சனி, 5 மார்ச், 2016

மேகம் எனும் சொல் எவ்வாறு பிறந்தது?தமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன.

அவை

அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, கங்கைதூவி, கதம்பம், கந்தரம், கமஞ்சூல், கம், கரு, கார், காளிகம், குயின், குயில், கொண்டல், கொண்மூ, சலதம், சீதம், செல், சோனம், தாராதரம், தையல், தோயதரம், நாகம், நீகம், நீரதம், பயோதம், பயோதரம், பரிசன்னியம், பருச்சனியம், பாட்டம், பாரணம், புதம், புயல், பெயல், பே, பேகம், பேசகம், மகாநாதம், மங்குல், மஞ்சு, மாகம், மாசி, மாசு, மாரி, மிகிரம், முகில், முதிரம், மெய்ப்பிரம், வனமுதம், வானம், வான், வாரிதம், வாரிநாதம், வாரிவாகம், வார், விசும்பு, விண், விண்டு, வெள்ளைநோய்

மேகம் என்றால் வானில் தென்படும் நீர்நிறை மண்டலம் என்று பொருள். இந்த நீர்நிறை கூட்டத்திற்கு எப்படி மேகம் என்று பெயர் வைத்தனர் நம் முன்னோர்கள். சரி பார்க்கலாம்.
வானில் திரியும் மேகத்தைக் காணும்போது நமக்கு மனதில் என்ன தோன்றுகிறது. நாம் அதை எப்படி சொல்லுவோம்.

- நுண்ணிய நீர் துளிகளின் கூட்டம் என்று சொல்லலாம்.

அல்லது

- வானில் மிதந்து செல்லும் வெள்ளை நிற கூட்டம் என்று சொல்லலாம்.

அதேதான் மேலே கூறிய இரண்டு பொருளையும் கொண்டு தான் மேகம் என்ற சொல் உருவாகியுள்ளது.

மே - என்றால் மேல் அல்லது மேலே என்று பொருள்.

கம் - என்றால் வெண்மை என்று பொருள் அல்லது நீர் என்று பொருள்.

மேலே திரியும் வெண்மை > மேலே வெண்மை > மேகம்

மேலே இருக்கும் நீர் > மேலே நீர் > மேகம்


பார்த்தீர்களா எவ்வளவு எளிமையாகச் சொல்லை உருவாக்கியுள்ளனர் நமது தமிழர்கள். இது போன்ற சொல்லாக்க நுட்பங்களைத் தற்காலத்திய சொல்லாக்க முறைகளில் பயனபடுத்தினால் நல்ல பல புதிய சொற்களை நாமும் உருவாக்க முடியும்.


இதுதான் தற்காலத்தில் நாம் ஆங்கிலத்தை மொழிப்பெயர்த்து தமிழில் சொற்களை உருவாக்கும் சொல்லாக்க முறைக்கும் அக்காலத்திய சொல்லாக்க முறைக்கும் உள்ள வேறுபாடு.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

இந்தியாவில் படித்தவர்களுக்குப் பற்றாக்குறையா?


Image

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
  • மருத்துவம் படிக்காத அனுபவ மருத்துவரிடம் நமக்கு மருத்துவம் செய்யப் போவோமா? போகமாட்டோம்! - காரணம் அவர் மருத்துவம் கல்லாதவர். அப்படியே அவர் மருத்துவம் செய்தாலும் அது தவறு என்று சொல்வோம்.

  • வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவரை பொறியியல் பணிக்கு ஏற்றுக்கொள்வோமா? என்றால், ஏற்றுக்கொள்ளமாட்டோம். - காரணம் அவர் நீதித்துறைக்கு படித்தவர் பொறியியல் துறைக்கு ஏற்க முடியாது என்போம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா?
நண்பர் ஒருவர் இளங்கலை பட்டம் படித்தவர், நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர். வழக்கம்போல நல்லதொரு வாழ்க்கை துணையை தேடி தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில் பெற்றோர்களுடன் களமிறங்குகிறார்.

பிரீடம் - 251 செல்பேசியும் அதன் விளம்பர உத்தியும்

தற்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தி பிரீடம் - 251 என்ற செல்பேசியும் அதன் விலையும் தான். இந்திய ரூபாயில் 251 அதாவது அமெரிக்க மதிப்பில் சுமார் 3.675 டாலருக்கும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் சாதாரண பர்கர் ஒன்றின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று அலசும்போது இந்த செல்பேசியை தயாரித்து விற்பதாகச் சொல்லிக்கொள்ளும் ரிங்க்பெல்(RingBell) நிறுவனத்தின் விளம்பர உத்தியை உணரமுடிகிறது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இந்தி ஒரு மாசடைந்த மொழி - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வரின் கருத்துஇந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வர் ஒருவரின் கருத்தைப் பாருங்கள். இந்தி என்பது ஒரு மாசடைந்த மொழி இதை வளர்க்க நினைப்பதோ அல்லது பரப்ப நினைப்பதோ கேவலம் என்ற தொனியில் அவரின் பதிவு அமைந்துள்ளது.

Wind - விண்டு என்பது தமிழ் சொல்லேஆங்கிலத்தில் Wind என்பதற்கான பொருள் - Wind is the flow of gases on a large scale, அதாவது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிப்பதாகும்.

துப்பாக்கி மற்றும் பீரங்கி தமிழ்ச்சொற்களேதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.

9-அம் நூற்றாண்டில் வெடிமருந்துகளை கண்டுபிடித்து, மூங்கிலில் செய்யப்பட எடுப்பு துப்பாக்கிகளை (Portable Gun) சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். வெடிமருந்துகள் மற்றும் வெடிகலன் நுட்பங்கள் சுமார் 15-அம் நூற்றாண்டுகள் வாக்கில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். அதாவது போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன். இந்த நுட்பத்தை கொண்டு புணையப்பட்ட பல்வேறு ஆயுதங்களை டெல்லியை ஆண்ட மொகலாய மன்னர்களால் பேரின்போது பயன்படுத்தியுள்ளனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

துப்பாக்கி நுட்பம் என்பது ஒரு தாழறையில் (சிறிய அறை) வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்தை வெடிக்கவைப்பதன் மூலம் ஏற்படும் அழுத்தத்தை ஒரு உலோகக்குண்டின் மீது சடுதியாக (Sudden) செலுத்தும்போது குண்டானது அதிவேகத்தில் வெளியேறி இலக்கைத் தாக்குவதாகும். இதே நுட்பம் தான் பீரங்கியிலும் பயன்படுத்தப்படுகிறது.

துப்பாக்கியில் சராசரியாக 2.5 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைக் குறிபார்த்து சுட முடியும். பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் அளவு பெரியது, இதன் மூலம் சுமார் 30 - 40 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைத் தாக்க முடியும்.
வரலாற்றில் தமிழர்களுக்கு வெடிநுட்பக்கருவிகள் என்பது புதியது. தமிழில் துப்பாக்கி என்ற சொல் துருக்கி மொழியிலிருந்து வந்ததாக சொல்வார்கள், காரணம் துருக்கி மொழியில் துப்பாஞ்சி என்றால் Gun என்று பொருள்.துப்பாக்கி பிறமொழிச்சொல் என்பதால், பீரங்கியையும் தமிழில்லை என்று சொல்வோரும் உண்டு. 

ஆனால் துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகிய இரண்டு சொற்களின் ஒலிப்பின் அடிப்படையில் அதன் வேர்ச்சொற்களை ஆய்ந்து பார்க்கும்போது அவை இயல்பாகவே துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆயுதங்களின் இயங்கு நுட்பத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்களாக உள்ளன. 

எப்படி?

முன்பு கூறியதுபோல துப்பாக்கி நுட்பத்தில் நெருப்புக் குண்டு குறைந்த தொலைவே பயணிக்கும். பீரங்கியில் நெருப்புக்குண்டு நீண்ட தொலைவு பயணிக்கும். இந்த வேறுபாட்டை சொல்லக்கூடிய சொற்களை வேராக இச்சொற்கள் கொண்டுள்ளன.

துப்பு (To Spit - துப்புதல் அல்லது உமிழ்தல்) + அக்கி (Fire - தீ.) = துப்பக்கி > துப்பாக்கி ஆனது. 
அதாவது தீயை (குண்டு) துப்பும் கருவி என்று பொருள். துப்புதலில் ஒரு பொருள் குறைந்தளவு தொலைவே செல்லும். இதேபோலத் துப்பாக்கியிலும் குண்டு குறைந்த தொலைவே பயணிக்கிறது.


பீர் (பீர்ச்சு - Eject பீரிடுதல்-To Stream out) + அங்கி (Fire; நெருப்பு.) = பீரங்கி ஆனது. 
அதாவது தீ (குண்டு) பீரிட்டு வெளியேறும் கருவி என்று பொருள். பீரிடும் ஒரு பொருள் துப்புதலில் பயணிக்கும் தொலைவை விட அதிக தொலைவு பயணிக்கும். இதேபோலத் பீரங்கியில் குண்டு நெடுந்தொலைவு பயணிக்கிறது.

துப்பாக்கி என்பது சொல்லின் ஒலிப்பும் துப்பாஞ்சி என்ற துருக்கி மொழிச் சொல்லின் ஒலிப்பும் ஒன்றுபோல இருப்பதால் அதனடிப்படையில் துருக்கிமொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொல் தான் துப்பாக்கி என்றே வைத்துக்கொண்டாலும், அதன் தமிழ் வேர்ச்சொற்கள் இயல்பாக துப்பாக்கியை குறிப்பதால், ஏன் அவற்றை பிறமொழிச்சொற்கள் என கூறவேண்டும். தமிழ்ச்சொற்களே என கூறலாம்.

Parliament என்ற ஆங்கிலச்சொல்லுக்கு தமிழில் பாராளுமன்றம் என்று பெயர். இதில் இரண்டுமே ஒலிப்பில் ஒரே சொற்கள் போல இருப்பதால் பாராளுமன்றம் என்ற சொல் ஆங்கிலச்சொல் என்று கூறமுடியாது. 

பார் + ஆளும் + மன்றம் என்பதே பாராளுமன்றம் என்றானது.

அதுபோல துப்பாஞ்சி என்ற சொல்லும் துப்பாக்கி என்ற சொல்லும் ஒலிப்பில் ஒன்றுபோல இருப்பதால் துப்பாக்கி என்ற சொல் துருக்கிச்சொல் எனச் சொல்வதும் தவறு.

இனி துப்பாக்கி, பீரங்கி ஆகியச் சொற்கள் தமிழ் என்றே கூறுவோம்.

சனி, 26 டிசம்பர், 2015

தமிழ் ஆங்கிலம் போல ஏற்றம் பெற ஒரேயொரு எளிய வழிஒருவர் ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் பேசினால் தமிழனிடம் சொத்தை எழுதி வாங்கலாம். அதே ஒரு மணிநேரம் ஒரு வெள்ளைக்காரன் பேசினால் தமிழனிடம் மொத்தத்தையும் எழுதி வாங்கலாம். இந்த ஒப்பு எதற்கு என்றால் அந்தளவிற்கு ஆங்கில மோகம் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது.

வியாழன், 9 ஜூலை, 2015

சகரச்சொற்கள் யாவும் வடமொழி சொற்கள் எனும் நம்பிக்கைதொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

இதில் தமிழ் சொற்கள் இவ்வாறு தான் வழங்கப்பட வேண்டுமென்ற ஒரு வ(ழி)ரைமுறை உள்ளது, அதாவது 


க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே

அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29
மேலே உள்ள பாடலுக்கு என்ன பொருள் என்றால், "க, த, ந, ப, ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனால் ச, சை, சௌ - அவ்வாறு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்கென்று பொருள்)"

சனி, 20 ஜூன், 2015

வெங்காயம் என்ற சொல் உருவான விதம்
தமிழ் இலக்கியங்கள் வெங்காயத்தை குதம், நீருள்ளி, பூவண்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.  

இந்த வெங்காயம் என்ற சொல்லை பண்டைய தமிழன் எப்படி உருவாக்கினான் என்பதைப் பார்ப்பதற்கு முன், வெங்காயத்தைக் குறிக்கும் எந்த சொற்களும் தமிழில் இல்லை என வைத்துக்கொள்வோம். வெங்காயம் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் புதிது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போதுள்ள தமிழர்களிடம் இந்தப் பொருளுக்குப் பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பார்கள்? 

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் முயற்சி செய்யுங்கள். 

கண்ணீர் கிழங்கு என்று வைக்கலாமா?
உறி கிழங்கு என்று வைக்கலாமா?

தோல் கிழங்கு என்று வைக்கலாமா?
வேறு என்ன பெயர்கள் வைக்கலாம்?  

மிக மிகக் கடினமான ஒன்று தானே. நாம் இப்படித் தான் தமிழில் பல பொருட்களுக்கு தமிழில் புதிதாக பெயர்களை வைத்து வருகிறோம். இதனால் தமிழ் உயர்வு பெறுகிறது என்று சொல்லிச் சொல்லி தமிழை தாழ்த்தி வருகிறோம். தமிழின் சுவையில் உப்பை அள்ளி கொட்டுகிறோம்.

சரி வெங்காயம் என்ற சொல் எப்படி உருவானது? 

மிகவும் சுலபம். நம்மைப் போலப் படைய தமிழன் மிகவும் கடினப்பட்டு பெயர் வைக்கவில்லை. அதன் பயனை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைத்துள்ளான்.

எப்படி? 

வெங்காயம் உடம்பில் உள்ள சூட்டை தணிப்பதில் எல்லாக் காய்கறி வகைகளிலும் முதன்மை வைக்கிறது. 

சூடு என்பதற்கு காயம் (Heat) என்ற இன்னொரு பெயர் உண்டு. 

அதேபோல் வென்(அ) வெண் என்றால் வெல்லுதல் (Victory) என்ற பொருள்.

வென் + காயம் = வென்காயம் (அ) வெண்காயம் > வெங்காயம் சூட்டை வெல்லும் இந்தப் பொருளுக்கு வெங்காயம் என்ற பெயர் வைக்கப்பட்டது. 

இது தான் தற்காலச் சொல்லாக்க முறைக்கும் அக்காலச் சொல்லாக்க முறைக்கும் உள்ள மிகபெரிய வேறுபாடு.