | விளக்கம் | எதிர்பால் (ஆண்பால் அல்லது பெண்பால்) | கூடுதல் |
19 | தருமவாட்டி | தருமம் + ஆட்டி | தருமம் செய்யும் பெண். (Dharma women ,தருமவதி) | தருமவாளன் | |
20 | நுதனாட்டி | நுதனம் + ஆட்டி | நுதனமான (புத்திசாலியான) பெண்(intelligent women ) என்று பொருள். | ||
21 | பசியாட்டி | பசி + ஆட்டி | பசியால் வாடும் பெண். (Hungry woman) | ||
22 | பனுவலாட்டி | பனுவல்(நூல்) + ஆட்டி | நூலை கொண்ட பெண் அதாவது சரசுவதியை குறிக்கும் சொல்.(Sarasvati , as Goddess of sciences) | ||
23 | பெரியபிராட்டி | பெரிய + பிர + ஆட்டி | இந்த சொல் இலட்சுமி தேவியை குறிப்பதாகும். (Lakshmi , as chief consort of Vishnu) | ||
24 | பெருமாட்டி | பெருமை + ஆட்டி | பெருமைகள் கொண்ட பெண்.(Lady, mistress, princess) | பெருமான் | |
25 | பொருள்விலையாட்டி | பொருள்+ விலை+ஆட்டி | விலைமாது (Prostitute) என்று பொருள். பொருளைப்போல் விலைகொடுத்து வாங்குவது போல் பெண்ணையும் விலைகொடுத்து அக்காலத்தில் வாங்கியதால் இந்த சொல் உருவானது. | ||
26 | பொறையாட்டி | பொறுமை + ஆட்டி | பொறுமை குணம் கொண்ட பெண் அல்லது பொறுமையுள்ளவள் என்று பொருள். (Patient woman). | ||
27 | கடவுட்பொறையாட்டி | கடவுள் + பொறுமை + ஆட்டி | வாக்கு சொல்லும் பெண் அல்லது தேவராட்டி (Woman having oracular powers under divine inspiration heaviness) என்று பொருள். | ||
28 | மகவாட்டி | மகவு (குழந்தை செல்வங்கள்) + ஆட்டி | குழந்தை செல்வங்கள் கொண்ட பெண் என்று பொருள்.(Woman blessed with children) | குழந்தை பெறும் பாக்கியம் இல்லாத பெண்ணை மலடி என்று அழைப்பதை நினைவுப்படுத்துகிறேன். | |
29 | மருமாட்டி | மரு + ஆட்டி | மருமகள் என்று பொருள்(Female descendant). | ||
30 | மலையாட்டி | மலை + ஆட்டி | மலைநாட்டு பெண் என்று பொருள் (Woman of the mountainous region) | மலையான் | |
31 | மனையாட்டி | மனை (வீடு, இல்லம் ) + ஆட்டி | மனையை ஆளும் பெண் (மனைவி) அல்லது இல்லத்துணையாள் என்று பொருள். | மனையாளன் | |
32 | மாற்றாட்டி | மாற்று + ஆட்டி | மாற்று பெண் என்று பொருள். அதாவது சித்தி அல்லது சின்னம்மாள், மாற்றாள் (Stepmother) என்றும் சொல்லலாம். | மாற்றான் | |
33 | முப்பாட்டி | முன் + அப்பா(பா) + ஆட்டி | முதல் பாட்டி (Grandfather's grandmother) என்று பொருள். | முப்பாட்டன் | |
34 | மூதாட்டி | மூத்த + ஆட்டி | மூத்த பெண், அதாவது வயதான பெண்( Aged woman) என பொருள். | மூதாளன் | |
35 | வடமொழியாட்டி | வடமொழி + ஆட்டி அல்லது பார்ப்பனி | வடமொழி பேசும் பெண் அல்லது பார்ப்பனி(Brahmin woman) என்று பொருள். | ||
36 | வாழ்வாட்டி | வாழும் + ஆட்டி | குடும்பமாக, எவ்வித குறையுமின்றி நல்லபடியாக வாழும் பெண். | ||
37 | வாழாவாட்டி | வாழா + ஆட்டி | கணவனுடன் வாழாமல் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் பெண் (Married woman not living with her husband) | வாழாவாட்டி தான் வாழாவெட்டி என்று மருவி தற்போது பேச்சு வழக்கில் உள்ளது. | |
38 | விலையாட்டி | விலை+ ஆட்டி | பொருளை விற்கும் பெண் (Tradeswoman) என்று பொருள். | விலையாளன் | |
39 | வினையாட்டி | வினை(செயல், ஏவல்) + ஆட்டி | வேலை செய்யும் பெண் (Female servant) என்று பொருள். | வினையாளன் | |
40 | வெள்ளாட்டி | வெள்ளாமை (வேளாண்) + ஆட்டி | வேளாண் தொழிலை மேற்கொள்ளும் பெண். (வேளாண்மாந்தர்) | வெள்ளாளன் | |
41 | வேளாட்டி | வேளாண் + ஆட்டி | வேளாண் தொழிலை மேற்கொள்ளும் பெண். (வேளாண்மாந்தர்) | வேளாளன் (agriculturist) | |
42 | அகவாட்டி | அகம்(இல்லம்) + ஆட்டி | இல்லத்து பெண் (மனைவி-Wife) என்று பொருள். | அகவாளன் | |
43 | அடியாட்டி | அடிமை + ஆட்டி | அடிமை பெண் அல்லது வேலைக்கார பெண் (Woman servant) | அடியான் | |
44 | அந்தணாட்டி | அந்தணம் + ஆட்டி | அந்தண பெண் அதாவது பார்ப்பனி ( Brahmin woman) பெண்ணை குறிக்கிறது. | அந்தணாளன் | |
45 | இல்லாவாட்டி | இல்லாமை + ஆட்டி | பொருள் (செல்வம்) இல்லாத பெண் அதாவது வறியவள் (Destitute woman) என்று பொருள். | ||
46 | கண்வாட்டி | கண் + ஆட்டி | கணவனின் கண்ணில் இருக்கும் பெண் (wife), அதாவது மனைவி என்று பொருள். | கண்வாளன் | |
47 | தாட்டி | தாடு (வலிமை, Strength) + ஆட்டி | கெட்டிக்கார அல்லது திறன்வாய்ந்த பெண் (Clever woman) என்று பொருள். | ||
48 | சுத்தவாட்டி | சுத்த + ஆட்டி | சுத்தமான பெண் அல்லது தூயவள் (Pure, spotless woman) என்று பொருள். | ||
49 | பூமிபிராட்டி | பூமி + பிர + ஆட்டி | பூமித்தாய் அல்லது பூமிமகள் என்று பொருள் | ||
50 | அயலிலாட்டி | அயல் + இல் + ஆட்டி | அடுத்த வீட்டு பெண் என பொருள் (Woman of the next house; அடுத்த வீட்டு மாது) | ||
51 | கண்ணொடையாட்டி | கள் + நொடை(விலை) + ஆட்டி. | கள்ளை விற்கும் பெண் அல்லது கள்விற்பவள் என பொருள் (Female toddy seller) | ||
52 | கோமாட்டி | கோ(உயர்ந்த, சக்கரவர்த்தி, அரசன்) + ஆட்டி | உயர்வான பெண் அல்லது கோமகள் என்று பொருள். | ||
53 | சூராட்டி | சூரம்(வீரம்) + ஆட்டி | வீரமான பெண் என்று பொருள். (Valour, bravery, heroism lady) | ||
54 | இராசாட்டி | அரசு + ஆட்டி | அரசு பெண் அதாவது இராணியை(Queen) குறிக்கிறது. | இராசாத்தி என்பது இராசாட்டி என்ற சொல்லின் மருவல் | |
55 | சாணாட்டி | சாணர் + ஆட்டி | சாணர் சாதி பெண் என்று பொருள்.(Woman of the Shanar caste; சாணாரப்பெண்). | சாணாத்தி என்பது சாணாட்டி என்ற சொல்லின் மருவல் | |
56 | செம்மறி | செம்மை(சிகப்பு - Redness) + மறி (ஆடு) | சிகப்பு நிற ஆடு என்று பொருள்.(Young of shee) | ||
57 | செம்மாட்டி | செம்மறி + ஆட்டி | ஆட்டை மேய்க்கும் பெண் அதாவது சக்கிலிய சாதிப்பெண் (Woman of the shoemaker caste) | செம்மான் (சக்கிலியன்) | செம்மாத்தி என்பது செம்மாட்டி என்ற சொல்லின் மருவல் |
58 | வண்ணாட்டி | வண்ணாரம் + ஆட்டி | துணிகளை வெளுத்து அழுக்கு நீக்கி வேலை செய்து கொடுக்கும் பெண் (Washer women) | வண்ணத்தான் | வண்ணாத்தி என்பது வண்ணாட்டி என்ற சொல்லின் மருவல் |
59 | அம்மாட்டி | அம்மா + ஆட்டி(பெண்) | அம்மாவின் அம்மா அதாவது அம்மாவின் தாய்(grandmother) என்று பொருள். | அம்மாச்சி என்பது அம்மாட்டி என்ற சொல்லின் மருவல் | |
60 | அப்பாட்டி | அப்பா + ஆட்டி | அப்பாவின் அம்மாவை அதாவது அப்பாத்தா என்று பொருள் | அப்பாச்சி என்பது அப்பாட்டி என்ற சொல்லின் மருவல்.மேலும் அப்பாச்சி என்ற சொல் திரிந்து தற்காலத்தில் அப்புச்சி என்று வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது அம்மாச்சி என்ற பெண்பால் சொல்லுக்கு நிகரான ஆண்பால் சொல்லாகும். மேலும் இச்சொல் அப்பாவின் அம்மா அதாவது அம்மாச்சியை தான் குறிக்கிறது. வழக்கில் வந்துவிட்ட இச்சொல்லை தவறு என சொல்லாமல் அப்படியே விட்டுவிடலாம். | |
61 | பேராட்டி | பெருமை + ஆட்டி | பெருமையுடைய பெண் ( பெருமையுடையவள், Lady of eminence) என்று பொருள் . | பேராளன் | |
62 | எசமாட்டி | எசம் (நரம்பு) + ஆட்டி(பெண்) | செயலுக்கு நரம்பு போன்று மூலமாக இருப்பவள், குடும்பத்தலைவி என்று பொருள். | எசமான் | |
63 | இறைமையாட்டி | இறைமை + ஆட்டி | இறைமை கொண்ட பெண்( mistress) என்று பொருள் . | ||
64 | கற்புடையாட்டி | கற்பு + உடைய + ஆட்டி | கற்புடைய பெண் (virtuous or faithful wife) என்று பொருள். | ||
65 | பேயாட்டி | பேய் + ஆட்டி | பேயை போன்ற இயல்புடைய பெண் என்று பொருள்.(One who makes a person possessed and causes him to utter oracles) | ||
66 | அணங்குடையாட்டி | அணங்கு(தெய்வம்) + உடைய + ஆட்டி | தெய்வத்தன்மை கொண்ட பெண் (A woman divinely inspired and having oracular powers) என்று பொருள். |
நன்றி-பூச்சரம்.நெட்
http://poocharam.net/viewtopic.php?f=54&t=771&p=2753#p2753
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக