தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கு முன், இருக்கும் சொற்களின் சொல்லாக்க நுட்பத்தை பகுந்து அறிந்துக்கொண்டால் சிறப்பான முறையில் சொற்களை உருவாக்க முடியும். அதன்படி தமிழ் சொல்லாக்க முறைகளில் ஒன்றான பின்னொட்டு நுட்பத்தை கொண்டு உருவாக்கபட்டிருக்கும் தமிழ் சொற்களைப்பற்றி பார்போம். நுட்பங்களை ஆராய்வதோடு மட்டுமின்றி அதே நுட்பத்தை அடிப்படையாக கொண்டு புது சொற்களையும் படைப்போம். பலரும் ஆங்கில மொழி சொற்களில் வரும் பின்னொட்டை போன்றே தமிழிலும் பின்னொட்டு மற்றும் முன்னொட்டு கொண்டு புதிய சொற்களை உருவாக்குகின்றனர். இது ஒரு தவறான முன்னூதாரணமாகும். அவர்களுக்காகவே இந்த பதிவு என்று கூட சொல்லலாம்.
பின்னொட்டு (Suffix) என்பது ஒரு வேர் சொல்லின் பின் இன்னொரு சொல்லை இணைத்து புதிய சொல்லை உருவாக்குவதாகும். இதை "விகுதி" என்றும் அழைப்பதுண்டு. ஒவ்வொரு பின்னொட்டுக்களுக்கும் ஒரு பொருள் உண்டு. பொதுவாக ஏதேனும் ஒரு வேர்ச்சொல்லுடன் பின்னொட்டுகள் இணைக்கப்பட்டு வேர்ச்சொல்லின் பொருளிலிருந்து மாறுபட்ட புதிய சொல் உருவாக்கப்படுகிறது. இந்த முறையில் தமிழ் சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டுள்ளன.
பல சொற்கள் ஒரே மாதிரியான ஒலியை கொண்டு முடியும். அந்த ஒலிக்கு பெயர் தான் பின்னொட்டு. பெண்டாட்டி, கம்முனாட்டி, பாட்டி, முதாட்டி, பிராட்டி என்ற சொற்களை பாருங்கள், இச்சொற்கள் "ஆட்டி" என்ற ஒலியை கொண்டு முடிகிறது. இதில் "ஆட்டி" என்ற சொல் தான் பின்னொட்டு என்று அழைக்கப்படுகிறது. இச்சொல்லை சொல்லை பற்றியது தான் இப்பதிவு.
"ஆட்டி" என்ற சொல் பெண்பாலை குறிப்பதாகும். மேலும் அதே சொல் சில இடங்களில் பலவின்பாலாகவும் பயன்படுத்தபடுகிறது. இச்சொல்லை பின்னொட்டாக கொண்டு உருவாக்கப்பட்ட சொற்கள் சிலவற்றை பகுத்து ஆராய்வோம். இவ்வாராய்ச்சி நிச்சயம் தமிழ் சொல்லாக்க முறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலே கூறியாவாறு ஆட்டி என்ற சொல் பெண் அல்லது பெண்பாலை குறிப்பதாகும்.
வ.எண் | சொல் | பகுப்பு | விளக்கம் | எதிர்பால் (ஆண்பால் அல்லது பெண்பால்) | கூடுதல் |
1 | பெண்டாட்டி | பெண்டு + ஆட்டி | பெண்டு என்ற சொல் பெண்மையை குறிக்கிறது.பெண் என்பவள் இல்லற வாழ்வில் ஈடுபடும்போதுதான் பெண்மை என்ற தன்மையை முழுமையாக அடைகிறாள். அதனால் தான் பெண்மையை அடையும் பெண்ணுக்கு அதாவது மனைவிக்கு பெண்டாட்டி (Wife) என்று பெயர். | ||
2 | வைப்பாட்டி | வைப்பு + ஆட்டி | திருமணம் செய்யாமல் கூடவாழ வைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் பெண் (Concubine). | ||
3 | பாட்டி | அப்பா (பா) + ஆட்டி | அப்பாவின் அம்மாவை குறிக்கிறது (grandmother) . தற்போது அம்மாவின் அம்மாவும் இதே பெயர் கொண்டும் அழைக்கின்றனர். | ||
4 | கம்மாட்டி | கம் (வெண்மை) +ஆட்டி - widow | கம் என்றால் வெண்மை. கணவனை இழந்தவள் வெண்மையான ஆடையை அடையாளமாக அணிவதால் அதே வெண்மையை கொண்டே அவளை குறிப்பிடும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. | கம்முனாட்டி என்று பேச்சு வழக்கில் பயன்படுத்துவதுண்டு. கம்மாட்டி என்பது சரியான பதம் | |
5 | ஈராட்டி | இரண்டு + ஆட்டி | இது இரண்டு மனைவிகள் என பொருள் தருகிறது ( two wife). இரண்டு மனைவிகளை பொதுவாக அழைக்கும் போது இந்தச்சொல் பயன்படுத்தப்படுகிறது. | இரண்டு மனைவிகள் உடையோரை ஈராட்டிகாரன் என்று கூட அழைக்கலாம் | |
6 | பிராட்டி | பிர (உயர்ந்த, தலைமை ) + ஆட்டி | பிர (பிரான்,பிரகடனம், பிரசத்தி) என்பது உயர்வான , தலைமை என்ற பொருளை தருகிறது. உயர்வான பெண் (Goddess) என்று பொருள் . | பிரான் | ஆட்டி என்ற சொல் வேர்சொல்லாகவும், பிர என்ற சொல் முன்னொட்டாகவும் வருகிறது என்று கூட சொல்லலாம். |
7 | எம்பிராட்டி | எம் (எங்களுடைய) + பிர(உயர்ந்த, தலைமை ) + ஆட்டி | எங்கள் பிராட்டி (Our lady) என்று சொல்வதை எம்பிராட்டி என்று அழைக்கின்றனர் . | எம்பிரான் | |
8 | கணவாட்டி | கணவம் (ஆள்வது, தலைமை) + ஆட்டி | கணவனை ஆள்பவள் (பெண்) என்று சொல்லலாம் (Wife). | கணவன் | |
9 | சமுசாரம் (வழக்கில் : சம்சாரம்) | சம + சாரம் | சமமான சாரம்(சக்தி) கொண்டவள் (wife) என்று பொருள். | சமுசாரி | |
10 | சமுசாரவாட்டி | சம + சாரம் + ஆட்டி | சம சக்தி (அ) ஆற்றல் கொண்டவள் (wife) என பொருள்படும். | ஆணும் பெண்ணும் சமம் என்பதை தத்துவத்தை உள்ளடக்கிய சொல். | |
11 | சீமாட்டி | சீ (செல்வம்) + மான்(சிறப்பு) + ஆட்டி | செல்வ சிறப்பு கொண்ட பெண் (wealthy woman) என்று பொருள். | சீமான் | |
12 | தமியாட்டி | தமி(தனிமை) + ஆட்டி | தனியாக இருக்கும் பெண் (lonely women) என்று பொருள். | தமியன் | |
13 | தம்பிராட்டி | தன்மை + பிர (உயர்ந்த, தலைமை ) + ஆட்டி | தன்மையுள்ள உயர்வான பெண் ( தலைவி, Mistress, queen) என்று பொருள். | தம்பிரான் | |
14 | நம்பிராட்டி | நம்பு + பிர (உயர்ந்த, தலைமை ) + ஆட்டி | நம்பிக்கை கொள்ளத்தக்க உயர்வான பெண் ( தலைவி) என்று பொருள் | நம்பிரான் | |
15 | தேவராட்டி | தேவர் + ஆட்டி | தேவ குணம் கொண்ட பெண் (A woman divinely inspired and possessed of oracular powers, சன்னதக்காரி) என்று பொருள். | தேவராயன் | |
16 | திருவாட்டி | திரு(அழகு, சிறப்பு, பொலிவு, பாக்கியம் போன்ற தன்மைகள் ) + ஆட்டி | அழகு, சிறப்பு, பொலிவு, பாக்கியம் போன்ற தன்மைகள் கொண்ட பெண் என பொருள்(Lady of wealth and position). | திருவாளன் | |
17 | தனாட்டி | தனம் (செல்வம்) + ஆட்டி | செல்வச்செழிப்புள்ள பெண் (Rich woman, செல்வமுடையவள்) என்று பொருள். | தனாட்டியன் | |
18 | தறுகணாட்டி | தறுகண் (அஞ்சாமையாகிய வீரம்) + ஆட்டி | எதற்கும் அச்சப்படாத பெண் (bold women) என்று பொருள். | தறுகணாளன் | |
தொடரும் ...
நன்றி-பூச்சரம்.நெட்
http://poocharam.net/viewtopic.php?f=54&t=769&p=2745#p2745
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக