வியாழன், 25 பிப்ரவரி, 2016

இந்தியாவில் படித்தவர்களுக்குப் பற்றாக்குறையா?


Image

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்




  • மருத்துவம் படிக்காத அனுபவ மருத்துவரிடம் நமக்கு மருத்துவம் செய்யப் போவோமா? போகமாட்டோம்! - காரணம் அவர் மருத்துவம் கல்லாதவர். அப்படியே அவர் மருத்துவம் செய்தாலும் அது தவறு என்று சொல்வோம்.

  • வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவரை பொறியியல் பணிக்கு ஏற்றுக்கொள்வோமா? என்றால், ஏற்றுக்கொள்ளமாட்டோம். - காரணம் அவர் நீதித்துறைக்கு படித்தவர் பொறியியல் துறைக்கு ஏற்க முடியாது என்போம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா?




நண்பர் ஒருவர் இளங்கலை பட்டம் படித்தவர், நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர். வழக்கம்போல நல்லதொரு வாழ்க்கை துணையை தேடி தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில் பெற்றோர்களுடன் களமிறங்குகிறார்.

பிரீடம் - 251 செல்பேசியும் அதன் விளம்பர உத்தியும்





தற்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தி பிரீடம் - 251 என்ற செல்பேசியும் அதன் விலையும் தான். இந்திய ரூபாயில் 251 அதாவது அமெரிக்க மதிப்பில் சுமார் 3.675 டாலருக்கும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் சாதாரண பர்கர் ஒன்றின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று அலசும்போது இந்த செல்பேசியை தயாரித்து விற்பதாகச் சொல்லிக்கொள்ளும் ரிங்க்பெல்(RingBell) நிறுவனத்தின் விளம்பர உத்தியை உணரமுடிகிறது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இந்தி ஒரு மாசடைந்த மொழி - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வரின் கருத்து



இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வர் ஒருவரின் கருத்தைப் பாருங்கள். இந்தி என்பது ஒரு மாசடைந்த மொழி இதை வளர்க்க நினைப்பதோ அல்லது பரப்ப நினைப்பதோ கேவலம் என்ற தொனியில் அவரின் பதிவு அமைந்துள்ளது.

Wind - விண்டு என்பது தமிழ் சொல்லே



ஆங்கிலத்தில் Wind என்பதற்கான பொருள் - Wind is the flow of gases on a large scale, அதாவது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிப்பதாகும்.

துப்பாக்கி மற்றும் பீரங்கி தமிழ்ச்சொற்களே



துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.

சனி, 26 டிசம்பர், 2015

தமிழ் ஆங்கிலம் போல ஏற்றம் பெற ஒரேயொரு எளிய வழி



ஒருவர் ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் பேசினால் தமிழனிடம் சொத்தை எழுதி வாங்கலாம். அதே ஒரு மணிநேரம் ஒரு வெள்ளைக்காரன் பேசினால் தமிழனிடம் மொத்தத்தையும் எழுதி வாங்கலாம். இந்த ஒப்பு எதற்கு என்றால் அந்தளவிற்கு ஆங்கில மோகம் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது.

வியாழன், 9 ஜூலை, 2015

சகரச்சொற்கள் யாவும் வடமொழி சொற்கள் எனும் நம்பிக்கை



தொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

இதில் தமிழ் சொற்கள் இவ்வாறு தான் வழங்கப்பட வேண்டுமென்ற ஒரு வ(ழி)ரைமுறை உள்ளது, அதாவது 


க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே

அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29
மேலே உள்ள பாடலுக்கு என்ன பொருள் என்றால், "க, த, ந, ப, ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனால் ச, சை, சௌ - அவ்வாறு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்கென்று பொருள்)"

சனி, 20 ஜூன், 2015

வெங்காயம் என்ற சொல் உருவான விதம்




தமிழ் இலக்கியங்கள் வெங்காயத்தை குதம், நீருள்ளி, பூவண்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.  

இந்த வெங்காயம் என்ற சொல்லை பண்டைய தமிழன் எப்படி உருவாக்கினான் என்பதைப் பார்ப்பதற்கு முன், வெங்காயத்தைக் குறிக்கும் எந்த சொற்களும் தமிழில் இல்லை என வைத்துக்கொள்வோம். வெங்காயம் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் புதிது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போதுள்ள தமிழர்களிடம் இந்தப் பொருளுக்குப் பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பார்கள்? 

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் முயற்சி செய்யுங்கள். 

கண்ணீர் கிழங்கு என்று வைக்கலாமா?
உறி கிழங்கு என்று வைக்கலாமா?

தோல் கிழங்கு என்று வைக்கலாமா?
வேறு என்ன பெயர்கள் வைக்கலாம்?  

மிக மிகக் கடினமான ஒன்று தானே. நாம் இப்படித் தான் தமிழில் பல பொருட்களுக்கு தமிழில் புதிதாக பெயர்களை வைத்து வருகிறோம். இதனால் தமிழ் உயர்வு பெறுகிறது என்று சொல்லிச் சொல்லி தமிழை தாழ்த்தி வருகிறோம். தமிழின் சுவையில் உப்பை அள்ளி கொட்டுகிறோம்.

சரி வெங்காயம் என்ற சொல் எப்படி உருவானது? 

மிகவும் சுலபம். நம்மைப் போலப் படைய தமிழன் மிகவும் கடினப்பட்டு பெயர் வைக்கவில்லை. அதன் பயனை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைத்துள்ளான்.

எப்படி? 

வெங்காயம் உடம்பில் உள்ள சூட்டை தணிப்பதில் எல்லாக் காய்கறி வகைகளிலும் முதன்மை வைக்கிறது. 

சூடு என்பதற்கு காயம் (Heat) என்ற இன்னொரு பெயர் உண்டு. 

அதேபோல் வென்(அ) வெண் என்றால் வெல்லுதல் (Victory) என்ற பொருள்.

வென் + காயம் = வென்காயம் (அ) வெண்காயம் > வெங்காயம் சூட்டை வெல்லும் இந்தப் பொருளுக்கு வெங்காயம் என்ற பெயர் வைக்கப்பட்டது. 

இது தான் தற்காலச் சொல்லாக்க முறைக்கும் அக்காலச் சொல்லாக்க முறைக்கும் உள்ள மிகபெரிய வேறுபாடு.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தெரியாத மொழியில் இணையத்தேடல் செய்து பார்க்க, படிக்க முடியுமா? (மொழி ஒரு பொருட்டல்ல)

 நாம் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே இணையத்தில் விவரங்களைத் தேடுகிறோம்(Search) ,பார்க்கிறோம்(Show) , படிக்கிறோம் (Read) மற்றும் பின்னூட்டம்(Comments) செய்கிறோம். பெரும்பாலும் தமிழ் அல்லது ஆங்கில மொழியைத் தான் இணையத்தில் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் உள்ள தரவுகளை மட்டுமே மொழிப்பெயர்ப்புச் செய்து தமிழில் உலவ விடுகிறோம். மற்ற மொழிகளில் உள்ள தரவுகள் யாவும் நமக்கு இரவுகள் போன்றது தான்.



தமிழ் மொழி இயற்கையாகவே இலக்கியச் செறிவு மிகுந்தது. இணையத்தமிழில் இலக்கியம், கவிதைகள், மொழியாய்வுகள், நாட்டு நடப்புகள், திரைப்படச் செய்திகள், வாழ்க்கை சிந்தனைகள் மற்றும் யோசனைகள், நாட்டு மருத்துவம், சமூகப் பார்வை, போராட்டங்கள் , கேளிக்கை, அரட்டை என்று குறிப்பிடும்படியான வகைகளில் மட்டுமே செய்திகள்(அ) தரவுகள் கிடைக்கின்றன. தமிழில் அறிவியல், நுட்பியல்(Technology), கண்டுபிடிப்புகள், கணினி, மருத்துவம் தொடர்பான தரவுகள் மிக மிகக் குறைவு.

திங்கள், 7 ஜூலை, 2014

கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility

இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ்  ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.

செவ்வாய், 24 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (இறுதி பாகம்)

சென்ற இரண்டு பதிவுகளில் இந்தி மொழியின் வரலாறு அதன் தோற்றம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இந்தி மொழியில் நூல்கள் பிறந்த வரலாறு, இந்தி பற்றி நடுவண் அரசு பரப்பும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் பார்ப்போம்.

இந்தியில் நூல்கள்
இப்படிப்பட்ட கலவை மொழி இந்தியில் எவ்வாறு நூல்கள் இயற்றப்பட்டது என்ற வரலாற்றை பார்ப்போம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'இராமனந்தர்' எனும் துறவி இராமனை மக்கள் வழிபடவேண்டும் என வடநாட்டின் பல பகுதிகளில் பரப்புரை செய்து அப்பகுதிகளில் இராமன் புகழை பரவச்செய்தார். கல்வியறிவு இல்லாத அம்மக்களுக்கு இராமன் தன் தந்தை இட்ட கட்டளையால் அரசு துறந்து, கானகம் சென்று அங்கு தன் மனைவியை இழந்து அடைத்த துயரம், அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. இந்த மனவேதனையே இராமன் புகழ் அப்பகுதிகளில் வேகமாக பரவ காரணமாக அமைந்தது. மேலும் இராமனந்தர் அப்பகுதி மக்கள் பேசும் மொழி வழியாக இராமன் நாமத்தை பரப்பும் பொருட்டு இராமனை பற்றி எழுதிய நூல் தான் இந்தி மொழியில் இயற்றப்பட்ட முதல் நூல். அந்நூலின் பெயர் 'ஆதிகிரந்தம்' என அழைக்கப்படுகிறது.

வெள்ளி, 20 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -2)


இதுவரை உருது எனும் மொழி உருவான வரலாற்றை சிறிது பார்த்தோம். இந்தியை பற்றி சொல்வதாக நினைத்தால் என்ன இது உருதை பற்றி சொல்கிறேன் என எண்ணவேண்டாம், விசயம் இருக்கிறது. இந்த உருதுமொழியில் இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, 'ல்ல்லு ஜிலால்' என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப் பிரித்துச் சீர் செய்யப்பட்ட மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில் சம்ஸ்கிருத சொற்களை இணைத்து இந்தி எனும் புதிய மொழியொன்றை தோற்றுவித்தார். இதனால் இந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது. வடமொழிச்சொற்களை சேர்த்துக்கொணடதால் இந்தி வடமொழியில் இருந்து உருவானது என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர். இந்தி எனும் மொழி உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி. உண்மையில் இந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும், பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி எவ்வாறு நம்நாட்டு மொழியாகும். இதனுடைய வயது வெறும் 830 ஆண்டுகள் தான். மேலும் இந்தி இந்துக்களின் சமயமொழி போல் சித்தரிக்கப்படுவது நமக்கு நகைப்பை தான் வரவழைக்கிறது. மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய இந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதிற்க்கும் இந்தி மொழிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு மொழிகளுக்கு ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது இந்தியில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்து முறை 'தேவநகரி', உருது மொழியில் எழுத பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.

வியாழன், 19 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -1)


நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு பொய்யை முதல் முறையாக கேட்கும் போது அது பொய் என்பதை நாம் அடித்து சொல்லுவோம். அதே பொய்யை நம் காதில் அடிக்கடி விழும்படி யாரேனும் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒருநாள் நாம் அந்த பொய்யை உண்மையென சொல்லுவோம். இதே உத்தியை தான் மைய அரசு இந்தி திணிப்பு விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது. ஆரம்பத்தில் மைய அரசு இந்தியை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் பயிலவேண்டும் என சொன்னபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு, போராட்டம் போன்றவை பார்த்து அரசு பணிந்து தனது இந்தி திணிப்பு பாதையை மாற்றிகொண்டது. அதாவது நான் மேலே சொன்னது போல் ஒரு இந்தி விசயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது என்றாவது ஒரு நாள் நாம் சொல்லும் விசயத்தை தமிழ்நாடு நிச்சயம் கேட்கும் என நம்பிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இந்தி தேசிய மொழி, படித்தால் உலகத்தை சுற்றலாம், இந்தியாவை சுற்றலாம், வேலைகிடைக்கும் என  பொய் பரப்புரையை பலமாக நம் காதில் சொல்லி சொல்லியே இப்போது வெற்றியும் கண்டுள்ளது. 'எறும்பு ஊர கல்லும் தேயும்' எனும் பொன்மொழி இந்தி விசயத்தில் உண்மையென நிருபிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 ஜூன், 2014

நீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களையும் உசாரா இருக்க சொல்லுங்க!


Image

"ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகாரர்களுக்கு இருக்கத்தான் செய்வார்கள்" என்பதை போல மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்கென்றே திருடர் கூட்டம் ஒன்று தமிழ் நாட்டின் பல இடங்களில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பேசுவதை கேட்டால் குறிப்பாக இளைஞர்களும், சிறுவர்களும், இல்லாத்தரசிகளும், படிக்காத பாமர மக்களும் ஏமாறுவது உறுதி.

ஞாயிறு, 8 ஜூன், 2014

ரெண்டுங்கெட்டான் நிலையில் தமிழன்



திருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டு வந்தனர். அதை நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஒருவர் அவருடைய நண்பரிடம் கேட்கிறார்....

"பாஸு  ஓட்டல்களில் ஏன் சாப்பாட்டை ஒழுங்க வேக வைக்காம அரிசி அரிசியா போடுறாங்க தெரியுமா?" என்றார்.

செவ்வாய், 27 மே, 2014

உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]

Image

சென்ற இடுகையில் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுருக்களை இணைப்பது என்ற செய்முறையில் .post-body என்ற div ன் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்த்தோம்.

.post-body {
line-height: 1.4;
font-size: 110%;
position: relative;
font-family:DroidSansReg,Arial;
}


இனி மற்ற DIV களில் உள்ள எழுத்துருக்களை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம். அதற்கு முன் பூச்சரம் பகிரும் CSS கோப்பில் என்னென்ன எழுத்துருக்கள் உள்ளன அவற்றின் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் HTML நிரலை மேலும் எடுவு(Edit) செய்ய எளிமையாக இருக்கும்.

புதன், 14 மே, 2014

உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]

உங்களுடைய தமிழ் பிளாக்ஸ்பாட்(Blogspot) தளங்களில் பல்வேறு வகையில் பதிவுகளை அழகுப்படுத்தி நல்ல புதுமையான கருத்துகளுடன் வெளியிட்டாலும், உங்களுக்கு மனதில் பதிவை பற்றி எப்போதும் ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதுதான் தமிழ் எழுத்துரு பிரச்சனை. ஆங்கிலப் பதிவுகள் போல் பல வடிவ எழுத்துருக்களைப் பயன்படுத்தி அழகாகப் பதிவு போட முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. படம்- 1 ல் இருப்பது தமிழ் எழுத்துரு, படம்-2 ல் இருப்பது ஆங்கில எழுத்துரு.


Zoom in (real dimensions: 642 x 226)
படம்-1

சனி, 10 மே, 2014

குடிகாரர்களாக வளர்ந்து வளரும் மாணவ சமூதாயம்


குடி இன்று நம்முடைய சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் மோசமான பழக்கம். அக்காலங்களில் குடிப்பவர்களை குடிகாரன் என்றும் அவர்களின் குடும்பங்களை குடிகார குடும்பம் என்று அழைத்தது நம் சமூகம். அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஊரிலிருந்து விளக்கி வைக்கப்பட்டவர்களைப் போன்று கேவலமாக பார்த்ததும் அதே சமூகம் தான். சமூகத்தின் பார்வைக்கு பயந்தே பலரும் குடி என்பது நம் சுய மரியாதையையும், குடும்ப மரியாதையும் கெடுத்துவிடுமென்று கட்டுகோப்பாக இருந்த சில காலங்களும் உண்டு.

வெள்ளி, 28 மார்ச், 2014

ஜப்பானிய மொழியில் ஹி-வாத்ரி (Hi-watari) என்றால் என்ன தெரியுமா?


ஜப்பானில்தமிழ்நாட்டில்
Image
Image

火災 - Hi என்றால் என்ன தெரியுமா? ஜப்பானிய மொழியில் ஹி(Hi) என்றால் தீ என்று பொருள். நம் தமிழில் இருந்து சென்ற சொல்.

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிகப் பெரிய அளவில் தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கணமும் ஜப்பான் மொழி இலக்கணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத் தோன்றுகிறது. ஏராளமான தமிழ் மொழி சொற்கள் ஜப்பானிய மொழியில் சேர்ந்துள்ளன. ஆங்கிலம் போல் நம்மவருக்கு ஜப்பான் மொழி தெரிந்திருந்தால் இந்நேரம் ஜப்பான் மொழியில் கலந்துள்ள நம் தமிழ் சொற்களைப் பலரும் பட்டியலிட்டு இருப்பார்கள்.

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...