வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -2)


இதுவரை உருது எனும் மொழி உருவான வரலாற்றை சிறிது பார்த்தோம். இந்தியை பற்றி சொல்வதாக நினைத்தால் என்ன இது உருதை பற்றி சொல்கிறேன் என எண்ணவேண்டாம், விசயம் இருக்கிறது. இந்த உருதுமொழியில் இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, 'ல்ல்லு ஜிலால்' என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப் பிரித்துச் சீர் செய்யப்பட்ட மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில் சம்ஸ்கிருத சொற்களை இணைத்து இந்தி எனும் புதிய மொழியொன்றை தோற்றுவித்தார். இதனால் இந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது. வடமொழிச்சொற்களை சேர்த்துக்கொணடதால் இந்தி வடமொழியில் இருந்து உருவானது என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர். இந்தி எனும் மொழி உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி. உண்மையில் இந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும், பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி எவ்வாறு நம்நாட்டு மொழியாகும். இதனுடைய வயது வெறும் 830 ஆண்டுகள் தான். மேலும் இந்தி இந்துக்களின் சமயமொழி போல் சித்தரிக்கப்படுவது நமக்கு நகைப்பை தான் வரவழைக்கிறது. மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய இந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதிற்க்கும் இந்தி மொழிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு மொழிகளுக்கு ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது இந்தியில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்து முறை 'தேவநகரி', உருது மொழியில் எழுத பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.


இந்தியும், உருதும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதால் தான் இந்தி மொழி பாகிஸ்தானில் பேசப்படுகிறது, வளைகுடா நாடுகளில் பேசப்படுகிறது, சவுதியில் பேசப்படுகிறது, ஆப்கானிஸ்தானில் பேசப்படுகிறது என வட இந்தியர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்கள். இவர்களை வட இந்தியர்கள் என்று சொல்வதை காட்டிலும் மட இந்தியர்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த நாடுகளில் உள்ளவர்கள் இசுலாமியர்கள், அவர்களின் மொழி உருது. உருதும் இந்தியும் ஒன்றுபோல் உள்ளதால் அவர்கள் இந்தியை பேசமுடிகிறது. உண்மையில் இசுலாமியர்கள் இந்தியை உருது மொழியின் ஒரு கிளையாக பார்ப்பதால், இந்தியும் இசுலாமிய மொழி என்ற உள் எண்ணத்திலும், உருது மொழியின் ஒரு கிளை இந்தியாவை ஆளுகிறது என்று பெருமையிலும் தான் பேசுகின்றனர், மற்றபடி இந்த இந்தியின் மொழி சுவை கண்டு, வியந்து பேசப்படுவதில்லை. வளைகுடா நாடுகளில் இந்தியை இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் வேலையாட்களை வேலை வாங்கவே பெரிதும் பேசப்படுகிறது.

இந்திமொழி என்பது ஒரே மொழியல்ல
இந்தி வடநாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி என்பதெல்லாம் முழுக்க பொய். இம்மொழி வடநாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவேறு மாறுதல்களுடன் வெவ்வேறு மொழி பெயர்களைக் கொண்டு பேசப்படுகின்றது. ஒரு பகுதியில் பேசப்படும் இந்தியை மற்ற பகுதியில் உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு பல்வேறு மாறுதல்களுடன் பலவாறு பேசப்படும் இந்தியை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தி ஐந்து பிரிவுகளாகப் பேசப்படுவது தெரியவருகிறது. அதாவது 'மேல்நாட்டு இந்தி', 'கீழ்நாட்டு இந்தி', 'பிகாரி', 'ராஜஸ்தானி','பகரி' எனப் பிரிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு பிரிவில் பல உட்பிரிவுகள் உள்ளன.

Image

என்ன மேலே உள்ள வரைபடம் உங்களுக்கு தலைசுற்றலை கொடுக்கிறதா?. ஆம் இந்தி என்பது தமிழை போன்று இயற்கையாக உருவான மொழியில்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் மொழி. இவ்வாறு பல மொழிகளை இந்தி எனும் குடையின் கீழ் கொண்டுவந்து, மற்ற மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்கள் என கணக்கு காண்பிக்கிறது நம் இந்திய அரசு. மேலும் வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு மொழிகள் நம் நாட்டின் எந்தெந்த பகுதிகளில் பேசப்படுகிறது, எவ்வளவு மக்கள் பேசி வருகின்றனர் என்பதை பார்ப்போம்.


உட்பிரிவு பெயர் பேசப்படும் மாநிலங்கள் பேசுபவர்கள் எண்ணிக்கை பிரிவு
பங்காரு(Haryanvi)அரியானா,ராஜஸ்தான்,பஞ்சாப், கர்நாடகம் மற்றும் டெல்லி 16,000,000 மேல்நாட்டு இந்தி
பிராஜ் பாஷா (Braj Basha)உத்திர பிரதேசம்(மதுரா & ஆக்ரா) , ராஜஸ்தான்(பரத்பூர் & தோல்பூர்), அரியானா, பீகார், மத்திய பிரதேசம், டெல்லி574,000 மேல்நாட்டு இந்தி
கனோஜ் (Kannauji)உத்திர பிரதேசம்9,500,000 மேல்நாட்டு இந்தி
பந்தேலி(Bundeli) மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான்,குஜராத், ஆந்திரா 3,070,000மேல்நாட்டு இந்தி
உருது (Urdu)டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகள் 52,000,000மேல்நாட்டு இந்தி
ஹிந்துஸ்தானி ( Khariboli)டெல்லி, அரியானா , மேற்கு உத்தரப் பிரதேசம்240,000,000 மேல்நாட்டு இந்தி


உட்பிரிவு பெயர் பேசப்படும் மாநிலங்கள் பேசும் எண்ணிக்கை பிரிவு
அவாதி (Awadhi) மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார்,மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி 2,530,000கிழக்கத்திய இந்தி
சத்திஸ்கரி (Chhattisgarhi)சத்திஸ்கர் , மத்திய பிரதேசம்,பீகார், ஓடிஷா ,திரிபுர, மகாராஷ்டிரா, ஆந்திரா13,300,000 கிழக்கத்திய இந்தி
பாகிளி (Bagheli)மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் 2,860,000கிழக்கத்திய இந்தி


உட்பிரிவு பெயர் பேசப்படும் மாநிலங்கள் பேசும் எண்ணிக்கை பிரிவு
மர்வாரி (Marwari)ராஜஸ்தான், குஜராத், அரியானா ,சிந்து, மத்திய பிரதேசம்5,600,000ராஜஸ்தான் இந்தி
மேவதி (Mewati)மேற்கு வங்கம்645,000ராஜஸ்தான் இந்தி
ஜெயபுரி (Jaipuri)ராஜஸ்தான்1,870,000ராஜஸ்தான் இந்தி
மல்வி(Malvi)மத்திய பிரதேசம், ராஜஸ்தான் Rajasthan5,560,000ராஜஸ்தான் இந்தி


உட்பிரிவு பெயர் பேசப்படும் மாநிலங்கள் பேசும் எண்ணிக்கை பிரிவு
போஜ்புரி(Bhojpuri)பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், அசாம், டெல்லி,மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் 37,800,000பிகாரி இந்தி
மைதிலி (Maithili)ஜார்கண்ட்,பீகார், நேபாளம் (சில பகுதிகள்)30,000,000பிகாரி இந்தி
மகதி(Magadhi)பீகார், ஜார்கண்ட், மால்டா, மேற்கு வங்கம்14,000,000 பிகாரி இந்தி


உட்பிரிவு பெயர் பேசப்படும் மாநிலங்கள் பேசும் எண்ணிக்கை பிரிவு
நடுவன் பகரி(Central Pahari)உத்திரகாண்ட் 2,500,000பகரி இந்தி
கீழ்நாட்டு பகரி(Eastern Pahari)இமாச்சல பிரதேசம் 109,000பகரி இந்தி
மேல்நாட்டு பகரி(Western Pahari)இமாலயம், பாகிஸ்தான் - நேபாளம் சில பகுதிகள் ௦1,000,000பகரி இந்தி


மேலே அட்டவணையிடபட்ட மொழிகளின் எண்ணிக்கையை பாருங்கள். தென் இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிகையை காட்டிலும் வட இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம் என்பதை புரிந்துகொள்வீர்கள்?. அட்டவணையில் காண்பிக்கபடிருக்கும் பேசும் மக்களின் தொகை 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தரப்படுள்ளது. இந்த மொழிகளை நான் கேள்விபட்டதே இல்லையே என நீங்கள் சொன்னால், அதற்கு காரணம் இதுபோன்ற மொழிகள் இருப்பதை உங்களிடமிருத்து நடுவண் அரசு மறைக்க முற்படுகிறது என்று தான் பொருள். அதாவது இந்த மொழிகளை எல்லாம் ஒன்றாக உருக்கி இந்தி எனும் மொழியை வார்த்துக்கொண்டுள்ளது நடுவன் அரசு. ஆம் இந்த மொழிகள் பேசும் மக்கள் தற்போது இந்தி எனும் மொழியுடன் தங்கள் மொழியை இணைத்து, தாங்களும் இணைத்து வருகின்றனர். அதாவது இந்த மொழிகள் அழிந்து வருகின்றன. அவர்களால் இந்தியை எதிர்த்து போராட முடியும், ஆனால் இந்தியை திணிக்கும் நடுவன் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராட பலமில்லாமல் தங்கள் அடையாளத்தை இழந்துவருகின்றனர். சரி இந்த மொழிகள் உண்மையில் பேசப்படுகிறதா? என்றால் பேசப்படுகிறது என்று தான் சொல்வேன். இதுநாள் வரையிலும் இந்த மொழிகள் பேசப்படுகின்றன. எனினும் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ள அறிவிக்கையின் படி இந்த மொழிகளில் மைதிலி (அதுதானே ஹிந்தி) தவிர அனைத்து மொழிகளும் அழிவின் தருவாயில் உள்ளன. ரொம்ப பெருமைபட்டுக்கொள்ளாதீர்கள் நாம் தமிழும் தான் அந்த அறிவிக்கையில் உள்ளது, அழிவின் ஓரத்தில் உள்ளது, இன்னும் சில நூற்றாண்டுகளில் விளிம்புக்கும் வரலாம் அல்லது அதற்குள்ளாக அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது. எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது.

இப்போது இந்தி மொழி நூல்கள் என எழுத்தப்படுவது மைதிலி மொழியில் தான் (அட்டவணையை பார்க்கவும்). மேலே பட்டியலிடப்பட்ட மொழி பிரிவுகளைத் தவிர மேலும் பல மொழி பிரிவுகள் சேர்ந்த கூட்டு கலவை தான் இந்தி, தமிழ்மொழி போல் தனித்துவமற்ற மொழி. நம் நாட்டில் இந்தி பேசும் மக்கள் எனப் பொதுவாகச் சொல்லிக்கொண்டாலும் அது பல மொழிகளைப் பேசும் மக்களை உள்ளடக்கியது. ஒரு பகுதியில் பேசும் இந்தி மொழியை நாட்டின் மற்ற பகுதியில் இருக்கும் இந்தி பேசும் மக்கள் பபுரிந்துகொள்வது சுலபமில்லை. இப்படி உள்ள நிலையில் இந்தி என்பது இந்தியாவில் பேசப்படும் பொதுவான மொழி என்று எப்படிச் சொல்லமுடியும்?. அவ்வாறு சொல்வது சுத்த பொய் என்பதையும், நம்மை ஏமாற்றும் பொய்யுரை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பெருவாரியான சொற்களை உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிடமிருந்து இரவல் பெற்று உருவான மொழி. எழுத்தையும் உருவாக்கிக்கொள்ளத் திறனற்று சம்ஸ்கிருத மொழி எழுத்துக்களை பயன்படுத்தும் மொழி. மொத்தத்தில் பிச்சைகாரன் பாத்திரத்தில் பல வீடுகளில் வாங்கிய சோறும் குழம்பும் இருப்பதுபோல் மொழியில் பல மொழிகளின் சொற்களையும், எழுத்துகளையும் கொண்ட மொழி. மேலும் இந்தியாவின் அலுவல் மொழி என்று சொல்லிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது இந்த இந்திக்கு.

எந்த வகை இந்தியை நாம் பின்பற்ற முடியும்:
நீங்கள் இந்தியை கற்பதாக இருந்தாலும் மேலே சொன்ன உட்பிரிவுகளில் எந்த உட்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பீர்கள்? அத்தனை உட்பிரிவு மொழிகளையும் உங்களால் கற்க முடியுமா?. அப்படியே இந்தியில் எதாவது ஒரு பிரிவை கற்றாலும் நாட்டின் அனைத்து பகுதி மக்களுடன் உங்களால் தொடர்புகொள்ளமுடியுமா? வடமாநிலங்களின் முதன்மையான நகரங்களில் மட்டுமே ஒருபிரிவான இந்தி பேசப்படுகிறது. மற்ற பகுதிகளில் பல உட்பிரிவு இந்தி மொழிகள் தான் அதிகம் பேசப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க எப்படி இந்தி தேசிய மக்களை இணைக்கும் பலமாகக் கருதுவது நம்மை ஏமாற்றும் இன்னொரு உத்தி என படித்தவர்கள் நாம் உணரவேண்டும், உண்மை என்ன என்பதைச் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

தமிழ் மற்றும் தமிழ் இனம்:
நம்முடைய தமிழ்மொழி இந்திமொழி போன்றதில்லை, நம்மவர்கள் உலகில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா, சுவிஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும், அதேபோல் தமிழ்நாட்டில் வெவ்வேறு வட்டங்களில் வெவ்வேறு வட்டார வழக்குகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் பேசப்படும் மொழிக்கு கனடாவில் இருக்கும் தமிழன் எளிதாகப் புரிந்து பதில் சொல்கிறான், குமரியில் இருக்கும் தமிழன் பேசுவதை சென்னையில் இருக்கும் தமிழன் புரிந்துகொள்கிறான். உலகில் தமிழன் எங்கிருந்தாலும் தமிழ் என்பது ஒரே தன்மையுடன் பேசப்படுகிறது எழுதப்படுகிறது.

இந்தியாவின் தெற்கில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிப்போன குமரி என்ற கண்டத்தில் நாகரீகத்திலும், அறிவியலிலும், கலைகளையும், வானவியலிலும், விவசாயத்திலும் சிறந்து விளங்கிய இனம் நம் இனம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் மொழியை நன்கு கற்ற அறிஞர்களும்,ஆசிரியர்களும், புலவர்களும், சான்றோர்களும் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, பெரும் பரிபாடல், தொல்காப்பியம், பெருங்கலித் தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபதுபரிபாடல், குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமண, திருத்தொண்டர் புராணம், சிவஞானபோதம் முதலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை இயற்றி அதற்குரிய பொருளை சொல்லும் சிறிய, பெரிய நூல்களையும் இயற்றி வைத்ததின் பயனாகத் தமிழ் இன்றுவரை இளமையாக இருக்கிறது.எந்த மொழி தாக்கத்திற்கும் அடிபணியாது இதுவரை நிமிர்ந்து நிற்கிறது. உலகில் நாம் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒரே பண்புடன், ஒரே சிந்தனையுடன் வாழ்கிறோம்.
 மாயை தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...