வெள்ளி, 28 மார்ச், 2014

ஜப்பானிய மொழியில் ஹி-வாத்ரி (Hi-watari) என்றால் என்ன தெரியுமா?


ஜப்பானில்தமிழ்நாட்டில்
Image
Image

火災 - Hi என்றால் என்ன தெரியுமா? ஜப்பானிய மொழியில் ஹி(Hi) என்றால் தீ என்று பொருள். நம் தமிழில் இருந்து சென்ற சொல்.

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிகப் பெரிய அளவில் தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கணமும் ஜப்பான் மொழி இலக்கணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத் தோன்றுகிறது. ஏராளமான தமிழ் மொழி சொற்கள் ஜப்பானிய மொழியில் சேர்ந்துள்ளன. ஆங்கிலம் போல் நம்மவருக்கு ஜப்பான் மொழி தெரிந்திருந்தால் இந்நேரம் ஜப்பான் மொழியில் கலந்துள்ள நம் தமிழ் சொற்களைப் பலரும் பட்டியலிட்டு இருப்பார்கள்.

சங்ககாலத்தில் நாம் பயன்படுத்திய ஏராளமான தமிழ் சொற்கள் அப்படியே ஜப்பான் மொழியில் அவர்களின் உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் சிறிய அளவில் மருவி இன்னமும் பயன்படுத்தபடுகின்றன.

ஜப்பானியர்கள் நம்முடைய சொற்களை மட்டும் உள்வாங்கவில்லை, நம்முடைய கலாச்சார அடையாளங்களான வழிபாட்டு முறைகள், விழாக்கள், உறவு முறைகள் போன்றவற்றையும் அப்படியே நம்மைப் போலவே பின்பற்றுகின்றனர். பண்டைய காலத்தில் நம் இனத்தவரின் தாக்கம் எந்தளவிற்கு இருந்திருக்கிறது எண்ணிப்பார்க்க வேண்டும்.

Image


நான் மேலே சொன்ன தீ என்ற சொல் ஜப்பானிய மொழியில் கலந்ததுபோல் நம்மூரில் கோவில்களில் நடக்கும் தீமிதி விழாவும் அங்கு கொண்டாடப்படுகிறது. கடவுள் துணை நிற்க வேண்டியும் , உடல் நலம் சரியாகும் பொருட்டும் புத்த கோவில்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அவப்போது நடைபெற்றுகொண்டிருகின்றன. இந்தத் தீமிதி விழாவிற்கு Hi-watari (ஹிவாத்ரி) என்று பெயர். இந்த ஹிவாத்ரி சொல்லில் வரும் ஹி ( Hi ) எனும் சொல் ஜப்பான் மொழியில் தீயை குறிப்பதாகும். வாத்ரி என்பதை தமிழில் நடப்பதை குறிப்பதாகும். அதாவது தீ யாத்திரை என்பது ஹிவாத்ரி(Hi-watari) என்று மருவி உள்ளது. ஆகா ஹி-->தீ என்ற சொல்லும் தமிழ் சொல் தான் வாத்ரி-->யாத்திரை என்ற சொல்லும் தமிழ் சொல் தான்.

நம்மைபோலவே பொங்கலும் கொண்டாடுகின்றனர், நாம் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அவர்களும் ஜப்பானிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். போகி பண்டிகையை கொண்டாடுகின்றனர். திருத்தலங்களில் நம்மைபோலவே 108 மணிகளை ஒலித்து தரிசனம் செய்கின்றனர். இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க ஜப்பான்-தமிழ் தொடர்புகளைத் தமிழரை ஆளும் அரசுகள் கையிலெடுத்து தமிழின் சிறப்புகளை உலகறிய (குறைந்தபட்சம் தமிழர்கள் மட்டுமாவது அறிய) செய்ய வேண்டும். இதுபோன்ற செய்திகள் தான் அடிமைத்தனமாக இருக்கும் தமிழ் சமூகத்திற்கு நாம் தரும் ஊக்க மருந்துகள்.
  நன்றி- http://poocharam.net/viewtopic.php?f=54&t=1136

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...