திங்கள், 10 மார்ச், 2014

சொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-3

Image


நாம் இதுவரை ஆட்டி என்ற பின்னொட்டை கொண்டு உருவான சொற்களைப் பார்த்தோம். சொற்கள் உருவாகியுள்ள விதத்தைப் பாருங்கள். எந்தச் சொல்லுமே அப்பொருளை முழுமையாகக் குறிக்கும்படி உருவாக்கப்படவில்லை, அது அவசியமும் இல்லை. இரண்டு அல்லது மூன்று வேர்ச் சொற்கள் பொருளை உணர்த்தும் அல்லது சுட்டும் விதமாகவே இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. பாட்டி என்ற சொல்லில் அப்பா + பெண் என்ற இரு வேர்ச் சொற்களும், அப்பொருளை சுட்டும் (Hint) விதமாகவே அமைந்துள்ளன. இதே சொல்லை தற்காலத்தில் உருவாக்குவதாக வைத்துகொண்டால் என்ன செய்திருப்போம் "தந்தையம்மா" என்று தான் வைத்திருப்போம்.
அக்காலத்தில் நம்மைப் போன்று மண்டையை உடைத்து, மூளையைக் கசக்கி சொற்களை உருவாக்கவில்லை. எளிமையான முறையில், குறைந்த நீளம் (மாத்திரை) கொண்ட, பொருளை சுட்டும்படியான வேர்ச் சொற்களை இணைத்து, அந்த இணைப்பு உச்சரிப்பவர்களுக்கு விளங்காதவாறு புதிய சொற்களை உருவாக்கியுள்ளனர். நான் இங்கு எடுத்துவைத்த ஆய்வுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்தை கூறவில்லை. இதுவரை நான் ஆராய்ந்த சொற்களின் சொல்லாக்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கூறுகிறேன். இது தான் இக்காலத்திய சொல்லாக்கத்திற்க்கும் , அக்காலத்திய சொல்லாக்கத்திற்க்கும் உள்ள வேறுபாடு. நாம் உண்மையில் சொல்லாக்கத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். இப்பலவீனம் தான் இதுவரையிலும் பல சொற்களுக்குச் சரியான சொற்களை உருவாக்க முடியாமல் நம்மைத் திணறடித்து வருகிறது.கலைச்சொல்லாக்கம் என்பது தமிழின் வேர்ச்சொல்லின் வழியே நடைபெறவேண்டும் - தமிழறிஞர் இராம்கி ஐயா


என்ற வழிகாட்டுதலின்படியும், மேலே பகுத்து ஆராய்ந்த அதே வேர்ச்சொற்களைக் கொண்டும், அதே சொல்லாக்க முறையில் புதிய சொற்களை உருவாக்கி பார்க்கலாம். அப்போது தான் நாம் தற்காலத்தில் பின்பற்றும் சொல்லாக்க குறைபாடுகளை ஒப்பிட்டு/சீர்தூக்கி பார்க்கமுடியும்.

இதோ சில உதாரணங்கள்.

ஈர் என்றால் இரண்டு என்று பொருள், இச்சொல்லைக்கொண்டு
ஈருதை (double Stroke) , இருதை என்ற சொற்களை உருவாக்கலாம்.
ஈர் + உதை = ஈருதை
இரு+ உதை = இருதை


தமி என்றால் தனிமை என்று பொருள், இச்சொல்லைக்கொண்டு
தமிறை, தமியச்சு என்ற சொற்களை உருவாக்கலாம்.
தமி + மிறை = தமிறை (monophobia)
தமி + அச்சு = தமியச்சு (monophobia)


மகவு என்றால் குழந்தைகள் என்று பொருள், இச்சொல்லைக்கொண்டு
மகவில், மகவாடி என்ற சொற்களை உருவாக்கலாம்.
மகவில் = மகவு+இல்
மகவாடி = மகவு+வாடி


தாடு என்றால் வலிமை(Strength) என்று பொருள், இச்சொல்லைக்கொண்டு
தீர்த்தாடு(robust), கயத்தாடு (அ) குறைத்தாடு (hypodynamia) என்ற சொற்களை உருவாக்கலாம்.

தீர்த்தாடு(robust)= தீர்+தாடு
கயத்தாடு (hypodynamia) = கயம்+தாடு
குறைத்தாடு (hypodynamia) = குறை + தாடு


வண்ணாரம் என்றால் அழுக்கு நீக்கல் என்று பொருள், இச்சொல்லைக்கொண்டு
வண்ணறை என்ற சொல்லை உருவாக்கலாம்.
வண்ணறை(Washing Machine) = வண்ணம்+அறை


எசம் என்றால் நரம்பு என்று பொருள், இச்சொல்லைக்கொண்டு
எசமி என்ற சொல்லை உருவாக்கலாம்.
எசமி = ஏசம்+இம்மி (neuron)


கம் - என்ற சொல் வெள்ளையைக் குறிக்கிறது.

Black என்ற ஆங்கிலச்சொல்லுக்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன. கார், கறு, கரு, கரி, கறை ,காளி , சாமம், துமிரம், நீல் எனச் சொல்லலாம். இந்த இரு சொற்களைக் கொண்டு புதிய சொல்லை உருவாக்கலாம்.

- Black and White - காளி+கம் = காளிகம், கார்+கம் = கார்கம் , கரு+கம்=கருகம் , நீல+கம் = நீலகம், சாமம்+கம்=சாமகம், கறு+கம்=கறுகம், கரி+கம்=கரிகம் என்று புதிய சொல்லை உருவாக்கலாம்.

Whitespace - அரி+கம் = அரிகம் , காசம்+கம்=காசகம், +காயம்+கம் = காயகம், பாழி + கம் = பாழிகம் எனப் புதிய சொல்லை உருவாக்கலாம்.


மேலும் ஆட்டி என்ற சொல் திரிந்து ஆச்சி என்று இக்காலத்தில் வழக்கில் உள்ளது.

மேலே நான் உருவாக்கி காட்டிய புதிய சொற்களைப் பாருங்கள், ஒரு சொல்லுடன் சில பின்னொட்டுகளை இணைத்து பல புதிய சொற்களை உருவாக்கியுள்ளேன். இது தான் சரியான சொல்லாக்க முறை என்று சொல்வதில் தவறேதும் இல்லை. நான் இங்குப் பகுத்துக் காட்டியிருக்கும் சொற்களைப் பார்த்தாலே உண்மை விளங்கும்.

இரண்டு சொற்களை அப்படியே சேர்த்து எழுதி அதைப் புதிய சொல் என அழைப்பதை தான் பலரும் தொழிலாக வைத்துள்ளனர். இவற்றைச் சொல் என அழைப்பதை காட்டிலும் சொற்றொடர் என்று அழைப்பது தான் சரியானது. இப்படியே சொற்றொடர்களை உருவாக்கிக்கொண்டு தமிழில் இவ்வளவு புதுச் சொற்களை உருவாக்கியுள்ளோம் என வாய்க்கூசாமல் கணக்கு காட்டுகிறார்கள். அந்தச் சொல் என் வழக்கில் வரவில்லை எனத் தெரிந்துக்கொள்ளாமல் வெறுமனே மக்களைக் குறை சொல்கிறார்கள்.

மேலும் நம்மிடமுள்ள இன்னொரு பெரிய தவறு போட்டி மற்றும் பொறாமை. இவன் யார் இவனுக்கு என்ன தெரிந்துவிட்டது என இகழ்ந்து பேசும் நிலையில் இருக்கிறோம். இந்த இயல்பை கொஞ்சம் தள்ளிவைத்து, இறக்கும் தருவாய்க்கு சென்று விட்ட தமிழுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ண மேலோங்கவேண்டும்.

ஆங்கிலம் என்பது பலமொழிகளின் சொற்கள் கொண்ட ஒரு இரவல் மொழி. உலகளவில் குறிப்பிட்டு சொல்லும்படியான இலக்கியங்களோ, இதிகாசங்களோ, வாழ்க்கை தத்துவங்களோ இல்லாத மொழி. ஆனால் அவர்கள் தங்கள் மொழி உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று திட்டம் வகுத்து, இன்று அவர்கள் நினைத்ததைப் போல் திட்டத்தைச் சாதித்துக் காட்டிவிட்டனர். இந்தியாவில் ஹிந்தி என்ற மொழியும் அப்படிதான் எழுத்துக்களை வடமொழியிலும், சொற்களை உருது மொழியிலும் மற்றும் பிறமொழிகளிலும் இரவல் வாங்கி உண்டாக்கிய மொழி, குறிப்பிட்டு சொல்லும்படியான உலக மதிப்புக் கொண்ட இலக்கியங்களோ , இதிகாசங்களோ இல்லாத மொழி. ஆனால் இன்று அந்த மொழியைப் பேசாவிட்டால், படிக்காவிட்டால் தலையே போய்விடும் என்று நம்மையும், மற்ற மாநிலத்தவரையும் அம்மொழிக்காரர்கள் மாற்றி வைக்கவில்லையா?. இப்போது ஹிந்தியை தமிழர்கள் விரும்பி படிக்கவில்லையா?. ஆங்கிலேயருக்கும், ஹிந்திகாரர்களுக்கும் இருக்கும் மொழி உணர்வில் கொஞ்சம் கூட நமக்கு இல்லையே, தமிழ் உணர்வு கொண்டு உழைப்பவர்களையும் குறை தானே சொல்கிறோம்.

கண்ட கண்ட மொழிகள் எல்லாம் அரியாசனம் ஏறும் போது, ஒரு காலத்தில் லெமுரியா என்ற கண்டத்தின் ஆட்சி மொழியாக இருந்த தமிழை நாம் எங்கு வைக்கவேண்டும்?, ஆனால் நாம் இன்று தமிழை எங்கு வைத்திருக்கிறோம் என்று சற்றுச் சிந்தித்துப்பாருங்கள்.


நன்றி-பிரபாகரன்.
 http://poocharam.net/viewtopic.php?f=54&t=889

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...