திருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டு வந்தனர். அதை நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஒருவர் அவருடைய நண்பரிடம் கேட்கிறார்....
அவர் நண்பர் சொன்னார் "ஆமா, ஓட்டலுக்குள் போன உடனே ஆடர் என்னாச்சு... என்னாச்சு... என்று அவசரப்பட்டா அரிசியா தான் போடமுடியும்" என்றார்.
"வேற என்ன இருக்கு" என்று கேட்க...
சொன்னார் ஒரு உண்மையை
"நம்மாளுங்க என்ன கேக்குறாங்க ...ரைஸ் வேனும்னு தானே கேக்குறாங்க. ரைஸ்னா என்ன?... அரிசி .... அதுதான் வெந்தும் வேகாமல அரிசி அரிசியா போடுறாங்க" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.
நானும் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். இது நகைச்சுவை போல உங்களுக்கு நமக்கு தெரிந்தாலும், உண்மையில் இதுபோன்ற ஒரு இழிவான பழக்கத்திற்கு உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டும். நானும் சரி , நீங்களும் சரி, பல உணவகங்களில்.அன்றாடம் காணும் காட்சி தான். மதியம் சாப்பிட வருபவர்கள் "மீல்ஸ் இருக்க" என்பார்கள் அப்புறம் சாப்பிடும்போது "தம்பி எக்ஸ்ட்ரா ரைஸ் வை" என்பார்கள்.
"தம்பி சாப்பாடு கொடுப்பா" என தமிழில் கேட்டால் சாப்பாடு வைக்காமல் வாய்ப்பாட்டையா வைக்கப் போகிறான்?.
இல்லை "சாதம் கொடுப்பா என்றால்" சாதம் வைக்காமல் சாணியையா வைக்கப் போகிறான்?
இல்லை சாப்பாடு என்று தமிழில் சொல்வது உங்களுக்கு கவுரவ குறைச்சலா தெரிந்தால் பிறகு எதற்கு அந்த கருமத்தை வாங்கி உண்டு வயிற்றை நிரப்ப வேண்டும். நெல் என்பதை கண்டுபிடித்தவன் தமிழன் அதை சாப்பாடு என்ற பெயர் வைத்து தமிழர் பாரம்பரிய உணவாக பயன்படுத்துபவன் தமிழன். அவன் தான் நெல் என்பதை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவன்.
தமிழையும் பிடிக்காத, தமிழனையும் பிடிக்காத உங்களுக்கு தமிழன் உணவு மட்டும் வேண்டுமா என்ன? ஏன் அதை உண்ண வேண்டும். பேசாமல வெள்ளைக்காரன் போல் பீசாவையும் கேஎப்சீ யையும் தின்றுவிட்டு கோக்க கோலாவை குடித்துவிட்டு போகலாமே.
தமிழில் ஒரு பொருளுக்கு சொல் இல்லையென்றால் பரவாயில்லை, புரிதலுக்காக வேற்று மொழி சொற்களை பயன்படுத்துவது தவறில்லை.
தமிழில் ஒரு பொருளுக்கு சொல் இல்லையென்றால் பரவாயில்லை, புரிதலுக்காக வேற்று மொழி சொற்களை பயன்படுத்துவது தவறில்லை.
ஆனால் சாப்பாடு என்ற சொல் இருந்தும் (ஒரு சொற்கள் இல்லை 15 சொற்கள் உள்ளன) அதை பயன்படுத்துவது தன் கவுரவத்திற்கு குறைச்சல் ஏற்படும், தன் இராசக் கிரீடம் இறங்கிவிடும் என நினைக்கும் தமிழா, நீ உலகின் மூத்தமொழி தமிழ் என்ற பரம்பரையை சேந்தவன் தானா?. நான் தமிழன்... நான் தமிழன்.... என்று வாய்கிழிய பேசுகிறாயே, அது உணர்வில் இருந்து வருகிறதா இல்லை உதட்டில் இருந்து வருகிறதா?
சொந்த மொழியை உனக்கு வளர்க்கவும் தெரியவில்லை. அதை வைத்து வாழவும் தெரியவில்லை. அடுத்தவன் மொழியை உன் மொழி என்று பெருமை பேசுகிறாய். அடுத்தவர் மொழியில் பேசுவதை தான் தான் நாகரீகம் என்று புது இலக்கணம் எழுதுகிறாய்.
இங்கிலிஷ்காரன் பிள்ளையை பெற்று கொஞ்சுகிறான். அப்பிள்ளையை உன் பிள்ளை போல் கொஞ்சி குலாவுகிறாயே, உண்மையில் நீ பழுதில்லா மனிதன் தானா?. உன் பிள்ளை வீதியில் நிற்க அயலான் வீட்டு பிள்ளையை வீட்டில் வைத்து அழகுப் பார்கின்றாயே, உனக்காக தான் "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழியை எழுதிவைத்தனரோ? நம் முன்னோர்கள்.
இவர்கள் உணவகம் என்றில்லை, எல்லா இடங்களிலும் இருக்கும் தமிழ் சொற்களை பயன்படுத்த வெட்கம் கொள்கின்றனர் அல்லது தமிழ் சொற்களை பயன்படுத்தும் நபர்களை கேலி செய்கின்றனர்.
என் நண்பர் தமிழ் மீது பற்று உள்ளவர், ஒருமுறை பேருந்தில் நடத்துனரை பார்த்து "ஐயா பயண சீட்டு கொடுங்க" என்று இரு சரியான சொற்களை ஐயா பயண சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அந்த நடத்துனர் "காலங்காத்தாலையே போட்டுக்கிட்டு வந்துட்டானுங்க" என்று திட்டிக்கொண்டே பயணச்சீட்டு கொடுத்துள்ளார். என் நண்பரோ என்னிடம் சொல்லி மனம் நொந்து போனார்.
ஒரு காலத்தில் தமிழன் பின் புறத்தை பிடித்து மற்றவர்கள் நடை பழகிய காலம் போய் இன்று தமிழன் அடுத்தவன் புறத்தை பிடித்து வாழ்கையை ஓட்டிகொண்டிருக்கிறான். என்று முதல் இடத்திற்கு வருவானோ எனக்கு தெரியவில்லை.
இருக்கும் தமிழை பயன்படுத்துங்கள் ... இல்லாத தமிழை வளமடையச் செய்யுங்கள். இதுதான் காலத்தின் கட்டாயம்.
(பதிவில் நம் சமூகத்தின் அவலம் கொஞ்சம் அலங்கோலமாக சொல்லப்பட்டுள்ளது மன்னிக்கவும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக